பாலம் - பகுதி 2

மேகலா : சென்ற வாரப் பகுதியின் முடிவில், ‘உறவுப் பாலங்களை’ப் பற்றிக் கூறுவதாகக் கூறியிருந்தேனல்லவா...? உறவுப் பாலங்கள் என்பது, இரு பக்கத்தாருக்கும் பொதுவாக இருப்பவர்கள்தான் கிருஷ்ணா, பாலமாகச் செயல்படுகிறார்கள். உனக்குத் தெரியுமா கிருஷ்ணா, வேறு வேறு வீடுகளில் பிறந்து, வேறு வேறு சூழ்நிலையில் வளர்ந்து, கணவன் மனைவியானவர்களின் பாலமாக இருப்பவர்கள் யார் தெரியுமா....?

கிருஷ்ணர் : நீதான் சொல்லேன்...

மேகலா : அப்பப்ப நடக்கும் சிறு சிறு சண்டைகள், அல்லது வெடித்து விடும் கருத்து மோதல்கள் எல்லாம் காணாமல் போவதற்குக் கூட, இந்தப் பாலங்கள் தான், அதாவது குழந்தைகள் தான் முதல் காரணமாகிறது.

கிருஷ்ணர் : பரவாயில்லையே.... interesting ஆக இருக்கிறதே....! இந்த உறவுப் பாலங்களை இன்னும் விளக்கிச் சொல்லேன்....

மேகலா : கணவனுக்கும் மனைவிக்குமிடையே சரியான புரிதல் வரும் வரைக்கும்; விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் வரும் வரையிலும், அவர்களுக்குள்ளே நடக்கும் சண்டைகள் கூட, குழந்தையை முன்னிறுத்தியே மறைந்து போகிறதென்று நான் நம்புகிறேன். ‘பாப்பா, பசிக்கு அழுது, உங்கள அப்புறம் பேசிக்கிறேன்’ என்று தள்ளிப் போடப்படும் சண்டை, பாப்பா சிரிச்சா, தானும் சிரித்து, அப்பாவிடம் கை நீட்டித் தாவும் போது, இருவருக்கும் வந்த சண்டை, சற்றே ஒதுங்கிக் கொள்கிறது.

கிருஷ்ணர் : ரொம்பப் பீடிகையெல்லாம் போடுற.....

மேகலா : இந்தச் சண்டை மட்டுமல்ல, கிருஷ்ணா..... கருத்து மோதல்களை avoid பண்ணி, உறவுகளை சுமுகமாக வைப்பதற்கு மட்டுமல்ல, இரண்டு உறவுகளிடையில் ‘சுலபமாக’ உறவு நெருங்குவதற்குக் கூட, இந்தப் பாலம் உதவுகிறதா, இல்லையா....?

கிருஷ்ணர் : எந்த உறவைச் சொல்லுகிறாய்....?

மேகலா : மாமியாரும் மருமகளும் நெருங்கிப் பேசுவதற்குக் கூட, இந்தப் பிஞ்சுப் பாலங்கள் சௌகரியமான காரணங்களாகி விடுகின்றன, கிருஷ்ணா! குழந்தையாய் இருக்கும் போது, குளிப்பாட்டுவதிலிருந்து, மருந்து கொடுக்க, விளையாட்டுக் காட்ட என மாமியாரைத் தேடும் மருமகள், குழந்தை வளர்ந்து, சிறுமி, சிறுவரான பின்பு, கதை சொல்ல, கடைக்குக் கூட்டிச் செல்ல, விளையாட என்று ஒவ்வொரு காலக்கட்டத்திலும், அம்மாவுக்கு வேலை இருக்கும் போதெல்லாம், substitute ஆக செயல்படும் பாட்டியிடம் பிரியம் காட்டும் குழந்தைகள் தான், வீடுகளில் உறவுகள் சுலபமாகப் பேசிக் கொள்வதற்கு உதவும் mobile பாலங்கள் என்று நினைக்கிறேன், கிருஷ்ணா.

கிருஷ்ணர் : ஏது..... இங்கிருந்து செய்திகளை அங்கு போய்ச் சொல்லுமா....?

மேகலா : ஏன் கிருஷ்ணா...? ‘மாமியார், மருமகள்’ என்று இக்கரையில் ஆரம்பித்த ஒரு formal உறவு, இந்தப் பாலங்களின் வழியாகக் கடந்து, ’அம்மா, பொண்ணு’ என்ற அளவில் நெருக்கமாகி விடுகிறதல்லவா...?

கிருஷ்ணர் : Oh...... ஓ......ஓ....., நீ அப்படிச் சொல்லுகிறாயா...... அதென்னவோ நிஜம்தான். பிள்ளைகளை வைத்து சண்டையெல்லாம் வராதே....

மேகலா : சண்டையெல்லாம் வேறு காரணத்துக்காகத்தான் வரும் கிருஷ்ணா.... ஆனாலும், ஒரு குடும்பத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகள், கணவன் மனைவிக்கிடையே, மாமியார் மருமகளுக்கிடையே, பாலங்களாக அமைந்து, பிரச்னைகளைக் கடக்கவும், உறவுகளின் நெருக்கடியைத் தாண்டிச் செல்லவும், அழகாக உதவுகிறது, கிருஷ்ணா.

கிருஷ்ணர் : ஏன் மேகலா....? குடும்பத்துக்குள் மட்டும் தான் பாலங்கள் உண்டா....? உறவை இணைப்பதற்கு வேறு பாலங்கள் இல்லையா.....? நான் ஏன் கேட்கிறேன் என்றால், இக்கரையையும், அக்கரையையும் இணைப்பதுதான் பாலம் அப்படீன்னா...., இரண்டு கரையில் இருக்கும் உறவுகளிடம் செய்திகளைக் கொண்டு சேர்க்கும் பாலம்...., ஏதாவது சொல்லேன்.

மேகலா : இப்பல்லாம் phone தானே, கிருஷ்ணா.... whatsapp...., facebook.... twitter என்று இருப்பதெல்லாம்.... இதற்கு முன்னே தகவலைக் கொண்டு சேர்ப்பதற்கு ஒரு பாலம் இருந்தது; இன்னும் இருக்கிறது. அது இன்று செயல்படாது இருக்கிறது, கிருஷ்ணா..... காதலர்களிடையே, காதலை வளர்க்கும்; பிரிவு நேரத்தில், தாங்காத பிரிவை, மன உணர்வை வெளிப்படுத்தி, அன்பைப் பெருக்கும்; official ஆக செயல்படும் போது, அது பொருளின் தரத்தை உயர்த்திக் காட்டும்; வாங்குவோரின் மன இயல்பை வெளிக் காட்டும். பொருள் வாங்குவோருக்கும், விற்போருக்கும் நல்ல நட்பினை உருவாக்கும். அது என்ன தெரியுமா.....?

கிருஷ்ணர் : என்ன, நீ பாட்டுக்கு வரிசையாகச் சொல்லி, என்னை எதிர்பார்ப்பில் எகிற வைக்கிறாயே....?

மேகலா : சென்ற தலைமுறையினரில், எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கையில், விலை மதிப்பில்லாத ‘பாலம்’ ஒன்றிருந்தது..... அதுதான் ‘கடிதம்’.... இன்றைய தலைமுறையினர் மறந்து போனது. விரலால் ஒற்றி, ஒற்றி, தான் தமிழில் நினைப்பதை, தப்புத் தப்பான ஆங்கிலத்தில் எழுதி message கொடுத்து...., அழகான ‘கடிதப் பாலத்தை’ மறந்தே போய் விட்டார்கள், கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : அட......! ஆமாம்..... நீ சொல்லுவது வாஸ்தவம் தான். நீ, கடிதம், அதாவது letter எழுதியிருக்கிறாயா, மேகலா.....?

மேகலா : ஐயோ! கிருஷ்ணா! நானெல்லாம் சென்ற தலைமுறை ஆளு..... ஷீத்தல், துபாயில் இருக்கும் வரைக்கும், regular ஆக letter எழுதியிருக்கிறேன், கிருஷ்ணா.... அந்த letter அப்படியே, என் மனசுக்குள்ள எத்தனை பிரியம், பாசம், ஏக்கம், இயலாமை இருக்குமோ, அத்தனையையும் கொண்டு போய்ச் சேர்க்கும்.

கிருஷ்ணர் : என்ன...., ‘உன் பிரிவு எனக்குத் தாங்கல...., அப்படி இப்படீன்னு ‘பீலா’ உடுவியா....?

மேகலா : நான் அப்படியெல்லாம் எழுதியிருந்தால், ஒரு முறை வாசித்து விட்டு தூக்கி எறிந்திருப்பாள். முதல் page, குசலம் விசாரிப்பது, ஆங்காங்கே உபதேசம்,  அடுத்து சில jokes..., அடுத்து 2 recipes (ஒரு N.V., இன்னொன்று veg.), 2 snack items (முறுக்கு, வடை இப்படியாக...), இறுதியாகக் கொஞ்சம் ‘புறணி’, கொஞ்சம் ‘கிசு கிசு’, சில அரசியல் புறணி என்று என் கடிதம், ஒரு வார magazine மாதிரி இருக்கும்! இடையிடையே, ஷீத்தலைக் கிண்டல் பண்ணிக் கொண்டே...., கடிதம் செல்லும். கடைசியில், ஹரி ஒரு paragraph எழுதியிருப்பான்.....

கிருஷ்ணர் : வாசிப்பவருக்கு, ‘இப்பவே அம்மாவைப் பார்க்க வேண்டும்’ என்று ஆவலைக் கிளப்பி விடுவாயா.... ஆனால், சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. வாசிக்கும் 10 நிமிஷத்தில், ஸ்ரீவியைத் துபாயில் கொண்டு போய் நிறுத்தி விடுவாய் போலிருக்கிறதே.... இப்பத் தெரியுது...., நிறுத்தாமல் பேசுவது எங்கிருந்து வந்தது என்று! சரி...., இப்படி உயிரோட்டமான பாலங்கள் வேறு ஏதாவது இருக்குதா, மேகலா....?

மேகலா : ‘கடிதம்’ என்ற தூதுவன், பாலமாக இருந்தது போல, பறவைகள் கூட, பல இடங்களில் பாலமாகச் செயல்பட்டிருக்கிறதே, கிருஷ்ணா...!

கிருஷ்ணர் : ஆமால்ல.... பல இடங்களில் நாம் கேட்டிருக்கிறோமில்ல... கிளியிடம் பேசி, ‘எனக்காகத் தூது செல்வாயா’.... என்று கேட்பார்கள். கிளி, காதலி சொல்லியனுப்பியதை, காதலனிடம் சென்று சொல்லும், இல்லையா...? நாரையைத் தூது விட்டிருக்கிறார்கள். குயிலைத் தூது விடுவார்கள். கர்ம சிரத்தையோடு, இந்தப் பறவைகளும், காதலைக் கொண்டு சேர்த்து விடும்...!

மேகலா : கிருஷ்ணா! நீ ஒன்றை மறந்து விட்டாயா.... ஒரு கால கட்டத்தில், போர்க்களத்திற்கோ, எதிரிகள் இருக்கும் இடத்திற்கோ சென்றிருக்கும் ஒற்றர்களுக்குக் கூட, புறா மூலம் செய்தி சொல்லி அனுப்புவார்கள். அந்தப் புறாவும், ‘நச்சுனு’ சரியான இடம் சென்று சேர்ந்து, செய்தியைக் கனக்கச்சிதமாகச் சேர்த்து விடும். மனிதன் எத்தனை புத்திசாலித்தனமாக இந்தப் பாலங்களை வடிவமைத்திருக்கிறான்....! பார்த்தாயா, கிருஷ்ணா....?

கிருஷ்ணர் : ஆமாம், ஆமாம்... சரி, பிரச்னைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் பாலங்களை நீ அறிவாயா, மேகலா...? திருமணமான ஒரு பொண்ணு, சண்டை போட்டுக் கொண்டு, அம்மா வீடு சென்று விடுவாள். அவளை புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதில் பாலமாகச் செயல்படுபவர்கள், மந்திரம் மாதிரி பேச வேண்டும்; தந்திரமாகச் செயல்பட வேண்டும். கொஞ்சம் வார்த்தை தவறினாலும், பிரச்னை court வரைக்கும் போய் விடலாம். இந்தப் பாலங்கள், இருவர் நலத்திலும் அக்கறை கொண்டவர்களாக இருந்தால் மட்டுமே, எடுத்த காரியத்தில் ஜெயிக்க முடியும்.

மேகலா : இது பற்றிய எனது கருத்துக்களோடு அடுத்த வாரம் சந்திப்போமா, கிருஷ்ணா....?

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2