Maturity - பாகம் 6
மேகலா : அப்போ…, maturity வருவதற்கு, காரண காரியங்களை அலசி ஆராய வேண்டும் என்பது ரொம்ப முக்கியம்…. அப்படித்தானே கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Of course, yes…. நாட்டு நடப்போ…, அரசியல் மாற்றங்களோ…, தீவிரவாதத் தாக்குதலோ…, எதுவாக இருந்தாலும்…, கண்மூடித்தனமாக, இன்னார்தான் செய்திருப்பார்கள் என்று கொஞ்சமும் யோசிக்காமல் பேசுவதால், பிரச்னையின் வீரியம் பெரிதாகுமே தவிர, செயலின் விளைவு நன்மையில் முடியப் போவதில்லை… அதே சமயம், இந்த விஷயங்களில் சம்பந்தப்படாத சாதாரண மக்கள் கூட, மிகப் பெரிய செயல்களின் விளைவுகளை, உண்மையை ஆராய்ந்து தெளிவு கொண்டால்…, at least குழப்பங்களாவது குறையும் அல்லவா….
மேகலா : So…, பொது விஷயங்களில், நாம maturity-யாக இருப்பது நாட்டுக்கு நல்லது…, அப்படித்தானே கிருஷ்ணா….
கிருஷ்ணர் : பரவாயில்லையே…, நச்சுனு சொல்லிட்டயே… உனக்கே தெரியும்…, நாட்டுப் பிரச்னையோ…, வீட்டுப் பிரச்னையோ…, தெளிவாக சிந்திக்கக் கூடியவர்களால் மட்டுமே, சுமுகமாக முடிவு எடுக்க முடியும்… தெளிவான சிந்தனையும்…, நிதானமான நடவடிக்கையும் இல்லாதவர்கள் கையில் பூமாலை இருந்தால் என்ன கதியாகும்… கொஞ்சம் யோசிச்சுப் பார்….
மேகலா : ஒரு பாட்டு சொல்லட்டா கிருஷ்ணா….
“நந்தவனத்திலே ஒரு ஆண்டி
அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”
கிருஷ்ணர் : பொதுவாக, வாழ்க்கையில் im-matured person கையில் ஒரு செயல் கொடுக்கப்பட்டால், கதை இப்படித்தான் இருக்கும்…. சரியான பாட்டுதான் நீ பாடியுள்ளாய்… ஒரு நல்ல செயல் மட்டுமல்ல மேகலா…, நாட்டில் நடக்கும் பல விஷயங்களை மனம் போனபடி விமர்சனம் பண்ணுவதும்…, அதனால் ஏற்படும் குழப்பங்களும்…, immaturity-யின் அடையாளம்…. இந்த im-matured person கிட்ட ஒரு சுவாரஸ்யமான character ஒண்ணு இருக்கு… அது என்னன்னு தெரியுமா….?
மேகலா : சுவாரஸ்யமான குணமா…, அது என்ன கிருஷ்ணா….
கிருஷ்ணர் : பக்குவப்பட்டவர்கள்…, திறமைசாலிகள்…, தான் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்டறிந்து, அதை நிதானமாக யோசித்து, திறம்பட செய்து முடிச்சிருவாங்க… எல்லோருக்கும் அவர்களின் செயலின் நேர்த்தி ரொம்பப் பிடிக்கும். எல்லோரும் பாராட்டுவாங்க. இதை அருகிலிருந்து பார்ப்பவர்களில், பக்குவமில்லாதவருக்கு, செயலைச் செய்தவர் மீது பொறாமை வரும்….
மேகலா : நாம் இந்த வேலையைச் செய்து பாராட்டு வாங்கியிருக்கலாம் என்றா கிருஷ்ணா….?
கிருஷ்ணர் : அப்படிப் ’பொறாமை’ வந்திருந்தால் தான், அவர்கள் immaturity ஆள் கிடையாதுல.. நான் சொல்லுபவர்களுக்கு, செயலைச் செய்யவும் தெரியாது…, செய்யும் ஆசையும் இருக்காது…. ஆனால், பாராட்டு மட்டும் வேணும்…, யாருக்கும் போய் விடக் கூடாது. அப்படியொரு சுவாரஸ்யமான குணம் உடையவர்கள் இவர்கள். செயலைப் பாராட்டும் போது, தேவையில்லாமல் பேசி, சுற்றியிருப்போரின் வெறுப்பையும் சம்பாதிப்பார்கள்…, அதைப் பற்றிக் கவலையும் பட மாட்டார்கள்…. உளறிக்கிட்டே இருப்பார்கள்….
மேகலா : ஆம்மாம் கிருஷ்ணா… அரசியல் நிகழ்வுகளில் கூட, பல சம்பவங்களில், இப்படிப் பொறாமைப்படுபவர்களை நாங்கள் தினந்தோறும் பார்க்கத்தான் செய்கிறோம் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : அரசியல் நிகழ்வுகளுக்கு ஏன் போகிறாய்… அன்றாட நிகழ்ச்சிகளில் எத்தனை பேரை இதே போல நீ பார்க்கலாம்…
மேகலா : உண்மைதான் கிருஷ்ணா… கேலியும் கிண்டலும் பண்ணுவதே தங்கள் பிறப்புரிமை என்றிருப்பார்கள். இவர்களை எப்படி deal பண்ணணும் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Cool-ஆ ignore பண்ணிரு…
மேகலா : திறமைசாலிகளில் matured ஆனவர்கள், நீ சொன்ன மாதிரி, கேலி பேசுபவர்களை, பொறாமையில் வயிறெரிஞ்சி பேசுகிறவர்களை ignore பண்ணிட்டு போயிருவாங்க கிருஷ்ணா… In fact, அவர்கள் விமர்சனங்களையோ, கேலிகளையோ, ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டாங்க… ஆனால், சாதாரணமானவர்களில், சாதனையாளர்கள், இதே போல கேலிக்கும், பொறாமைக்கும் துடிச்சிப் போயிருவாங்க கிருஷ்ணா… சாதனையாளர்கள், அறியாமையை எப்படி எதிர்கொள்வது… நான் ஏன் கேட்கிறேனென்றால்…, திறமைகள் அவமானப்படுத்தப்படும் போது…, மனசு உடைந்து போய்…, depression-க்கு ஆளாகி விடுவார்கள், இல்லையா….
கிருஷ்ணர் : நல்ல கேள்வி… இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில்…, அதாவது நாம் திறமையாக ஒரு வேலையை செய்து முடித்து, பாராட்டைப் பெறும் போது…, அதைப் பார்த்து பொறாமைப்படுபவர்கள் கேலி பேசுகிறார்கள்…, அவமானப்படுத்துவார்கள். இவர்கள், அறியாமையினாலா இப்படி கேலி பேசுகிறார்கள்…; அறிந்துதான் பேசுகிறார்கள்…. நாம் இப்படிப் பேசினால், இவனுக்கு வலிக்கும் என்று தெரிந்துதான் பேசுகிறார்கள். இவர்களை ignore பண்ணத் தெரியாமல் அழுவதனால், உனக்குத்தான் நஷ்டம் ஏற்படும்… முதலில், உனக்கு வந்த பாராட்டை, நீ மனமார ஏற்றுக் கொள்… நாம் இந்த வேலையை சிறப்பாகச் செய்ததனால்தானே இந்தப் பாராட்டு பெற முடிந்தது என்று உன் மனதில் ஒரு கிரீடத்தை ஏற்று…. இது அகம்பாவம் இல்லை…. கேலி பேசுபவனுக்கு இந்தத் திறமை கிடையாது என்று நிமிர்ந்து யோசி… கண்ணீரெல்லாம் காணாமல் போகும்…. ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்த பாராட்டைத் தேடி செல்லச் செல்ல, உன் மனதில் தெளிவு பிறக்க ஆரம்பிக்கும்…. ஒரு பாடத்தை முதலில் படிக்கும் போது வரும் அறிவு, அடுத்த பாடம்…, அடுத்த பாடம் என்று நீ செல்லச் செல்ல விரிவடைய வேண்டும்… இப்படி அறிவு விரிவடைய, விரிவடைய, ‘ஞாபகமறதி’, ‘கவனமின்மை’, அதே மாதிரி மற்ற மக்களின் ‘பொறாமை’ என்ற தடைகள் கூட, நம்மை விட்டு விலகிச் செல்லும்… கூர்த்த ஞானம், நம்மை matured person ஆக்கும்….
மேகலா : Oh! வாவ்! Super கிருஷ்ணா…..
(தொடரும்)
Comments
Post a Comment