வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)
மேகலா : நிஜம் தான் கிருஷ்ணா… ஏன் கிருஷ்ணா…, ‘வலிமை’ என்பது, இயல்பாக இருக்கக் கூடிய குணமா… அப்படியில்லை…, ‘வலிமை’ என்பது மனிதன் வளர, வளர, வளர்த்துக் கொள்வதா… அப்படியென்றால், எப்படியெல்லாம் ‘வலிமை’ மனிதனுக்குப் பெருகும்…. கிருஷ்ணர் : நல்ல கேள்வி… ராமாயணத்தில் ஒரு காட்சி வரும். சீதையைத் தேடி, ‘அங்கதன்’ தலைமையிலான, அனுமன் உள்ளிட்ட குழு, தென் திசைக்கு வந்திருப்பார்கள்… எதிரில், பரந்து விரிந்து கிடக்கும் கடலைப் பார்த்து, ‘இந்தக் கடலைத் தாண்டி எப்படி செல்வது’ என்று எல்லோரும் திகைத்துப் போவார்கள். அப்பொழுது, ஜாம்பவான் என்ற கரடி இனத்தைச் சேர்ந்த வீரன் மட்டும், ‘இந்தக் கடலைக் கடக்கவல்ல தகுதியும், திறமையும் வாயுபுத்திரனாகிய அனுமனுக்கு மட்டுமே உண்டு’ – என்று சொல்லி, அனுமன் மறந்திருந்த அவருடைய ஆற்றலை, பராக்கிரமத்தை எடுத்துச் சொல்லுவார். அவர், அனுமனின் திறமையை எடுத்துச் சொல்லச் சொல்ல, அனுமனின் மனதுக்குள் புதிய உத்வேகம் ஏற்பட்டு, அவருடைய சக்தியும் வெளிப்படுகிறது…’ என்று பார்த்திருக்கிறோம்… ஒருவரின் நினைவூட்டுதலால், ‘வலிமை’ வெளிப்படுகிறதா என்றால், அது அப்படியல்ல… ஒருவருக்கு, இயற்கையாகவே தைரியமு