கதை கதையாம், காரணமாம் - பகுதி 10

மேகலா : கிருஷ்ணா! சமீபத்திய news ஒன்று. ’நம் முன்னோர்கள், எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, அத்திவரதரை குளத்துக்குள் வைத்திருக்கிறார்கள் என்றால், இனி அந்த பயம் தேவையில்லை. வரதரை, பொதுமக்கள் அனைவரும் தரிசிக்கும்படி இனி கோயிலில் பிரதிஷ்டை செய்யலாமே’ என்று நம்ம ஊரு ஜீயர், ஒரு அறிக்கை விட்டிருக்கிறார், கிருஷ்ணா. இந்தக் கருத்தை எல்லா ஜீயர்களும் ஒன்று சேர்ந்து பேசி முடிவெடுத்து, அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப் போகிறார்களாம். இதற்கிடையில், ஜூலை மாதம் 25-ம் தேதியிலிருந்து, வரதர், நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார், கிருஷ்ணா!

கிருஷ்ணர் : நல்ல முடிவா இருக்கே.... எத்தனையோ கோடிக்கணக்கான பக்தர்களுக்கும் தரிசனம் தர அத்திவரதர் முடிவெடுத்து விட்டால், அவரைத் தடுக்க யாரால் முடியும்...?

மேகலா : கிருஷ்ணா! நான் நேற்று ஒரு படம் பார்த்தேன். அதில், S. P. பாலசுப்ரமணியம் அப்பாவாகவும், பிரபுதேவா மகனாகவும் நடித்திருப்பார்கள். மகன் ஒரு பெண்ணைக் காதலித்திருப்பான். அந்தப் பெண் ஒரு பெரிய மந்திரியின் பொண்ணு. இவனோ, சாதாரணமானவரின் மகன். தனக்கு அந்தப் பெண் கிடைப்பாளோ, மாட்டாளோ என்று மகனுக்கு ஒரே கலவரமாக இருக்கும். அந்தப் பொண்ணு இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்று பிரமை பிடித்துப் போயிருப்பான். அப்பா, அவன் முகத்தைப் பார்த்து, ‘ஏதோ ஒன்றை, அதுவும் ஒரு பொண்ணைப் பார்த்துத் தடுமாறுகிறான்' என்று அவருடைய உள்மனது சொல்கிறது. அப்பொழுது, சன்னமாக, music இல்லாமல், T. M. S. பாடலை, S. P. B. பாடுகிறார், கிருஷ்ணா....

‘ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய்க் கோவைப் பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக’
- என்று உயிரையே வருடி விட்டாற்போல பாடுகிறார். மகனோ, அந்தப் பாடலின் வருடலினால், ‘அப்பா.......’ என்கிறான்.
‘நேற்றையப் பொழுது கண்ணோடு
இன்றையப் பொழுது கையோடு
நாளையப் பொழுது உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு’
- என்று அடுத்த சரணத்தைப் பாடி, மெல்லத் தொடத்.........தானே செய்தார். Hero அப்படியே உடைந்து போவான். அப்பாவின் மடியில் படுத்துக் கொண்டு, அழுது கரைஞ்சு போவான். அப்போ......, அப்பா...... ‘யார் அந்தப் பொண்ணு?’ என்று கேட்பார்.

கிருஷ்ணர் : இப்படித்தான்...., சில சமயங்களில், நம் மனது இருக்கும் குழப்பங்களில், உயிரை வருடும் இனிய பாட்டுக் கூட, உடைந்து அழச் செய்யும். மனிதன் எதற்குமே வசப்படாது முரண்பட்டு நிற்கும் போது, அவன் உள்ளத்தை உருக்கும் பாடல்களால், மனிதனின் மனம் கூட சரியாகிப் போகலாம், இல்லையா...? Comedy மாதிரி, பாட்டுப் பாடுவது கூட, மனதை லேசாக்கச் செய்யும் ஒரு வழிதான் இல்லையா....

மேகலா : கிருஷ்ணா! எனக்கு ஒரு பாட்டு ஞாபகம் வருகிறது. அதைக் கேளு, முதல்ல.....

’ஆண்டவன் படைச்சான்
ஏங்கிட்டக் கொடுத்தான்
அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான், என்னை
அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்’
‘உலகம் எந்தன் கைகளிலே
வெள்ளிப் பணமோ கைகளிலே
யோசிச்சுப் பார்த்தா நானே ராஜா
வாலிபப் பருவம் கிடைச்சது லேசா
உல்லாசம்... சல்லாபம்... எல்லாந்தான்...உண்டு...’
- என்று இந்தப் பாட்டுப் போகும். எங்க..., இதன் கதையைச் சொல்லு பார்க்கலாம்......

கிருஷ்ணர் : College students - லாம் சேர்ந்து, car-ல ஜாலியா ஊர் சுத்துறாங்களா....?

மேகலா : ஆமாம் கிருஷ்ணா..... கொஞ்ச நேரத்தில், car tyre, puncture ஆயிடும். அப்போ, அதே பாடலை, ரொம்ப slow-வாக,
’ஆண்டவன்....... படச்சான்......
எங்கிட்ட ....... கொடுத்தான்......
அனுபவி ராஜான்னு.... அனுப்பி வச்சான்
நல்லா...., அனுபவி ராஜான்னு.... அனுப்பி வச்சான்’
- என்று T. M. S. அழுமூஞ்சியாய்ப் பாடுவார். ரொம்பக் கலகலப்பாக இருக்கும், கிருஷ்ணா..... நீ சொன்னது மாதிரி...., நம் மனசுல இருக்கிறத வெளிப்படுத்துவதற்கு, ‘கதை’ ஒரு யுக்தி. அது போல, பாட்டுப் பாடுவது கூட, நம்முடைய மனசுக்குள்ளிருக்கும் உணர்வுகளை வெளியில் கொண்டு வந்து விடும் போல, கிருஷ்ணா! சரி, அடுத்த தலைப்பு என்ன, கிருஷ்ணா? நான் என்ன கதை சொல்லட்டும்....

கிருஷ்ணர் : ‘இயல்பாய் இரு’.... இந்தத் தலைப்பில் கதையைச் சொல்லு பார்க்கலாம்....

மேகலா : கிருஷ்ணா! இந்தக் கதைக்கு, உன்னைத்தான் வம்புக்கு இழுக்கப் போகிறேன்....

கிருஷ்ணர் : ஐயய்யோ.....! என்னை வம்புக்கிழுத்தாலும் சரி....., பரமசிவனை வம்புக்கிழுத்தாலும் சரி...., தலைப்புக்கு ஏத்த கதையைச் சொல்லி விடு.....

மேகலா : Okay, கிருஷ்ணா...... ஒரு நாள் Football match பார்ப்பதற்கு, கிருஷ்ணரும், அர்ஜுனனும் சென்றார்கள். அது, India - Pakistan-க்கு இடையில் நடக்கும் final match. ஜெயிப்பது என்பது இரு பாலருக்கும் கௌரவப் பிரச்னை. மிகுந்த பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் மத்தியில், match ஆரம்பமாகியது. Match பார்ப்பதற்கு, gallery-யில் கூட்டம் அலைமோதியது. இரு தரப்பு விளையாட்டு வீரர்களும், களத்தில் அணி வகுத்து வந்ததும், கூட்டத்தில் அவரவர் நாட்டு தேசியக் கொடியை அசைப்பதும், விசிலடிப்பதுமாக பரபரப்பில், ஒரு எதிர்பார்ப்பு கிளம்பியது. கிருஷ்ணரும், அர்ஜுனனும் பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்து, ஆட்டம் ஆரம்பமானதும், தங்கள் உற்சாகத்தைக் கைதட்டி வெளிப்படுத்தினார்கள்.

இந்திய வீரர்கள் மெல்ல, பந்தினைக் காலால் உருட்டி, goal post அருகில் கொண்டு வந்தனர். கூட்டத்தின் ஆரவாரம் விண்ணை முட்டியது. அப்பொழுது, சற்றும் எதிர்பாராமல், பாகிஸ்தான் வீரர், அந்தப் பந்தை லாவகமாக, தன் கால்களால் உதைத்து வேகமாக எதிர் அணிப் பக்கம் திருப்பி விட்டார். பாகிஸ்தான் ரசிகர்களின் விசில் சத்தம் அந்த அரங்கத்தையே அதிரச் செய்தது.

எதிரணிக்குச் சென்ற பந்தை இந்திய வீரர் ஒருவர் தடுத்து நிறுத்தி, அங்கிருந்தபடியே காலால் எட்டி உதைக்க, அது சற்றும் எதிர்பாராமல், goal post-க்குள் விழுந்தது. அர்ஜுனனும், கிருஷ்ணரும் எழுந்து நின்று கை தட்டி, ஆரவாரம் செய்தனர். அர்ஜுனன், கிருஷ்ணரைக் கட்டிப் பிடித்து, தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். ரசிகர்கள் dance ஆடினார்கள். ஒருவர் drums வாசித்தார். பாகிஸ்தான் வீரர்கள் இன்னும் serious ஆக விளையாட ஆரம்பித்தனர். அடுத்த 5-வது நிமிடத்தில், பாகிஸ்தான் வீரர் ஒரு goal போட்டார். இந்திய ரசிகர்கள் ‘உச்’ கொட்ட, கிருஷ்ணர் எழுந்து கை தட்டி, 'good shot' என்று comment அடித்து உற்சாகப்படுத்தினார்.

அர்ஜுனனுக்கு, கிருஷ்ணரின் செயல் சற்று பிடிக்கவில்லை. ‘கிருஷ்ணா, நீ யாரைப் பாராட்டுகிறாய் தெரியுமா?’ என்று கேட்டான். அதற்கு கிருஷ்ணர், ‘ஏன், goal போட்டவரைப் பாராட்டுகிறேன். அந்த shot எந்த angle-ல் goal post-க்குள் போனது பார்த்தாயா? Very good shot. அதைத்தான் பாராட்டினேன்’ என்றார்.
அர்ஜுனன், ‘கிருஷ்ணா! அது பாகிஸ்தான் வீரர் போட்ட goal; நாம் இந்தியர்கள் இல்லையா...., தேசப்பற்று வேண்டாமா, கிருஷ்ணா?’ என்றவுடன், ’தேசப்பற்றா....? நாம் football match பார்க்க வந்தோமா...., ‘வந்தே மாதரம்’ பாட வந்தோமா? Match பார்க்க வந்த இடத்தில், வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள்: யார் goal போட்டார்கள்; அதை எப்படிப் போட்டார்கள் என்றுதான் பார்த்து ரசிக்க வேண்டுமே ஒழிய...., விளையாட்டைப் பார்க்க வந்த இடத்தில், பாகிஸ்தான் தேசத்து வீரன், நம்ம தேசத்து வீரன் என்று பார்த்து, B. P. ஏறி கொந்தளிப்பு ஆக வேண்டுமா....? விளையாட்டு என்பது, நம்மை மகிழ்விக்கச் செய்யும் பொழுதுபோக்கு. மகிழ்ச்சியாக, இயல்பாகப் பார்க்கப்  பழகு என்று கிருஷ்ணர் சொல்லவும், அர்ஜுனன், ‘Yes, boss' என்றான்.
என்ன கிருஷ்ணா, ‘இயல்பாய் இரு’ என்பதற்கான கதையைச் சொல்லி விட்டேனா....?

கிருஷ்ணர் : ம்...... பரவாயில்லை.....

மேகலா : சரி, இதற்கு இன்னொரு கதை அடுத்த பகுதியில் சொல்கிறேன், சரியா....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2