மனிதர்கள் பலவிதம் - பகுதி 1

மேகலா : Hello கிருஷ்ணா! Happy birthday to you, கிருஷ்ணா! (கிருஷ்ண ஜெயந்தி சமயம் எழுதப்பட்டது)

கிருஷ்ணர் : ‘அக்கார அடிசலும்’, ‘சர்க்கரைப் பொங்கலும்’ சாப்பிட்டுச் சாப்பிட்டு திகட்டி விட்டது, மேகலா..... உன் வாழ்த்துக்களுக்கு நன்றி, மேகலா!

மேகலா : வாழ்த்துச் சொன்னேனா!? வாழ்த்து பெறத்தான் வந்தேன் கிருஷ்ணா! நீ எனக்குக் கடவுள் மட்டுமல்ல, கிருஷ்ணா! நீ என் ’குரு’. எனக்கு நல்லது கெட்டது எடுத்துச் சொல்லுகிறாய். என் மீது பரிவு கொண்டு, என் நலத்தின் மீது அக்கறை கொண்டுள்ளாய். என்னோடு வம்பளக்கிறாய்! என்னை உரிமையாய் கலாய்க்கிறாய். நான் திருட்டு முழி முழிச்சால், உடனே கண்டு பிடித்து கண்டிக்கவும் செய்கிறாய். நீ என் அம்மாவா! நண்பனா! பல சமயங்களில் நான் திணறிப் போகிறேன். நீ எனக்கு என்ன உறவு என்று யோசிக்கும் போது, கண் சிமிட்டி, மாயமாய் மறைந்தும் போகிறாய். என்னைக் கடந்து போவதால், உன்னைக் ‘கடவுள்’ என்று அழைக்கிறேன். கடவுள் மட்டுமே, நண்பனாய், குருவாய், தாயாய், தந்தையாய், ஏன், சமயத்தில் குழந்தையாய்க் கூட மாற முடியும். நீ என் கடவுள் என்றால், எனக்கு நீதானே வாழ்த்துச் சொல்ல வேண்டும்!

கிருஷ்ணர் : நான் கொஞ்சம் free-யாகப் பேசலாம் என்று நினைத்து உன்னைத் தேடி வந்தேன். நீயும் என்னைக் கடவுளாக்கி, வரிசையில் நின்று விட்டாயா? என் வாழ்த்து என்றும் உனக்குக் குடைநிழலாய் இருக்கும், மேகலா! சரி, இதெல்லாம் இருக்கட்டும்; இன்று என்ன தலைப்பில் பேசலாம்....?

மேகலா : தலைப்பை நீதான் சொல்லு, கிருஷ்ணா! அதற்கு முன், இன்று நான் பார்த்து ரசித்த ஒரு character-ஐப் பற்றியும், கேட்டு வியந்து புல்லரித்துப் போன ஒரு character-ஐப் பற்றியும் உன்னிடம் சொல்லப் போகிறேன், கிருஷ்ணா!

கிருஷ்ணர் : ரொம்ப நாளாச்சு, மேகலா.... இப்படி நீ பார்த்து ரசித்த, கேட்டு ரசித்த விஷயங்களைப் பேசுவதைக் கேட்டு. நீ பார்த்து ரசித்தது என்றால், நிச்சயம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்; சொல்லு மேகலா......

மேகலா : கிருஷ்ணா! பெரிய கடை பஜார் வளாகத்துக்குள், New Raja Store வருவதற்கு முன்பாக, Ladies Matching Center கடைக்கு அடுத்தபடியாக, ஒரு step ஏறி, ஒரு road போகும் தெரியுமா, கிருஷ்ணா? (எல்லாம், ஸ்ரீவில்லிபுத்தூரில்)

கிருஷ்ணர் : உன் பழைய tailor கடை இருக்கும் இடம் தானே! ‘மூர்த்தி நாயக்கர் ஹோட்டல்’ இருக்குமே, அந்த இடம் தானே; நல்லாவே தெரியும்....., சொல்லு.

மேகலா : அட, ‘மூர்த்தி நாயக்கர் கடை’ நானே மறந்து போன சமாச்சாரம்; நீ, எப்படி ஞாபகம் வைத்திருக்கிறாய்! அங்கு ‘பிரியாணி’ கூட taste ஆக இருக்கும் என்று சொல்வார்கள். சரி, அது இருக்கட்டும், அந்த road வாசலில், step ஏறுவதற்கு முன்பாக இரண்டு corner-இலும், இரண்டு tailors இருப்பார்கள்; பார்த்திருக்கிறாயா, கிருஷ்ணா....?

கிருஷ்ணர் : ஆமாம்; உன்னோட tailor, 'Vels Tailor' தானே....! இங்கு எப்படி வந்தாய்...?

மேகலா : ஐயய்யோ....! நான் பேசுறதுக்கு முன்னாடியே நீயே யோசிச்சுக் கேள்வி கேட்கிறாயே.... இந்த tailor-இடம், (சேலைக்கு) முந்தி அடிக்கக் கொடுத்திருந்தேன்; Blouse எல்லாம் தைக்கக் கொடுக்கவில்லை. இவர் உடனடியாகத் தைத்துக் கொடுத்து விடுவார் என்பதால், இவரிடம் கொடுத்திருந்தேன்.

கிருஷ்ணர் : சரி....சரி.....சரி...., இந்த tailor தான் சுவாரஸ்யமா....?

மேகலா : ஆமாம், கிருஷ்ணா! அவர் உட்கார்ந்த இடத்தில், மேல்கூரைக்கு pillar போட்டிருக்கிறார்கள். Pillar-க்கு platform ஒன்று இருக்கிறது. அதுதான் tailor-ஓட cupboard. வலப்புறம் இருக்கும் tailor-க்கு, அந்த ஓரத்தில் இருக்கும் கடையின் சுவரில் ஒரு சின்ன cupboard இருக்கு கிருஷ்ணா! இருவரும் அவர்களுடைய நூல்கண்டு, நூல், machine-ல் தைக்கக் கொடுக்கும் bobbin இவற்றையெல்லாம் இதில் தான் வைக்கிறார்கள். இவர்களுக்கென்று தனியாக கடை இல்லையென்பதால், customer-இடம் துணியை வாங்கி வைத்து பாதுகாக்கும் அவசியமே அவர்களுக்குக் கிடையாது. இப்படி, ‘fast food' மாதிரி, instant ஆக சேலைக்கு ஓரம் அடிப்பது, nightie-யை உயரம் மடித்துத் தைப்பது என்று வரும் வாடிக்கையாளர்களிடம் வாங்கி அங்கேயே, அப்போதே தைத்துக் கையில் கொடுத்து விடுகிறார்கள். Customer-க்கும், ‘நாளைக்கு’, ‘சனிக்கிழமை’, ‘புதன்கிழமை’ வாங்க என்ற பதில் இல்லாமல் உடனே பொருள் கையில் கிடைத்து விடுகிற சந்தோஷம்....

கிருஷ்ணர் : அவர்கள் சட்டையெல்லாம் தைப்பதில்லையா, மேகலா....?

மேகலா : தைப்பார்கள் போலிருக்கிறது, கிருஷ்ணா. தீபாவளி time-ல் தைப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனாலும், அவர்கள் instant tailor தான். இப்படி off-season-ல் கூட அவர்கள் busy-யாக இருப்பதைத்தான் பார்த்திருக்கிறேன் கிருஷ்ணா! சேலைக்கு ஓரம் அடிக்க 20 ரூபாய் என்றால், நான் இன்று மூன்று சேலை கொடுத்தேன். இரண்டு சேலைக்கு 'falls' தைக்க வேண்டும். ஷீத்தல் அப்பா வேஷ்டியை join பண்ணி தைத்துக் கொடுத்தார். மொத்தம் 160 ரூபாய் charge. ஆனால், 150 ரூபாய்தான் வாங்கினார்.

கிருஷ்ணர் : ஏன்...., ஏதாவது discount-ஆ...?

மேகலா : இல்ல கிருஷ்ணா! அதில் ஒரு சேலையின் முந்தானையில் ‘குஞ்சம்’ இருந்ததால், அந்த side ஓரம் அடிக்க வேண்டியதில்லை. அதனால் 10 ரூபாய் கழித்துக் கொண்டார். அவருடைய நேர்மை, என்னை சந்தோஷப்படுத்தியது. இது வரை tailors (ஏன் ராணிமா கூட) ஒரு ஓரம் மட்டும் அடித்தாலும், 20 ரூபாய் வாங்கி விடுவார்கள். இதே மாதிரி வேலை பார்த்தே, ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 500 ரூபாய் வரை சம்பாதிப்பார்கள் போல கிருஷ்ணா! எனக்கு அவரோட tailoring machine-ல் அவர் செய்து வைத்திருந்த ஒரு சௌகர்யம் ரொம்பப் பிடித்திருந்தது, கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : அப்படியென்ன சௌகர்யம்? Scissors வைப்பதற்கு தனி compartment, bag மாதிரி தைத்து வைத்திருந்தாரா...?

மேகலா : எப்படி..... எப்படி கிருஷ்ணா! ‘நச்’சுனு கண்டுபிடிச்சுக் கேட்டுட்டியே...! ஆனால், compartment-ஆக தைத்து மாட்டவில்ல. ஒரு ribbon மாதிரி, தையல் machine-ல், tie-up பண்ணி, அதற்குள், scissors-ஐ easy-யாக எடுக்கும்படிக்கு வைத்திருக்கிறார். அப்பப்ப, நூலை வெட்டுவதற்கு easy-யாக, எடுத்து வெட்டி, திரும்ப அதில் சொருகி விடுகிறார். அதே ribbon-ல் சில ஊசிகளைக் குத்தி, ready-யாக வைத்திருக்கிறார். அந்தத் தையல் machine மட்டும் தான் அவரோட கடை. துணியை அளக்க, வெட்ட table கிடையாது. வாடிக்கையாளரின் பொருட்களை சேர்த்து வைக்க ஒரு அட்டைப் பெட்டி கூடக் கிடையாது. அடுத்தடுத்து customer வரப் போக, அவர்களிடம் காலம் கடத்துவது கிடையாது. அவர்களின் பொழப்பு, அன்றாடங்காய்ச்சி பொழப்புதான் என்றாலும், கை மேல் காசு தரும் பொழப்பு. ஒரே அளவில் தைக்க வேண்டிய nightie-யில் 6 inch மடித்துத் தைக்க வேண்டிய கணக்குக்கு, chalk piece-ஆல் mark பண்ணுவதோ, ஊசியால் குத்தி mark பண்ணுவதோ இல்லாமல், inch tape-ஐ வைத்து அளந்து பார்த்தே தைத்த லாவகம், அவருடைய experience-ஐக் காட்டியது, கிருஷ்ணா....!

கிருஷ்ணர் : மொத்தத்தில் tailor-ஐ வாய் பார்த்திருக்கிறாய்.....

மேகலா : அவரிடம் தைத்து வாங்கிக் கொண்டு வரும் போது, கும்பிடு போட்டுக் கொடுக்கிறார், கிருஷ்ணா!

கிருஷ்ணர் : பார்ரா...... சரி! அடுத்த சுவாரஸ்யம் என்ன மேகலா? ஏதாவது ‘தள்ளுவண்டிக்காரனைப்’ பற்றியா....?

மேகலா : போ கிருஷ்ணா! அடுத்த வாரம் தான் அதைப்பற்றிச் சொல்வேன்...

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1