வலிமை - பாகம் 8

கிருஷ்ணர் : ‘வலிமை’யைப் பற்றி இன்னொரு நுணுக்கமான, சுவாரஸ்யமான ஒரு psychology உனக்குத் தெரியுமா….

மேகலா : நீ சொல்லு கிருஷ்ணா…. நான் தெரிஞ்சிக்கிறேன்….

கிருஷ்ணர் : அதாவது, பிள்ளைகள் படிக்கிற காலத்தில், exam time-ல, ஒரு மாணவன் படிக்கும் திறனுக்கு 80% மார்க் வாங்குபவனாக இருப்பான். அப்போ, அவனோட teacher, ‘உனக்கிருக்கிற திறமைக்கு இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால், state first எடுப்பாய்..’ என்று சொன்னால் போதும். அந்த நிமிஷத்திலிருந்து கூடுதல் effort, கவனம், முனைப்பு…, என்று எல்லாவற்றையும் போட்டு, அந்த மாணவன், ’நூற்றுக்கு நூறு’ வாங்கப் போராடுவான்… ஒருவர், நமக்குக் கொடுக்கும் ;உந்துசக்தி’, மிகப் பெரிய வலிமையை கொடுக்கும். இது இப்படி என்றால்…, மிகப் பெரிய பொறுப்பு இருக்கும் வீரனோ, திறமைசாலியோ, ஒரு வேலையைச் செய்யும் முன், யாராவது, ‘உன்னால் என்ன செய்ய முடியும்…, உனக்கு அதற்கான தகுதி கிடையாது’ – என்று எகத்தாளமாகப் பேசினால், எப்பேர்ப்பட்ட திறமையாளனுக்கும், ‘பொசுக்’குனு போய் விடும்… எதிர்மறையான விமர்சனத்தையும் positive ஆக எடுத்து, ‘ஜெயித்துக் காட்டுகிறேன்’ என்று சவால் விட்டு ஜெயிப்பவர்களும் உண்டு… ஆனால், யாராவது நம் தன்னம்பிக்கையைக் குறைக்கும்படி மட்டம் தட்டிப் பேசினால், மனம் தளர்ந்து போனால், தைரியம் கூட குறைந்து போகலாம். இந்த மாதிரி ஒரு சம்பவம் கர்ணனுக்கே கூட ஏற்பட்டதே….

மகாபாரதத்தில், கர்ணன் தளபதியாகப் பொறுப்பேற்றவுடன், கர்ணனின் தேரை ஓட்டும் சாரதியாக ’சல்யன் மகாராஜா’ பொறுப்பேற்கிறார். கர்ணன், துரியோதனனிடம், தான் ஒருவனாகவே, அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் வென்று, உனக்கு வெற்றியைப் பரிசளிப்பேன்’ என்கிறான்…. அப்போது சல்யன், ‘கர்ணா! அர்ஜுனனின் வீரத்தையும், கிருஷ்ணரின் மகிமையையும் அறியாமல் நீ பேசுகிறாய். அவர்களை வெல்வது உன்னால் இயலாது… தற்பெருமை பேசுவதை நிறுத்து…’ என்று கடுமையாகப் பேசுகிறான். இதனால், கர்ணன் தைரியத்தை இழக்கவில்லை என்றாலும், கர்ணனின் பலவீனம் என்ன என்று அவனை யோசிக்க வைத்ததா…., இல்லையா…. எப்பேர்ப்பட்ட வீரனுக்கும், தன் பலவீனம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வது சற்று உறுத்தல்தானே. வலிமையே வலுவிழந்து விடும் நேரம் இது…

மேகலா : ஓ! ஆமாம் கிருஷ்ணா…. நீ சொல்வதும் சரிதான். ஒருவருடைய motivation நம்மை வலுவுள்ளவர்களாகவும் ஆக்கும்…, ஒருவருடைய discouraging, நம்மை வலுவிழக்கவும் செய்யும்… உண்மைதான்…. அடேங்கப்பா…, ‘வலிமை’ என்ற தலைப்பை நீ எடுத்துக் கொடுத்து, எத்தனை நுணுக்கமான அணுகுமுறைகளையும், அதனால் ஏற்படும் பிரமிப்பூட்டும் செயல்களையும் எடுத்துச் சொல்லுகிறாய்… கிருஷ்ணா…, எனக்கு இன்னும் ஒரு psychology-யும் நினைவுக்கு வருகிறது கிருஷ்ணா…. சிலர் இருப்பாங்க கிருஷ்ணா… அவர்கள் கையில் மிகப் பெரிய project-ஓ…, கல்யாணமோ.., மாநாடோ…, நடப்பதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கும். அவர்கள் அந்த வேலையைச் செய்து முடிக்கத்தான் வேணும்… செய்தும் முடித்து விடுவார்கள்… ஆனால், அந்த வேலையை ஆரம்பிப்பதற்கு முன்…, அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நபர்…, கிட்டத்தட்ட வலது கையாக இயங்கியவர்கள், தற்சமயம் வெளியூருக்கோ…, இல்லை வேறு வேலைக்கோ சென்றிருந்தால், இவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா கிருஷ்ணா…. ‘ச்சே, இந்த நேரம் பார்த்து, ‘அவன்’ என் கூட இல்லையே… அவன் மட்டும் இப்போ…, என் பக்கத்தில் இருந்தால், இந்த வேலையின் சிறப்பே…, வேற லெவல்ல இருந்திருக்கும்… ‘ஐயோ’…, அவன் இப்ப இங்க இல்லையே’ என்று தன் திறமை, தைரியம், வலிமை எல்லாமே, ‘யாரோ’, ‘அந்த ஒருவனால்’ வருவது போல சொல்லி, சொல்லி மாய்ந்து போவார்கள். அதன் பிறகு அந்த வேலையை சிறப்பாகச் செய்து பாராட்டும் பெறுவார்கள்… இருந்தாலும், அவர்களுடைய ‘வலிமை’யே இன்னொருவரால் வருவதாகச் சொல்வது, கொஞ்சம் காமெடியாகத்தானே இருக்கு கிருஷ்ணா….

(தொடரும்)

(அடுத்த பகுதியுடன் நிறைவு பெறும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2