கதை கதையாம், காரணமாம் - பகுதி 11

மேகலா : கிருஷ்ணா! ‘இயல்பாய் இரு’ என்ற தலைப்பிற்கு மற்றொரு கதை இந்த வாரம் சொல்வதாகச் சொல்லியிருந்தேனல்லவா....? இதோ, அந்தக் கதை....

ஒரு சினிமா நடிகை எப்பொழுதும், make-up-போடு இருப்பவள்; camera முன்புதான் அவளுக்கு வாழ்க்கை.... அவள் திரையில் வந்தாலே, மக்கள் ஆரவாரம் செய்வதும், கரகோஷம் எழுப்புவதும், சர்வ சாதாரண நிகழ்வுகள். புகழின் உச்சியில் இருக்கும் அவளுக்கு, ஆடம்பரம் இல்லாமல், முக்கியமாக make-up இல்லாமல், simple ஆக, ஒரு cotton saree கட்டிக் கொண்டு, கண்ணாடி வளையல் மாட்டிக் கொண்டு, casual ஆக ஊரைச் சுற்றி வர வேண்டும் என்று ஆசையாக இருக்கும். அந்தச் சின்ன ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாமல், தினந்தோறும் camera முன்னாடி நின்று நடிப்பது என்பது, நித்திய வேலையாகிப் போனது. அன்று, அவளுக்கு ஒரு நாள் விடுமுறை கிடைத்தது. உதவியாளர்கள் பலர் வீட்டில் இருந்தாலும், காலையில் எழுந்து, குளித்து, simple ஆக dress பண்ணிக் கொண்டு, make-up இல்லாமல், market செல்லக் கிளம்பினாள்.

உதவியாளர்கள், ‘madam, என்ன வேண்டும் சொல்லுங்கள், நாங்கள் வாங்கி வருகிறோம்’ என்றார்கள். ‘No, யாரும் என் கூட வர வேண்டாம். நான் மட்டும் தான் போகப் போகிறேன். நீங்க கூட வந்தாலே, ‘அம்மா வாங்க, அம்மா வாங்க’ என்று மக்கள் கூட்டத்தைப் பார்த்து, தேவையில்லாமல் அலப்பறையைக் கூட்டி விடுவீங்க! நான் இந்தத் தொந்தரவு எதுவும் இல்லாமல், சுதந்திரமாகச் சென்று வரப் போகிறேன்’ என்று சொல்லவும், உதவியாளர்கள் விலகிக் கொண்டார்கள்.

Driver, பவ்யமாகக் காரின் கதவைத் திறந்து விட்டான். நடிகையோ, ‘நான் auto-வில் போய்க் கொள்கிறேன்; car வேண்டாம்’ என்று சொல்லி விட்டு, ‘விறு விறு’வென நடந்தாள். அங்கு சென்ற auto ஒன்றை நிப்பாட்டி, அதில் ஏறிக் கொண்டாள். Auto driver, 'எங்கம்மா?’ என்று மட்டும் தான் கேட்டான். அவன், ஒரு நடிகை, அதுவும் கனவுக்கன்னி, ஒரு நாளைக்கு சில லட்சங்களைச் சம்பளமாகப் பெறுபவள், தன்னுடைய வண்டியில் ஏறுகிறாள் என்று யோசிக்கவேயில்லை. நடிகையும், ‘நல்ல வேளை, ஆட்டோக்காரர் நம்மை கவனிக்கவில்லை’ என்று தனக்குள் சிரித்தவாறே, ‘market போகணும்’ என்று சொல்லவும், ஆட்டோக்காரர், market-ல் இறக்கி விட்டார்.

அங்குமிங்குமாக, மக்கள் கூட்டம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. Auto-விலிருந்து இறங்கி, நடிகை, கொஞ்சம் பரபரப்புடன், ‘நம்மை யாராவது கவனிக்கிறார்களா’ என்று நோட்டமிட்டாள். ஆனால், மக்களோ, அவரவர் வேலையில் busy-யாக இருந்தார்கள். நடிகைக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகக் கூட இருந்தது. Market-ன் முதல் கடையில், காய்கறிகள் fresh-ஆகவும், செழிப்பாகவும் இருந்தது. அந்தக் கடையில், காய்கறி விற்கும் அக்கா, அவளைப் பார்த்து, ‘அம்மா, இங்க வாங்கம்மா, தக்காளிப்பழம் பாரு, ‘தளதள’ன்னு இருக்கு; கிலோ 30 ரூபாய்...., பாரு, புடலங்காய் பாரு..., இப்போ பறிச்சது; 1/2 கிலோ 30 ரூபாய்’ என்று ஒவ்வொரு காய்கறியின் விலையைச் சொல்லி, அவளை வாங்கச் சொல்லி வியாபாரம் செய்தாள். நடிகைக்குக் கொஞ்சம் நம்ப முடியவில்லை. ‘நம்பள, கடைக்கார அக்காவுக்கும் அடையாளம் தெரியலையா?’ என்று யோசித்துக் கொண்டே, அடுத்த கடையைப் பார்த்தாள்.

அங்கு ஒரு பெரியவர், ‘பாப்பா, கீரைக்கட்டைப் பார்த்தியா; உன்னைப் போலவே அழகா சிரிக்குது. கொத்துமல்லிச் செடியைப் பாரு! ஒரு கட்டு 10 ரூபாதான்; பளிச்சுனு இருக்கு பாரு’ என்று மேலும் கொஞ்சம் தண்ணி தெளித்து, fresh காய்கறியை மேலும் fresh ஆகக் காட்டினாரே ஒழிய, நடிகையை அடையாளம் காணவில்லை. Casual ஆக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அந்த நடிகைக்கு, இந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியவில்லை. கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அப்பொழுது, காய்கறி வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்த ஒருவர் மீது, அந்த நடிகை தற்செயலாக மோதி விட, ‘ஏம்மா! கண்ணு தெரியலையா? கீழே விழுந்தியானா, நான் மோதித் தள்ளி விட்டேன்னு சொல்லி சண்டை போடுவீங்க! இந்தப் பொம்பளைங்களே இப்படித்தாண்ணு’ சொல்லிக் கொண்டே நகர்ந்தான்.

அவ்வளவுதான், ‘Luxury car' ஒன்றுக்கு நான்கு வைத்திருக்கும் நடிகை...., ஒரு படத்திற்கு சில கோடிகளை சம்பளமாக வாங்குபவள்; அவளுடைய சின்ன அசைவிற்காக தவம் கிடக்கும் ரசிகர் பட்டாளம்; அவளுடைய உடையையே இன்று style ஆகக் கடைப்பிடிக்கும் பெண்கள் கூட்டம்; ’இத்தனையும் தனக்கு விலங்குகள் என்று நினைத்தோமே; ஆனால், இந்த விலங்குகள் தான் தனக்கு ஆபரணங்கள். இந்த ஆபரணங்கள் இல்லாமல் இயல்பாகத் தன்னால் ஒரு நிமிடம் கூட வாழ முடியாதோ’ என்று நினைத்து, தன் driver-க்கு phone பண்ணி car-ஐ எடுத்து வரச் சொன்னாள்.

அவளைப் பொறுத்த மட்டில், யதார்த்தமாய் இல்லாமல் இருப்பதுதான், அதாவது நடிப்பதுதான் யதார்த்தம்!

கிருஷ்ணர் : பேஷ்! நல்லா கதை விட்டிருக்க.... ஆமாம்; நடப்பது ஆடி மாதம் தானே..... தேரோட்டம் நடந்து முடிந்திருக்குமே! நீ ஒண்ணுமே சொல்லவில்லை; என்ன ஆச்சு உனக்கு....?

மேகலா : கதை கதையாம், காரணமாம்...... upload பண்ண ஆரம்பிச்சாச்சு, கிருஷ்ணா! இடையில், ஷீத்தல் வேறு இங்கு வந்து விட்டாள். அதற்கிடையில், எங்கள் வீட்டின் மதிப்பு மிக்க ‘எங்கள் மச்சான்’ காலமானார். அதன் காரணமாகவும், கொஞ்சம் எழுதுவதை நிறுத்தியிருந்தேன். ஆண்டாள் தேரோட்ட நிகழ்ச்சிகளை, simple ஆக ஒரு vlog எடுத்திருந்தேன். ஆனால், இதை எதுவும் உன்னிடம் discuss பண்ணவே முடியவில்லை.

கிருஷ்ணர் : பரவாயில்லை, மேகலா..... சரி...., நான் அடுத்த தலைப்பு தரவா....?

மேகலா : காத்திருக்கிறேன், கிருஷ்ணா....

கிருஷ்ணர் : ‘தர்மசங்கடமாக’ நீ ஏதாவது feel பண்ணியிருக்கியா, மேகலா?

மேகலா : என்ன கிருஷ்ணா.....? புதுசா கேக்குறியே... தர்மசங்கடமான நிலை எனக்கு வந்திருக்கா என்று நினைவில்லையே, கிருஷ்ணா.... சுவாரஸ்யமான சம்பவம் நடந்திருந்தால், ஞாபகம் இருந்திருக்குமோ, என்னவோ...? ஏன் கிருஷ்ணா..... உனக்கு ஏதாவது ’தர்மசங்கடம்’ நிகழ்ந்திருக்கிறதா....?

கிருஷ்ணர் : பாத்தியா... வாயக் குடுத்து வாங்கிக்கிறேன்... இதுதான் தர்மசங்கடமோ....? இருந்தாலும் இதற்கு ஒரு அழகான கதை இருக்கு.... அது உனக்குத் தெரியுமா....?

மேகலா : என்ன கதை..... எனக்குத் தெரியல.... நீதான் சொல்லேன்....

கிருஷ்ணர் : ஒரு முறை யார் அழகு என்று ஸ்ரீதேவிக்கும் மூதேவிக்கும் சர்ச்சை உண்டாகியது. இதற்குத் தீர்ப்பு சொல்ல நாரதரை அணுகினார்கள். இருவரும், ‘எங்களில் யார் அழகு என்று நீங்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்கள். நாரதர் திகைத்துப் போனார். என்ன தர்மசங்கடமான நிலை....! ஸ்ரீதேவி அழகு என்றால், மூதேவி கோபித்துக் கொண்டு, தன் வீட்டிலேயே தங்கி விடுவாள். மூதேவி தான் அழகு என்று சொன்னால், ஸ்ரீதேவி கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி விடுவாள். ‘இதென்னடா, நமக்கு வந்த சோதனை’ என்று ரொம்பவும் யோசித்து, இருவரையும் பார்த்து, ‘நீங்கள் இருவரும் முன்னும் பின்னுமாக நடந்து காட்டுங்கள்’ என்று கூறினார்.

இருவரும், fashion parade style-ல் நடந்து காட்டுகிறார்கள். நாரதர் தீர்ப்பு சொல்கிறார்; ‘ஸ்ரீதேவியாகிய லக்ஷ்மி தேவியார் வரும் போது அழகு; மூதேவி போகும் போது அழகு’ என்று சொல்லி, லக்ஷ்மியை வீட்டிற்குள் வரச் செய்து, அவள் அக்காவான மூதேவியை போகச் சொல்லி தீர்ப்பளிக்கிறார். தர்மசங்கடத்தை, புத்திசாலித்தனமாக்கி, பிழைத்துக் கொண்டார், பார்த்தாயா?

மேகலா : Oh! கதை ரொம்ப super, கிருஷ்ணா. இந்த மாதிரி சிக்கலாகிப் போகும் தருணத்தில், புத்திசாலித்தனமாகத் தீர்ப்பு சொல்லும் கதை ஒன்றை நான் அடுத்த episode-ல் சொல்கிறேன், கிருஷ்ணா...., சரியா....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2