கதை கதையாம், காரணமாம் - பகுதி 2
கிருஷ்ணர் : ’ஒரு மனிதன், தன் குடும்பத்திலுள்ள அனைவருக்குமாக உழைப்பானா, இல்லை தனக்கு மட்டும் உழைப்பானா’ என்று நான் கேட்டதற்கு, ”எல்லோருக்குமாகத்தான் உழைப்பான்’ என்று கூறினாய், அல்லவா? சரி! இது மனிதனின் பண்பு.... இது அப்படியே வளர்ந்து கொண்டே இருக்கும். தன்னிடம் உதவி என்று கேட்பவர்களுக்கு, உதவி செய்யும் வளர்ச்சி உருவாகும். அது அப்படியே வளர்ந்து, இந்த சமுதாயத்தின் மீது அக்கறையாக வளர வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இந்தப் பண்பு கட்டாயம் இருக்க வேண்டும். நம்ம party எப்படி....? இன்னும் ஒன்று சொல்கிறேன். மனுஷனுக்கு சமூக நலனில் அக்கறை வரும் போது, தியாக மனப்பான்மையும், சக மனிதர்களின் நம்பிக்கையில் அக்கறையும் கண்டிப்பாக வர வேண்டும். நம்முடைய அனுபவம் பொதுவாக எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விவேகத்தைக் கொடுக்கும் தான். நம்முடைய விருதுகளும், கைதட்டல்களும் நம்மைப் பக்குவப்படுத்தும் தான்.
உனக்கு ஒரு கதை சொல்கிறேன், கேள். ஒரு ஏகாளி, தன்னுடைய பொதிகளைச் சுமப்பதற்காக ஒரு கழுதை வைத்திருந்தான். அதற்கு நல்ல உணவு கொடுத்து, பொதி சுமக்கப் பழக்கியிருந்தான். முதலில் ஒரு மூட்டையை ஏற்றி வைத்து கூட்டிச் சென்றான். அதற்குப் பெரிதாகப் பாரம் தெரியவில்லை; மரியாதையாக வேலை பார்த்தது. அடுத்த மாதம் தொழில் விரிவடைந்தது. இரண்டு பொதிகளை ஏற்றி வைத்தான். கனம் கூடியது; கொஞ்சம் கனத்தது; இருந்தாலும் வேலை செய்தது. ஏகாளி பெரிய வேலைக்காரன் ஆனான். கழுதைக்கு இன்னும் ஒரு பொதி கூடியது. ஏகாளி, கழுதைக்கு அழுத்தம் கொடுத்து நடக்கச் செய்யும் பொழுது, கழுதை, எஜமானனின் முகத்திலேயே எட்டி உதைத்தது. ”இது யதார்த்தம்”.
பாராட்டுக்கள் நம்மைப் பக்குவப்படுத்துமா? நம் தலையில் பாரத்தை ஏற்றுமா? இது அவரவர் ‘ஒரிஜினல்’ குணத்தைப் பொறுத்துத்தான் போல....! சரி, இதெல்லாம் கிடக்கட்டும். நீ கலகலப்பாய் பேசுபவள் ஆயிற்றே..., திடுமென்று மனிதர்களின் குண நலன்களையும், அதன் விளைவுகளையும் பற்றிய ஆராய்ச்சி என்ன; அதுவும் serious-ஆக...?
மேகலா : இல்ல கிருஷ்ணா! எனக்கு இந்த Tom and Jerry cartoon பார்க்கும் போது; பஞ்ச தந்திரக் கதை வாசிக்கும் போது; முல்லா கதைகள்; பீர்பால் கதைகள்; இவையெல்லாம் வாசிக்கும் போது, ஒரு புத்திசாலித்தனத்தை, எத்தனை நகைச்சுவையாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள் என்று வியப்பாக இருக்கும். நமக்கு நம்முடைய அனுபவங்களில் சில நல்ல தருணங்கள், அதிலும் அதை comedy-யாக நினைத்துப் பார்க்கத்தானே பிடிக்கும். அதில் இருக்கும் படிப்பினை, நமக்குள் ஊடுருவிக் கலந்து விடுகிறது, கிருஷ்ணா...!
கிருஷ்ணர் : ரொம்ப interesting ஆக இருக்கும் போலயே....
மேகலா : நான் கோயம்புத்தூரில் இருந்த போது நடந்த ஒரு சம்பவம், கிருஷ்ணா.... ஷீத்தலும், ஹரியும் school-ல் படிக்கிறார்கள்; காலாண்டு விடுமுறையா...? அரையாண்டு விடுமுறையா....? நினைவில்லை. நாளை, பள்ளிக்கூடம் திறக்கப் போகிறார்கள். அன்று எல்லோரும், படுத்துக் கொண்டு, பேசிச் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தோம். ஷீத்தல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சமயம், ‘கிழக்கு வாசல்’ படம் வெளியாகி இருந்தது. அந்தப் படத்தில் ‘கார்த்திக்’ comedy-யாகப் பேசப் பேச, ‘ரேவதி’ விழுந்து விழுந்து சிரிக்கும் காட்சி வரும். அப்போ, ‘ஜனகராஜ்’ பேசும், ‘சிரி தாயி; சிரி; நல்லா சிரி தாயி; மனசு விட்டு சிரி தாயி’ என்ற வசனம் வரும். ஷீத்தல் சிரிக்கச் சிரிக்க, ஹரி இந்த வசனத்தைச் சொல்லி, ’இன்னைக்கு நல்லா சிரி’ என்று சொன்னதும், அவள் mood out ஆகி விட்டாள்......
கிருஷ்ணர் : Oh! School திறந்ததும், 'mark sheet' கொடுத்து விடுவார்கள்; சிரிக்க முடியாதோ.....!
மேகலா : ஆமாம், அவன் அதற்குத் தான் சொன்னான். இன்னும் எனக்கு அந்த சம்பவத்தை நினைத்து விட்டால், ‘நாளைய பிரச்னையை பிறகு பார்த்துக் கொள்ளலாம், இன்றைக்கு ‘ஜாலி’யாக இருந்து விடு’ என்ற உண்மை, என்னை யோசிக்க வைக்கும்.
கிருஷ்ணர் : ஏன் மேகலா, சின்னப் புள்ளைகளுக்கு நீங்கள் சொல்லும் கதைகளில் பிரபலமான கதை, ‘காகா, நரி’ கதையைச் சொல்லேன். எனக்கு அதில் ஒரு கருத்து இருக்கிறது.
மேகலா : எனக்குத் தெரியாத angle-ஆ கிருஷ்ணா....?
கிருஷ்ணர் : என்ன ஏது என்று கேட்காமல் கதையைச் சொல்லு.
மேகலா : ஒரு ஊருல, ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தாளா..... அந்த வடையின் வாசம், ‘மூக்கைத் துளைத்தது’. அதை வாசம் பிடித்த காகா ஒன்று, பாட்டிகிட்ட ஒரு வடையைக் கேட்டது. பாட்டி ஒரு கம்பை எடுத்து, ஓங்கி வீசினாள். அந்த வேகத்தில், காகா ஒரு வடையைத் தூக்கிக் கொண்டு ஓடிப் போய், மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டது. காகா மூக்குல வடை இருப்பதைப் பார்த்த நரிக்கும், பசி தொற்றிக் கொண்டது. நாக்குல எச்சில் வடிந்தது. காகத்தைப் பார்த்து, ‘காகா, நீ எவ்வளவு அழகா இருக்க, எனக்கும் கொஞ்சம் வடை கொடேன்’ என்று கேட்டது. காகம், தலையை சாய்த்துப் பார்த்து, ‘தர மாட்டேன்’ என்று தலையாட்டியது. அந்த வடையை எப்படியாவது பறிச்சுக்கிடணும்னு திட்டம் போட்ட நரி, ‘காகா, நீ அழகா மட்டுமில்ல; நீ நல்லாப் பாடுவியாமே..... எங்கே எனக்கு ஒரு பாட்டு பாடிக் காட்டேன்’ என்றதும், காகத்திற்குத் தலை கால் புரியவில்லை. உடனே, கொஞ்சம் கூட யோசிக்காமல், காகா, வாயைத் திறந்து கத்தியது. வடை கீழே விழுந்தது. நரி தாவிச் சென்று, வடையை எடுத்துத் தூக்கிச் சென்றது. ‘நேத்துப் போயிட்டு, இன்னைக்கு வந்துட்டேன்’.
கிருஷ்ணர் : இதென்ன, கடைசி வரிக்கு என்ன அர்த்தம்?
மேகலா : நாங்க கதை சொல்லி முடிக்கும் போது, ‘கதையும் முடிஞ்சிருச்சி, கத்தரிக்காயும் விளைஞ்சிருச்சி’ என்றோ, ‘நேத்துப் போயி, இன்னைக்கு வந்துட்டேன்’ என்றோ சொல்லித்தான் முடிப்போம், கிருஷ்ணா.....
கிருஷ்ணர் : சரி, எனக்கு ஒரு doubt. நீ சின்னப் புள்ளைகளுக்கு எதுக்கு கதை சொல்லுகிறாய்?
மேகலா : சின்னப் புள்ளைங்க, நாம் அவர்களிடம் பேசணும் என்று எதிர்பார்க்கும், கிருஷ்ணா. நாம் வேறு ஒருவரிடம் பேசினால் கூட, கையை நம் முகத்தில் அடித்து, நம் கவனத்தை, அதன் பக்கம் திருப்பும். நாம் ஏதாவது ‘குத்தடி குத்தடி சைனக்கா’, ‘சாய்ந்தாடம்மா, சாய்ந்தாடு’ என்று விளையாடினால், அதுவும் சாய்ந்து, சாய்ந்து மகிழும். ஒரு change-க்கு கதை சொன்னால், உன்னிப்பாக கவனிக்கும். சில சமயம் ‘உம்’ கொட்டும், கிருஷ்ணா.
கிருஷ்ணர் : ‘உம்’ கொட்டுமில்ல.... அப்படீன்னா, நீ சொல்லும் கதையை கிரகிக்குது எண்றுதானே அர்த்தம்....
மேகலா : ஆமாம், கிருஷ்ணா! ‘ஊ...ஊ’ என்று நம் கூடவே பேசும். 2 வயது ஆகும் போதெல்லாம் நாம் சொல்லும் கதை அதுக்கு மனப்பாடமே ஆகியிருக்கும், கிருஷ்ணா.....
கிருஷ்ணர் : அப்படிப்பட்ட சின்னப் புள்ளையிடம் போய், பாட்டியை ஏமாத்தி, காகம் வடை திருடுவதையும், காகத்தை ஏமாற்றி நரி வடையைப் பறிப்பதையும் சொல்லலாமா....? இத்தனை psychology பேசுகிறாய்; உனக்கு இது தப்புண்ணு தோணலையா....?
மேகலா : ஸ்...ஸ்..... ஆமாம், கிருஷ்ணா.... பிள்ளைகள் மனசு என்பது ‘பளிங்கு’ மாதிரி. நாம் தான் அதில் அழுக்கைச் சேர்க்கிறோமோ? ஆனாலும், இந்தக் கதையைத் தானே easy-யாக நடிச்சுக் காட்ட முடியுது....
கிருஷ்ணர் : நடிப்பைப் பற்றி நீ சொல்லக் கூடாது. நீ நடிக்காத நடிப்பா...? முயல், ஆமை கதையைச் சொல்லுகிறாய். நானே பல முறை கேட்டிருக்கிறேன். ‘சோம்பித் திரியக் கூடாது’, ‘எதிராளியை easy-யாக எடை போடக் கூடாது’ போன்ற நல்ல கருத்துக்களை எளிமையாகச் சொல்லலாம். தமிழில் இப்படி ஒரு ‘காகா கதை’ இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. தந்திரமாய், புத்திசாலித்தனமாய் குழந்தைகள் வளர வேண்டும். அதற்கு எத்தனையோ கதைகள் இருக்கின்றன, இல்லையா....
மேகலா : ஆமாம், கிருஷ்ணா! அது பற்றி விளக்கமாக அடுத்த episode-ல் பார்க்கலாமா......

Comments
Post a Comment