பாலம் - பகுதி 3

மேகலா : கணவன் - மனைவியிடையே வரும் பிணக்கைச் சரி செய்ய, இருவர் நலத்திலும் அக்கறை கொண்ட பொதுவான நபர்தான், பாலமாகச் செயல்பட்டு அந்தக் காரியத்தில் வெற்றி பெற முடியும் என்று நீ சொல்லியிருந்தாய், கிருஷ்ணா! இந்த மாதிரி விவகாரத்தில் தலையிடுபவர்கள், ‘நாட்டாமை’ மாதிரி தன்னை நெனச்சிக்கிட்டு, காரியத்தையே கெடுத்து விடுபவர்கள் தான் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

இன்று, இந்த மாதிரி விஷயத்திற்கு, மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்கள் செய்த தவறை உணர வைக்கும் counseling செய்வதற்கான ‘மன நல டாக்டர்கள்’ நிறைய பேர் இருக்கிறார்கள், கிருஷ்ணா! எனக்கென்னவோ, யாராக இருந்தாலும், பிரச்னையில் சிக்கிக் கொண்டவர்களை, அவரவர் பிரச்னையை, அவரவர்களை உணரச் செய்வதே, பாலமாய்ச் செயல்படுபவர்களின் பெரும் பங்கு என்று நான் நினைக்கிறேன்.

கிருஷ்ணர் : அதிலும், குறிப்பாக, தப்புச் செய்தது பெண்பிள்ளையாக இருந்தாலும், இதமாகப் பேசி, பெண்மையைப் பெருமைப்படுத்திப் பேச வேண்டும். அது மட்டுமல்ல, உரிமைப்பட்டவர்களாய் இருக்கும் பட்சத்தில், அதாவது, அம்மா, அப்பா, friend யாராக இருந்தாலும், எல்லை வரை சென்று, கொஞ்சம் படிந்து பேசி, பாதிக்கப்பட்டவர்கள் முறைத்தால், ஆறுதல் கூறி... யப்பா.... ஒரு வழியாக இந்தப் பாலம், சமாதானப்படுத்தியே, பிரச்னைக்குரியவரை, அக்கரைக்கு அழைத்துச் சென்று விடும்.....

மேகலா : ஆமாமாம்.... அது சரி....; நீ, வேறு எப்படிச் சொல்லுவாய், கிருஷ்ணா....! மனம் தடுமாறி...., போரில் தளர்ச்சியைக் காட்டிய அர்ஜுனனின் depression-ஐயே முறியடித்து, வைத்தியம் பார்த்த மஹா வைத்தியனல்லவா.... ஒருவருடைய மனத்தின் சுளுக்கை எடுப்பதென்றாலே உனக்கு rusk சாப்பிடுவது மாதிரிதானே, கிருஷ்ணா....!

கிருஷ்ணா...., இந்த மாதிரி சின்னச் சின்ன உறவுப் பாலங்களுக்கிடையில் வரும் விரிசல்களைச் சரி செய்யும் பாலங்கள்; ஒவ்வொரு வீடுகளிலும் நாம் எப்போதும் பார்ப்பதுதான். அதே மாதிரி, உறவுகளுக்கிடையில் அன்பைப் பெருக்குவதற்குக் காரணமாக இருக்கும் பாலங்கள்; அது ஒரு மாதிரி. இதெல்லாம் குடும்பத்திற்குள்ளேயே நாம் கட்டிக் கொண்ட பாலங்கள். இதே மாதிரி, ஊர்ப்பிரச்னைகளுக்கிடையில் கூட சிலர், மக்களின் நன்மை கருதி, அந்தப் பிரச்னைகளை முடித்து வைப்பவர்கள் இருக்கிறார்களே....., அவர்கள் பணி, காலத்தையும் வென்று நிற்கும், இல்லையா கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : அப்படி யாரையாவது உனக்குத் தெரியுமா, மேகலா....?

மேகலா : கிருஷ்ணா...., ‘ஆத்திசூடி’ எழுதிய ‘ஔவையார்’ தவிர, உதாரணம் சொல்வதற்கு வேறு ஒரு பொருத்தமானவர் இருக்க முடியுமா, கிருஷ்ணா? அதியமானுடைய ‘தகடூர்’ என்ற வளம் பொருந்திய குறுநில நாட்டின் மீது ‘தொண்டைமான்’ என்னும் பக்கத்து நாட்டு அரசனுக்கு ஒரு கண். அதனால், எப்ப வேண்டுமானாலும் போர் நிகழலாம் என்ற சூழ்நிலை. போர், போர் என்றே தினமும் பார்த்து அலுத்துப் போன தகடூர் மக்களின் சார்பாக, ஔவையார் தொண்டைமானைப் பார்க்கப் போனார்.

‘தகடூர் மக்களுக்கு தினமும் போரைப் பார்த்ததால், அது அவர்களுக்கான பயிற்சியே ஒழிய, வலிமை குறைந்ததாக அர்த்தம் கிடையாது. தம்பி, நீங்கதான் ரொம்ப நாளாக ஆயுதப் பயிற்சியே இல்லாமல் இருக்கிறீர்கள்; உடம்பைப் பார்த்துக்கோங்க’ என்று யதார்த்தமாய்ப் பேசுவது போலப் பேசி, ”மக்களை அவரவர் கடமையைப் பார்க்கச் சொல்லுங்கள்’ என்று ‘தில்’லாகப் பேசியிருக்கிறார்.

கிருஷ்ணர் : போர் நின்றதா....?

மேகலா : போர் நின்ற....தாவா....? நிக்காமல் போகுமா...! Boss, இது வரலாற்று நிகழ்ச்சி boss...! ஔவையின் கூர்த்த ஞானத்திற்கும், கல்வித் தகுதிக்கும், சமூக அக்கறைக்கும், கிடைத்த பரிசு.

கிருஷ்ணர் : So, இங்கு பாலமாக செயல்பட்டது ஔவையார்தான், இல்லையா....

மேகலா : அதுவும், பெண்மையின் கை பட்ட தமிழ்ப்பாலம், கிருஷ்ணா.... இந்தப் பாலம் பகையையே முறியடித்திருக்கிறது, கிருஷ்ணா. இப்பல்லாம் இரண்டு ஊர்களுக்கிடையே, இரண்டு மாநிலங்களுக்கிடையே வரும் தண்ணீர்ப் பிரச்னை, வேறு சில பிரச்னைகளைக் கூட, இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி, அல்லது மேலாண்மை வாரியம் அமைத்து சரி செய்வார்கள். இந்தப் பேச்சு வார்த்தையில், சிலர் பாலமாகச் செயல்பட்டு, ஒரு நல்ல காரியம் நடப்பதற்கு, முழுமூச்சாகச் செயல்படுவார்கள்.

இப்ப ‘பீரியடில்’ இந்த மாதிரி செயல்பட்டு, இருநாட்டினை ஒன்றுபடச் செய்வதற்கு, பகையை மறக்கடிக்கச் செய்தவருக்கு, Nobel Prize கூட உண்டு, கிருஷ்ணா. அதிலும் 90-களில் ‘நோபல் பரிசு’ பெற்ற Kissinger என்ற அமெரிக்க வெளிநாட்டுத் தூதுவர், அன்றைய தினங்களில் எல்லோராலும் மிகவும் பிரபலமாகப் பாராட்டப் பெற்றவர். இன்றும், இந்த மாதிரி சமாதானம் பேச வருபவர்களை வேடிக்கையாக, ‘கிஸ்ஸிஞ்சர்’ என்று உதாரணம் சொல்லி நக்கல் படுத்துவதும் கூட உண்டு, கிருஷ்ணா....!

கிருஷ்ணர் : ‘வந்துட்டான்யா... ‘நம்ம கிஸ்ஸிஞ்சர்’ என்றா....?

மேகலா : ஹி....ஹி....ஹி.... ஆமாம், கிருஷ்ணா....

கிருஷ்ணர் : நம்ம மக்களுக்குத்தான், எந்த வேலை செய்தாலும், அதையும் நக்கலடித்து விடுவார்களே...! இப்ப... அப்படி யாராவது இருக்கிறார்களா, மேகலா....?

மேகலா : அதுக்குத்தான்...., வெளியுறவுத்துறை அமைச்சர் என்று இருக்கிறார்களே, கிருஷ்ணா.... நம் நாட்டில் இப்போ, இந்தப் பதவியை வகிப்பவர் ஒரு தமிழர் கிருஷ்ணா.... பெயர் ஜெய்ஷங்கர். Indian Ambassador to U.S.A வாக இருந்தவர்; வெளிநாட்டுச் செயலாளராகவும் இருந்தவர்.

கிருஷ்ணர் : தூதுவராக இருந்தவரை..., மந்திரியாக்கி உள்ளனரா.....? Election-ல நிக்கல...., மக்களைச் சந்திக்கல...., பாராளுமன்ற உறுப்பினராகாமல்..., எப்படி? அப்போ, அவருடைய உண்மை, நேர்மை, sincerity, அவரை இந்தப் பதவியில் அமர்த்தியிருக்கிறது. ஏன் மேகலா...., வெளியுறவுத் துறை அமைச்சரின் செயல்பாடுகள் என்னென்ன என்று உனக்கு ஏதாவது தெரியுமா.....?

மேகலா : கிருஷ்ணா! ‘வெளியுறவுத்துறை’ என்று சொல்லும் போதே, தெரிந்து விடுகிறது; வெளிநாடுகளுடன் இந்தியாவுடனான நட்பு வலுப்பெறுவது, நம்ம நாட்டு வெளியுறவுக் கொள்கைகளை உலக அரங்கில் வலியுறுத்துவது, வாணிகம், வியாபாரம், வெளிநாட்டுப் பொருட்களை நம் நாட்டிற்கு இறக்குமதி செய்வது போன்ற செயல்களில், இரு நாடுகளுடனும் சுமுகமான உறவை ஏற்படுத்துவது, அதைத் தக்க வைப்பது, வெளிநாடுகளில் இருக்கும் நமது இந்திய நாட்டுத் தூதரகத்தை முறையாக வழிநடத்துவது, நம்ம நாட்டு மீனவர்களோ, ராணுவத்தினரோ, அல்லது வேறு சம்பவத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவரோ வெளிநாடுகளில் சிறை வைக்கப்படும் போது, பேச்சு வார்த்தை நடத்தி ஆவன செய்வது, அவர்களை வெளிக் கொணர்வது, நம்ம நாட்டவர்கள், வெளிநாடுகளில் சிக்கல்களைச் சந்திக்கும் போது, அந்த நாட்டு முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நம்ம நாட்டு மக்களைக் காப்பாற்றுவது, U.N. மாதிரியான உலக அரங்கில், நமது நாட்டின் கருத்தை எடுத்துச் சொல்வது என்பது மாதிரியான வேலைகள்.... மொத்தத்தில், நம்ம நாட்டின் கௌரவமே இவர் கையில்தான் என்று நினைக்கிறேன், கிருஷ்ணா....!

கிருஷ்ணர் : அப்போ, இப்படிப்பட்ட பாலத்தை உருவாக்குபவர்கள், உறுதியான பாலமாக எழுப்ப வேண்டும், இல்லையா...

மேகலா : பின்ன..., தீவிரவாதிகளுக்கு எதிரான நம்ம நாட்டுக் கொள்கைகளை, நடவடிக்கைகளை உலகமே ஏற்றுக் கொள்ளும்படிக்கு வேலை செய்யணும்ல, கிருஷ்ணா.... கிருஷ்ணா! இந்தக் கட்டுரைக்கு நடுவுல, ஒரு சின்ன விஷயம் சொல்லட்டுமா...?

கிருஷ்ணர் : என்ன.... சொல்லு...., சொல்லு.

மேகலா : இப்போ சீன அதிபர், இந்தியாவுக்கு வந்தாரில்லையா...? அவருக்கு, நமது பாரதப் பிரதமர், தமிழகத்தில் சிற்பங்களுக்குப் பெயர் போன மகாபலிபுரத்தில் வைத்துத்தான் வரவேற்பு கொடுத்தார். அங்கு இருக்கும் சிற்பங்களைச் சுட்டிக் காட்டி, அவைகளைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களையும், சிற்பங்களின் அழகையும், சீன அதிபருக்கு, நமது பிரதமர் மோடி அவர்கள் எடுத்துக் கூறினார். இதனை சீன அதிபருக்கு மொழி பெயர்த்துச் சொன்னவர் ஒரு தமிழர். அன்றைய தினம் சீன அதிபருக்கு அளிக்கப்பட்ட விருந்தில், நமது தமிழ்நாட்டு உணவாகிய இட்லி, சாம்பார், ரசம் என்று நிறைய உணவுகள் பரிமாறப்பட்டன.....

கிருஷ்ணர் : சாம்பார், ரசம் prepare பண்ணுவதற்கு, ‘சிவகாசி சமையல்’ chef-ஐ வரவழைத்திருக்கலாம்...!

மேகலா : ஹி....ஹி..... ரொம்ப thanks, கிருஷ்ணா....!

கிருஷ்ணர் : பாத்தும்மா.... பல்லு, கில்லு சுளுக்கிக்கப் போகுது.... அப்புறம் வேறு என்ன புதுமை....? மோடி வேஷ்டி கட்டி வந்தாரா.....

மேகலா : ஐயோ.... நீயும் பாத்தியா, கிருஷ்ணா.... தமிழர்களை ஒரு வழி பண்ணுவது என்று தீர்மானம் பண்ணி.... மனசுக்குள்ள ஆணி அடிக்கிறார், கிருஷ்ணா.... அப்புறம் நடந்த விஷயங்களை அடுத்த பகுதியில் கூறுகிறேனே, சரியா, கிருஷ்ணா.....


Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2