Maturity - பாகம் 4

மேகலா : சமையலில், என் அனுபவம் எனக்கு, கண் பார்க்க, மனசு கற்றுக் கொண்டது. தினசரி பயிற்சியினால், முதல் தடவை செய்து காட்டும் பொழுதும் தவறில்லாமல் செய்ய முடிந்தது கிருஷ்ணா…. இந்த அனுபவத்தை உன்னிடம் பகிர்ந்து கொள்ளும் பொழுதுதான், நம் அனுபவம், பக்குவம், நம்முடைய தன்னம்பிக்கை, தினசரி பயிற்சி…, நாம் இதுவரை செய்யாத ஒரு செய்முறையைக் கூட, தவறில்லாமல் நம்மை செய்ய வைக்கிறது என்ற சூட்சுமம் புரிகிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : உனக்கு சமையலில் வந்திருக்கும் இந்த பக்குவத்தை, உன் அனுபவம் கொடுத்திருக்கிறது. தினசரிப் பயிற்சி, புரிந்து கொள்ளும் திறமையைக் கொடுத்திருக்கிறது. அதனால் தான், instant ஆக ஒரு dish-ஐ செய்து காட்ட முடிகிறது…

மேகலா : நீ சொன்னாயே கிருஷ்ணா…, maturity உள்ளவர்கள், தெரியாததைத் தெரியாது என்று சொல்வதில் எந்தத் தயக்கமும் கொள்ள மாட்டார்கள் என்று. நாங்க, புதுசா ஒரு dish செய்து காட்டும் போது…, ’எங்களுக்கும் இது புதுசுதான்…, நேற்றுதான் road side-ல் நின்று வேடிக்கை பார்த்து செய்து பழகினோம்’ என்று சொல்லித்தான் செய்யவே ஆரம்பிப்போம் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : உனக்கு ஒண்ணு தெரியுமா…. சில விஷயங்களில், அடுத்தவருக்கு சொல்லிக் கொடுக்கும் பொறுப்பில் உள்ளவர்கள், கற்றுக் கொடுக்கும் முன்பு, தான் ஒரு முறை ஒரு ‘glance’ படிக்காமல் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள்…. அதாவது, பெரும்பாலும் ஆசிரியர் தொழிலில் இருப்பவர்கள், அன்று எடுக்கப் போகும் பாடத்தை, எத்தனையோ முறை, எத்தனையோ மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாகவே இருந்தாலும், வகுப்புக்கு வரும் முன் ஒரு reading பண்ணிட்டுதான் வகுப்பை ஆரம்பிக்க வருவார்கள். பாடம் மறந்து போனது என்பதில்லை இதன் காரணம்… ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும், ஒரு புதிய தெளிவு அவர்களுக்குக் கிடைக்கலாம்…. Current news, மாணவர்களின் கேள்வி…, இதன் மூலம் இன்னும் சிறப்பாகக் கற்றுக் கொடுப்பார்கள். சில ஆசிரியர்களின் கற்றுக் கொடுக்கும் முறை – இப்படி இருக்கலாம்…. முதலில் வகுப்பிற்குள் வந்ததும், பாடத்தை விட்டு விட்டு, பொதுவாக, அன்றைய செய்திகளையோ, நகைச்சுவையோ, அல்லது அன்றைய பாடத்தின் தகவல்களை கதை போலவோ சொல்லி, மாணவர்களை கலகலப்பாக்குவார்கள்…. சரி, இப்போ பாடத்தைப் படிக்கலாமா…, என்று கேட்டு, தன் teaching-ஐ ஆரம்பிப்பார்கள். இது அறிவைக் கற்றுக் கொடுக்கும் திறனில் அவர்கள் அடைந்திருக்கும் maturity. இந்த மாதிரி ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தில் ஏறக்குறைய எல்லா மாணவர்களுமே சிறப்பாகப் படிப்பார்கள் என்பது என்னோட கணிப்பு… அறிவின் பக்குவம் இன்னொருவருக்கும் சுலபமாக கற்கும் அறிவைக் கொடுக்க வல்லது…..

மேகலா : நீ சொல்லும் போது தான் எனக்கு, எங்க பாரதமணி teacher ஞாபகத்திற்கு வருகிறார் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : யார் பாரதமணி teacher. நீ இதுவரை என்னிடம் சொல்லவேயில்லையே….

மேகலா : எங்க school 10th Std பாரதமணி teacher… Maths teacher கிருஷ்ணா…. நான் படிக்கும் போது, கணக்கு என்றாலே எனக்கு வேப்பங்காயா கசக்கும் கிருஷ்ணா… ஆனால், எங்க பாரதமணி teacher, class-க்கு வந்ததும், table முன்னாடி நின்று, கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டு, அன்று படிக்கப் போகும் கணக்கைப் பற்றி கதை சொல்ல ஆரம்பித்து, புரியாமல் முழிக்கும் என்னைக் கூட புரிய வைத்து விடுவார் கிருஷ்ணா…. Maths class, jolly-யா இருக்கும் என்று நான் சொன்னால், நீ நம்புறயா கிருஷ்ணா…. என்னோட சோதனைக்காலம், அவங்க வீட்டுக்காரர், பணிமாற்றத்தில் வேறு ஊருக்குப் போனதால், அவர்களும் சென்று விட்டார்கள்… நானும், கணக்கு என்றாலே, காத தூரம் ஓடுபவளாகி விட்டேன். நீ சொன்னது correct தான் கிருஷ்ணா… அறிவின் பக்குவம் இன்னொருவரையும் அறிவுள்ளவனாக்கும்…. Super கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நீ இன்னொன்றையும் கவனித்தாயா மேகலா…. தனக்கு மிகவும் தெரிந்த பாடம் என்றாலும், அதை இன்னும் ஒரு முறை நிதானமாக படித்து விட்டு ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் பக்குவம்… ‘இது கடவுள் கொடுத்த வரம்’ என்றே நினைக்கிறேன்… இப்படி, நிதானமாக, தெளிவாக…, பாடங்களைக் கற்றுக் கொடுக்கும் போது, மாணவர்களுக்கு எத்தனை காலமானாலும் அந்தப் பாடங்கள் நினைவில் தங்கி விடுமே….

மேகலா : Very true கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஏன் மேகலா…. Maturity உள்ளவர்களின் முகத்தை நீ பார்த்திருக்கிறாயா… ஒரு விஷயத்தை கிரகிக்கும் போது…, அவர்கள் எப்படி react பண்ணுவார்கள் தெரியுமா…

மேகலா : கிருஷ்ணா… நீ என் குரு… நீயே சொல்லேன் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : நீ புராணங்களில் படித்திருக்கிறாயா… யாராவது ஒரு அசுரனை வதம் செய்யும் போது…, அங்குள்ள மகரிஷிகள்…, ‘நல்லது நடந்தது….., நல்லது நடந்தது’… என்று மங்களகரமாகச் சொல்லுவார்கள்… அல்லது, ஒரு விபரீதம் நடக்கும் போது…, ‘நல்லது நடக்கட்டும்…, நல்லது நடக்கட்டும்’… என்று வாழ்த்துவார்கள்…. ஒரு செயலின் போக்கினை…, இது இப்படித்தான் நடக்கும்…, நடக்க வேண்டும் என்று அறிந்தவர்கள்…, முதலில், மங்களகரமான வார்த்தைகளைச் சொல்லி, அந்தச் செயல் நடந்ததற்கான காரணம் எதுவானாலும் ஏற்றுக் கொள்ளும் தயார் நிலைக்கு வருவார்கள். இப்பவும், இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும் போது…, ஏதாவது accident-ஓ, அல்லது துயரச் அம்பவமோ நடந்தால், அதன் பின் விளையக் கூடிய விளைவுகளை ஏற்றுக் கொள்ளத் தயாராகி விடுவார்கள்… ’நடந்தது, நடந்து விட்டது…, இனி, ஆக வேண்டியதைப் பார்ப்போம்’ என்று சொல்வார்கள்…. அப்போதுதான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்கும் தைரியம் அவர்களுக்கு வரும். இந்த நிகழ்வினால், அவர்கள் இடிஞ்சி போய் இருப்பதில்லை. அதற்காக.., சரி…, நம்ம வேலயைப் பார்ப்போம் என்றும் மெத்தனமாக இருப்பதில்லை… பக்குவப்பட்டவர்களால் மட்டுமே, பாதிக்கப்பட்டவர்களை தைரியப்படுத்த முடியும். அப்போ அவர்கள் முகத்தில் தெரியும் நிதானம்…, தெளிவு…, மன உறுதி…, எல்லாமே தெரியும் பார்… அவர்கள்தான் matured person…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1