ஆளுமை - பாகம் 7
மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை உற்றுப் பார்த்தாலே தெரிந்து விடும்…, யார் வல்லவர்கள் என்று…. கிருஷ்ணா…, நான் இன்னொரு விஷயத்தைச் சொல்லட்டா….
கிருஷ்ணர் : பேசுவதற்குத்தானே, ‘ஆளுமை’யை ஆரம்பித்திருக்கிறோம்… இதில் என்ன permission கேட்கிறாய்…
மேகலா : கிருஷ்ணா…, M. G. R., உலகம் சுற்றும் வாலிபன் படம் எடுத்து, release தேதியை அறிவித்து விட்டார். அவர் புகழிலும், வளர்ச்சியிலும் வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் கையில் அரசாங்கம். உலகம் சுற்றும் வாலிபன் படத்தை release பண்ண விடக் கூடாது.. அதற்கான விளம்பரங்களையும் தடை செய்து அராஜகம் செய்தனர்… மக்களோ, எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்…, படம் எப்போது release ஆகும் என்று. M. G. R. சொன்ன தேதியில் படம் release ஆகும் என்று, எந்த தியேட்டர், எத்தனை மணி show என்பதெல்லாம் சின்னச் சின்ன பெட்டிக் கடைகளுக்கு bit notice மூலம் தகவலை அனுப்புகிறார்… படப் பெட்டியை வழக்கமான முறையில் அனுப்பாமல், ரகசியமாக அனுப்பி, குறித்த தேதியில் release-ம் பண்ணி விட்டார்… ரசிகர்கள் கைக்கு பிரச்னை வந்து விட்டது… இனி படத்தை எந்த அரசாங்கமும் தடுத்து விட முடியாது… வல்லவன் ஒரு சிறு செங்கலை அசைத்தாலும் போதும், கூட இருப்பவர்கள், கூடாரத்தையே பிரிச்சி மேஞ்சிருவாங்க கிருஷ்ணா…
கிருஷ்ணர் : அதனால் தான் இன்று வரை, அவர்களுடைய ஆளுமை பேசப்படுகிறது… உனக்கு இன்னும் ஒரு உண்மை தெரியுமா…. ஆளுமையுள்ளவர்கள், தந்திரமாகப் பேசுவார்கள், புத்திசாலித்தனமாக பேசுவார்கள், பொறுமையாகப் பேசுவார்கள், திறமையாகப் பேசுவார்கள்; எதிராளி விரும்பும்படி பேசுவார்கள்…. ஆனால், ஒரு போதும் உண்மையை மறைத்துப் பேச மாட்டார்கள்… உனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் இருக்கிறதா… தமிழ்நாட்டில் ‘சுனாமி’ வந்து, கடற்கரையோரப் பகுதிகளை அழித்து சின்னாபின்னப்படுத்தியது… மக்கள் மிரண்டு போயினர்… ‘ஆபத்பாந்தவன்’, ‘அனாத ரட்சகன்’ என்று யாரை நம்பியிருந்தார்களோ…, அவரிடமே சரணடைந்தார்கள்… அது யார் தெரியுமா….?
மேகலா : ‘The great man’ Dr. A. P. J. அப்துல் கலாம் ஐயா அவர்கள்…
கிருஷ்ணர் : ஆமாம்…, உலகம் போற்றும் விஞ்ஞானி அவரிடம் தஞ்சம் புகுந்தால், இந்த சுனாமிக்கே தண்ணி காட்டுவார் என்று நம்பி, ‘சுனாமியை வர விடாமல் தடுக்க முடியுமா’ என்று கேட்டார்கள். ஏவுகணைகளை ஏவி, தீவிரவாதத்தை தவிடு பொடியாக்கியவர், ஏவுகலங்களை மிதக்க விட்டு, உலகம் முழுவதும் இந்தியாவின் பெருமையை நிமிரச் செய்தவர். அவரால் நிச்சயம் சுனாமியைத் தடுக்க முடியும் என்று நம்பினார்கள். அப்துல் கலாமிடம் தங்கள் பயத்தை வெளிப்படுத்திய போது, அவர், ‘பயப்படாதீர்கள்; அணுகுண்டு வீசி, சுனாமியை விரட்டலாம்’ என்று சொன்னாரா…, இல்லை; ‘சுனாமி வருவதை முன்கூட்டியே அறிய முடியும்; ஆனால் இயற்கையின் சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது; இயற்கையோடு அனுசரித்துத்தான் வாழ வேண்டும்… சுனாமி வருவதை அறிந்து, நாம் பாதுகாப்பான இடத்திற்கு பெயர்ந்து செல்வதுதான் புத்திசாலித்தனமான அணுகுமுறை’ – என்று உண்மையைச் சொன்னார்…. இன்னைக்கு, பொய் சொல்லி, நாளை மழுப்பலாம் என்ற ’அல்லிசல்லி’ குணமெல்லாம் ஆளுமையாளர்களிடம் கிடையாது. உண்மையைச் சொல்வதால், இன்று பிரச்னை வந்தாலும், திறமையாளன் அதை எதிர்கொள்வான். நாளை நிச்சயம் மக்களின் நம்பிக்கையைப் பெறுவான்… நின்று அடிக்கும் களம் அவர்களுடையது….
மேகலா : சூப்பர் கிருஷ்ணா…. உண்மையைச் சொல்லி, இன்று இல்லாவிட்டாலும், நாளை மக்கள் நம்புவார்கள் என்று நீ சொல்லுவது, இன்றைய அரசியல் களத்திற்கு ரொம்பப் பொருத்தமாக இருக்கு கிருஷ்ணா…
கிருஷ்ணர் : அதனால்தான் சொன்னேன்…
மேகலா : கிருஷ்ணா…, இதையும் சொல்லு கிருஷ்ணா… பயந்தாங்கொள்ளிகளைக் கூட, தன்னுடைய உறுதியான ஆலோசனையால் பயத்தைப் போக்கும் ஆற்றல் ஆளுமையாளர்களுக்கு உண்டு கிருஷ்ணா….
கிருஷ்ணர் : நீ எதைப் பற்றிச் சொல்லுகிறாய்…? யார் பயத்தை யார் போக்கியது…
மேகலா : என்ன கிருஷ்ணா…, ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்குற… நாரதர், தேவலோகத்தில், பாண்டு கேட்டுக் கொண்டதாக, தர்மபுத்திரனிடம், ‘ராஜசூய யாகம்’ நடத்த வேண்டும் என்று சொல்ல, அங்கு நடந்த நிகழ்ச்சியை நீ மறந்தாலும், நான் மறக்கவில்லை கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : Oh! அதைச் சொல்கிறாயா…., சரி, நீயே சொல்லு….
மேகலா : தர்மபுத்திரனுக்கு, ராஜசூய யாகம் நடத்த வேண்டும் என்று ஆசை வருகிறது. ஆனால்….,
(தொடரும்)
Comments
Post a Comment