வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

மேகலா : நிஜம் தான் கிருஷ்ணா… ஏன் கிருஷ்ணா…, ‘வலிமை’ என்பது, இயல்பாக இருக்கக் கூடிய குணமா… அப்படியில்லை…, ‘வலிமை’ என்பது மனிதன் வளர, வளர, வளர்த்துக் கொள்வதா… அப்படியென்றால், எப்படியெல்லாம் ‘வலிமை’ மனிதனுக்குப் பெருகும்….

கிருஷ்ணர் : நல்ல கேள்வி… ராமாயணத்தில் ஒரு காட்சி வரும். சீதையைத் தேடி, ‘அங்கதன்’ தலைமையிலான, அனுமன் உள்ளிட்ட குழு, தென் திசைக்கு வந்திருப்பார்கள்… எதிரில், பரந்து விரிந்து கிடக்கும் கடலைப் பார்த்து, ‘இந்தக் கடலைத் தாண்டி எப்படி செல்வது’ என்று எல்லோரும் திகைத்துப் போவார்கள். அப்பொழுது, ஜாம்பவான் என்ற கரடி இனத்தைச் சேர்ந்த வீரன் மட்டும், ‘இந்தக் கடலைக் கடக்கவல்ல தகுதியும், திறமையும் வாயுபுத்திரனாகிய அனுமனுக்கு மட்டுமே உண்டு’ – என்று சொல்லி, அனுமன் மறந்திருந்த அவருடைய ஆற்றலை, பராக்கிரமத்தை எடுத்துச் சொல்லுவார். அவர், அனுமனின் திறமையை எடுத்துச் சொல்லச் சொல்ல, அனுமனின் மனதுக்குள் புதிய உத்வேகம் ஏற்பட்டு, அவருடைய சக்தியும் வெளிப்படுகிறது…’ என்று பார்த்திருக்கிறோம்… ஒருவரின் நினைவூட்டுதலால், ‘வலிமை’ வெளிப்படுகிறதா என்றால், அது அப்படியல்ல… ஒருவருக்கு, இயற்கையாகவே தைரியமும், துணிச்சலும் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள், அவர்களின் தைரியத்திற்கேற்றவாறு, கல்வியிலோ, விருப்பப்பட்ட துறையிலோ பயிற்சி எடுக்க எடுக்க…, தைரியம் தன்னம்பிக்கையாக மாறுகிறது. ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது, தன்னம்பிக்கையும், தைரியமும், வெற்றி வாய்ப்பைக் கொடுத்து, வலிமையானவனாகிறான்… சிலருக்கு, தைரியம் ஏற்படும் வகையில், motivational-ஆக பேச வேண்டும்…. அனுமனுக்குக் கிடைத்த மாதிரி சிலருக்கு தடைகளே…, ஜெயிக்க வேண்டும் என்ற மன உறுதியைக் கொடுக்கும். Inspiration-ஆல் சிலருக்கு பலம் வரும்… நான், இவர் மாதிரி, “I. P. S.” ஆவேன்… Police ஆவேன்… பெரிய ‘பில் கேட்ஸ்’ மாதிரி வருவேன்… என்று ஒருவருடைய சாதனை, இன்னொருவருக்கு, மன உறுதியைக் கொடுக்கும்…. சிலர், சிறு வயதிலேயே, சமுதாயத்தால் வெறுக்கப்பட்டு…, அதனால், வெறுப்பை மனதில் சுமந்து, ஒரு வகையான negative ஆன, மூர்க்கமான குணத்தை வளர்த்துக் கொள்வார்கள். அதுவே, அவர்களுக்கு ஒரு முரட்டுத் தைரியத்தையும் கொடுக்கிறது. இப்படி சிலர் பலம் காட்டுகிறார்கள். ஒன்று நன்றாகப் புரிந்து கொள். பிடிவாதமும், முரட்டுத்தனமும், மூர்க்க குணமும்…, ‘வலிமை’ கிடையாது. வலிமையானவர்கள் அன்பால் சில சமயம் மனம் இரங்கிக் கூடப் போகலாம்… ‘வலிமை’ என்பது, தைரியமாய், குற்றம் புரிந்தவர்களிடமும், தீய சக்திகளிடமும், பயமின்றி, நேர்மையாக நின்று அவர்களை அடக்குவது. சிலரின் வேண்டுகோளுக்கு அடங்கிக் கூட போகலாம்… ‘வலிமை’ என்பது தெளிவு. நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால், வேறு பல நல்ல வளர்ச்சித் திட்டங்களில் மக்களை சம்மதிக்க வைக்கலாம். தெளிவாய் சிந்தித்து செயல்படுபவன், வலிமையான தலைவனாகிறான். என்னதான் மனுசனுக்கு உடலில் பலம் இருந்தாலும், மனதில் தைரியம் இருந்தாலும்…, முறையான பயிற்சி, தெளிவான திட்டமிடல், கொஞ்சம் தந்திரம், இவையெல்லாம் இருந்தால்தான், அந்த வலிமையும் வெற்றி பெறும்… So, ’வலிமை’…, பயமின்மை, நேர்மை, திறமை…, இவற்றால் மட்டும் வருவதல்ல. பயிற்சி, தந்திரம், கூர்மை, எதிர்ப்பு என்ற பல காரணங்களாலும், மனிதனிடம் வலுப்பெறுகிறது… சில சமயங்களில், சில பிரச்னைகளில், ஒருவராகச் செயல்படாமல், பலர் சேர்ந்து ஒற்றுமையாகச் செயல்படுவது, பிரச்னைகளை எளிமையாக வென்று விடும்.. பலம் கிடைக்கும். இது மட்டுமல்ல…, இன்னும் நிறைய இருக்கு…. தர்மத்தின் சூட்சுமத்தை நம்மால் அறிய முடியாதது போல,, மனிதன் சாதனை புரியணும் என்று துணிந்தால் போதும்…, எப்போ…, எப்படி…, தைரியம் பிறக்கும் என்று நம்மால் சொல்லவே முடியாது…. ஒரு காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்ற அக்கறை, முனைப்பு, நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை, தைரியம், திறமை…, இவையெல்லாம் சாதித்துக் கொடுக்கும் வலிமையெனப்படும்….

மேகலா : வாவ்! ஒரு நுட்பமான தலைப்பை எடுத்து…, வெகு எளிமையாக விளக்கம் கொடுத்து விட்டாய் கிருஷ்ணா…. சூப்பர், சூப்பர் கிருஷ்ணா…. இரு…, இரு…, ஆமாம், கட்டுரையை முடிக்கப் போகிறாயா கிருஷ்ணா…

கிருஷ்ணர் : முடிக்கப் போகிறேனா…. முடிச்சிட்டேன்… Bye….

மேகலா : கிருஷ்ணா…, கிருஷ்ணா….

(நிறைவு பெறுகிறது)

Comments

Popular posts from this blog

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1