ஆளுமை - பாகம் 9
மேகலா : கிருஷ்ணா…, நாம் கடந்து வந்த பாதைகள், நம் மனதில் பட்டா போட்டு உட்கார்ந்து விடும் என்று சொன்னாயே…, அது great கிருஷ்ணா… இன்னும் ஒரு psychology இருக்கு கிருஷ்ணா… நம் மனசை முழுசாக ஆக்ரமித்தவர்கள், கோபப்பட்டால் கூட, அந்தக் கோபம் நம்மையும் தொற்றி விடும் கிருஷ்ணா… கிருஷ்ணர் : எப்படிச் சொல்லுகிறாய்… மேகலா : இப்போ…, அரசியலில் நாம் ரசிக்கும் ஒருவர்…, இவர்களால் நம்ம நாடு வளர்ச்சியுறும் என்று யாரை நம்புகிறோமோ…, அவர்கள் கோபப்பட்டு, எதிர்க்கட்சியினர் செய்த தவறை சுட்டிக் காட்டும் போது, அந்தக் கோபம் சாதாரணமாகவே நம்மையும் தொற்றிக் கொள்ளும் கிருஷ்ணா… அதிலும், சமீபத்தில், பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர், ஒரு protest-ல் பங்கு கொண்டு, காவல் அதிகாரியால் சிறை பிடிக்கப்பட்டு, காவலதிகாரியிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது பத்திரிகையாளர் ஒருவர், மாநிலத் தலைவரிடம், ‘உங்கள் போராட்டமே ஒரு நாடகம்’ என்று இன்னொரு தலைவர் சொல்கிறாரே’ என்று கேட்கிறார். அதற்கு, B. J. P. மாநிலத் தலைவர், ‘அவர் ‘work from home’ politics பண்ணுகிறார்… கோடிக் கணக்கில் ஊழல் நடந்து, அதை எதிர்த்து,...