கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 10

கிருஷ்ணர் : பரவாயில்லை மேகலா… பிள்ளைகள் தங்களுக்கான நேரத்தை, வெட்டியில் பொழுது போக்காமல், தைப்பதும், வரைவதும் என்று இப்போ புள்ளி வைத்துச் செல்கிறார்கள். இது அழகான வண்ணக் கோலமாக வாழ்த்துகிறேன் மேகலா…. ஏன் மேகலா…., தையலுக்கும், அது சார்ந்த மற்ற embroidery என்று பிற வேலைகளுக்கும், தனியார் institute இல்லாமல் கல்லூரியில் course இருக்கிறதா மேகலா….

மேகலா : Oh! இருக்கு கிருஷ்ணா….. Fashion Technology course…., ஷீத்தல் college படிக்கும் போதே இந்த subject கல்லூரியில் உண்டு கிருஷ்ணா…. ஆனால், அந்த சமயத்தில், Sheethal-க்கு இந்த course-ல் seat கிடைக்கவில்லை…. இந்த course-ல் ஆடை வடிவமைப்பு, designs, interior decoration என்று அழகை வெளிப்படுத்தும் unique management என்று அனைத்தும் கற்றுத் தருகிறார்கள் கிருஷ்ணா… இந்த course படிப்பவர்களுக்கு, பெருசா mathematics knowledge இருக்கணும்கிறது அவசியமில்லை. ஆனால், புதுசா ஏதாவது designs பார்த்தால், உடனே அதை வரைந்து வைத்துக் கொள்ளுமளவுக்கு தெரியணும் என்று இந்த course பற்றின idea-க்களை Google-ல் படித்தேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : கையில் ’model’ இருந்தால், கலைஞர்கள் அதைப் பார்த்துத் தைத்து விடுவார்கள். கையில் model இல்லாத புதுசா ஒரு design-ஐப் பார்த்தவுடன், வரைந்துதானே வைத்துக் கொள்ள வேண்டும்… ஒன்று நீ கவனித்தாயா மேகலா…. இந்த மாதிரி creative-ஆன subject-ல interest இருப்பவர்களுக்கு, எந்த இடத்திலும், எந்தக் காட்சியையும், அவர்கள் உள்ளுணர்வு miss பண்ணவே பண்ணாது…. சிலர், தன் மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்வார்கள்… இதையும் தாண்டி, சிலர் வரைந்தும் வைத்துக் கொள்வார்கள்….

மேகலா : நீ சொல்லுவது நூத்துக்கு நூறு உண்மை கிருஷ்ணா…. இந்த fashion designing என்று சொல்வதில் எனக்கு ஒரு ஆர்வம் வருது கிருஷ்ணா…. ‘Fashion’ என்றாலே, அந்த நேரத்து trend என்னவோ, அதை highlight பண்ணுவதுதானே…. நான், college-ல் படிக்கும் போது, ஓவியர் ஜெயராஜ், modern பொண்ணை, தலையில் scarf கட்டி வரைந்தார்…. அந்த நேரத்தில் அது செம trend ஆச்சு…. உடனே நாங்க நிறையப் பேர் ஒரு சின்ன டவலை சடையில் கட்டி, லூசாக தொங்க விட்டோம்…. இப்படித்தான் fashion பரவுவதாக நாங்கள் நம்பினோம்…. இப்போ, fashion-ஐ design பண்ணுகிறார்கள் என்றால், அது எப்படி என்று ஆர்வமாக இருக்கு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஒரு வேளை, jeans pant அணிவது fashion….. அதைக் கிழித்து விட்டால், fashion design-ஓ…..

மேகலா : கிருஷ்ணா…., ‘நச்சுனு’ சொல்லிட்ட கிருஷ்ணா…. பொதுவா, fashion ஆக இருந்தாக் கூட, எல்லோரும் அணிவதையே நாமளும் follow பண்ணுவது நமக்கு bore அடிக்கலாம்…. எல்லாருடைய கவனம் நம்ம மீது விழணும்… அப்படின்னா…., fashion-ஐயே design பண்ணிரலாம்…. இன்றைக்கு, cinema celebrities எல்லாரும், ஒரு functon-க்கு வருவதுனா கூட, fashion designer, design பண்ணிக் கொடுக்கிற dress மட்டுமல்ல கிருஷ்ணா…., hairstyle, accessories கூட, அவர்கள் idea படி அணிகிறார்கள். ஏன்னா, மேடையில் ஏறும் போது, எல்லோருடைய கண்களும், அவர்களுடைய அலங்காரத்தையே ரசிக்க வேண்டும் என்பதுதான்….

கிருஷ்ணர் : Oh! கைத்தொழில் கற்றுக் கொள்ளும் போது, மாத்தி யோசிக்கும் திறனையும், புதுமையான சிந்தனையையும் கற்றுக் கொண்டால், சிறந்த fashion designer ஆகலாம்….

மேகலா : Yessss…. கிருஷ்ணா… இந்தக் கைவேலையின் மகத்துவம் தெரிந்தவர்கள், என்னவெல்லாம் ‘magic’ செய்கிறார்கள் தெரியுமா கிருஷ்ணா…. என்னோட தம்பி wife-க்கு tailoring, embroidery-யெல்லாம் அவ்வளவாக…, ஏன் சுத்தமாகத் தெரியாது. ஆனால், ஒரு get-together-க்கு, ஒரு saree கட்டி வந்திருந்தாள். அந்த saree-யில் embroidery work மாதிரியே, பூ design வரைந்து painting பண்ணியிருந்தாள் கிருஷ்ணா. அந்த painting-க்கு match ஆக, அதே பூ design வரைந்த, ‘pendant’ ஒன்று ‘டெரகோட்டா’ என்று சொல்லப்படும் art work-ல் செய்திருந்தாள். சொல்லப் போனால், கழுத்தில் அணியும் மாலை, டெரகோட்டா களிமண்ணில் செய்து, வர்ணம் பூசி, அதற்கு match ஆக கம்மலும் செய்து அணிந்து கொண்டு வந்திருந்தாள் கிருஷ்ணா…. ரொம்பப் பெருமையுடன், ‘அண்ணி, இந்த சேலைக்கு நான் paint பண்ணியது… இந்த accessories-ம் நானே செய்தது அண்ணி’ என்றதும், அது என் பார்வைக்கு, வைர மாலையை விட அதிகமாய் ஜொலித்தது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நம் கையால், நாமே செய்து, அதை ஆசையாய் பயன்படுத்தும் போது, சந்தோஷம் பல மடங்காகி விடும்…. ஆமாம், டெரகோட்டா களிமண்ணில், பொம்மைகள்தானே செய்வார்கள்…? இப்படியும் செய்யலாமா….?

மேகலா : செய்யிறாங்க கிருஷ்ணா…. இன்றைய தலைமுறையினர், தங்கள் dress-க்குத் தகுந்த fashion நகைகளைத் தானே செய்கிறார்கள் கிருஷ்ணா…. மேகலாவோட இன்னொரு திறமையைப் பற்றி உன்னிடம் சொல்லியே ஆகணும்… ‘ரங்கோலி’யாகட்டும்…, அவள் வீட்டு garden இலைகளை வைத்தே ‘இகபனா’ என்று சொல்லும் art work வடிவமைப்பதாகட்டும்…., drawing ஆகட்டும்…, மிகுந்த அழகுணர்ச்சி, கலைநயம் என்று எந்த ஆங்கிளில் பார்த்தாலும், நம்மை ஆச்சர்யப்படுத்தும் கிருஷ்ணா…. அத்தனை கைத்திறமை இருக்கு….

கிருஷ்ணர் : ஓஹ்ஹோ… யார்கிட்ட எந்தத் திறமை ஒளிந்திருக்கிறது என்றே தெரியவில்லை. Very good மேகலா…. ரங்கோலி, கோலம் என்றாலே, கொஞ்சம் கூடத் தயக்கமேயில்லாமல், புள்ளி வைத்து, நெளி நெளியாய் வளைவுக் கோடுகளால் கோலம் வரைந்து, வண்ணப் பொடிகளால் மேலும் அழகுபடுத்தும் பெண்களால் மட்டுமே வீட்டையும், நாட்டையும் லட்சுமிகரமாக்க முடியும்… ரங்கோலி, கோலம், நம்ம பாரத நாட்டிற்கு மட்டுமே சொந்தமாகும்…. அதிலும், குறிப்பாக பெண்கள் மட்டுமே கொண்டாடும் அற்புதமான கலை….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1