பாலம் - பகுதி 4 (நிறைவு)
மேகலா : சீன அதிபர் மகாபலிபுரம் வந்திருந்த நேரத்தில், அவரை உபசரிக்கும் போது, பாரதப் பிரதமர், நமது தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்திருந்தார் என்று சென்ற பகுதியில் பார்த்தோம். மறுநாள் அதிகாலையில், கடற்கரையோரம், walking செல்கிறார். Beach-ல் கிடந்த waste plastic bottle, குப்பைகள், தின்று போட்ட paper என்று பொறுக்கிக் கொண்டே போனவர், அதை ஒரு bag-ல் collect பண்ணி, குப்பைக்கூடையில் சேர்க்கிறார். உடனே social media-க்களில், ‘camera முன்பு நடிக்கிறார்’ என்று போடுகிறார்கள்.
கிருஷ்ணர் : சொல்லட்டும்.... நடிச்சாக்கூட, நல்லது நடக்குதே.... வெறும் வாய்வார்த்தையாய் மட்டும் பேசல இல்ல... பொதுவா, வீடுகளில் குப்பையைப் பார்த்த உடனே பொறுக்கும் பழக்கமுடையவர்கள், நடந்து போகும் பாதையில் வேண்டாத பொருள் கிடந்தால், அதைப் பொறுக்கத்தான் செய்வார்கள். இவரைப் பார்த்து 10 பேர் குப்பைகளைப் பொறுக்கட்டும். சினிமாக்காரங்க கையில் ‘விளக்குமாறு’ கொடுத்து ‘தூய்மை இந்தியா’ என்று பெருக்கச் சொன்னார் இல்லையா; announce பண்ணிச் செய்தால், ‘தூய்மை திட்டம்’, அவராகச் செய்தால், ‘drama'-வாமா....?
சரி, பாலத்தைத் தொடர்ந்து சொல்லு. ஒரு முக்கியமான பாலத்தை இன்னும் நீ சொல்லவேயில்லை. நான் காத்துக் கொண்டிருக்கிறேன்....
மேகலா : ஆமாம் கிருஷ்ணா! அவர் தீவிரவாதிகளின் கூடாரங்களுக்கே சென்று, அவர்களின் மனநிலையை அறிந்தவர். சிக்கலான, பரபரப்பான இடங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களின் மனநிலையை அள்ளிக் கொண்டு வந்தவர். எதிரி நாட்டிற்குள், அவர்களைப் போலவே உடையணிந்து சென்று, தகவல்களைச் சேகரித்தவர். அத்தனையையும் அரசாங்கத்திடம் சேர்த்து, எதிரிகளின் கூடாரத்தையே காலி பண்ணுவதற்கு உதவியவர். நம் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர், பெருமை மிகு ‘அஜித் தோவல்’ அவர்கள்.
கிருஷ்ணர் : ஓஹோ! ‘ஒற்றர்’ என்று சொல்லு...
மேகலா : இருக்கட்டும்....! ஆனாலும், அக்கரையில் இருக்கும் ரகசியத்தை, இங்கே கொண்டு வந்து சேர்த்தாரா இல்லையா.... பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதனால், இவரும் ‘பாலம்’ தானே, கிருஷ்ணா....! ‘பாலம்’ என்பது என்ன....? இரண்டு கரைகளுக்கிடையில், ஒரு பாதை அமைய வேண்டும். இது ஒரு வகை. நெருக்கடியான பாதைகளில், நெருக்கடி குறைய மேம்பாலம் அமைய வேண்டும். அஜித் தோவல், ரகசியத்தை அள்ளி வந்து பிரச்னையைத் தீர்த்து வைக்கும் ‘ரகசிய பாலம்’. (in husky voice...) அதாவது ‘சுரங்கப் பாதை’....
கிருஷ்ணர் : அம்மாடியோவ்....! விவகாரமான பாலம் தான். சரி, வேறு பாலங்கள் உனக்குத் தெரியுமா...?
மேகலா : இன்னும் ஒரு பாலம் இருக்கு, கிருஷ்ணா! இந்தப் பாலம் ஏறினால், நமக்கு மோட்சத்திற்கு வழி காட்டும்; நம்மைக் கடவுளிடமே கொண்டு சேர்க்கும்...
கிருஷ்ணர் : அப்படியா....?! என்ன..., புதுக்கதை எல்லாம் வுடுற....
மேகலா : Actual-ஆ இந்தப் பாலத்தைப் பற்றி நான் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். முடிவுரையாகச் சொன்னால், இந்தக் கட்டுரை அழகாக வெளிவரும் என்று நினைத்தேன். இது கதையெல்லாம் இல்லை, கிருஷ்ணா.... வாழ்க்கையின் பேருண்மை...
கிருஷ்ணர் : இதில் யார் ‘பாலம்’? நீ என்ன பேசுற.....
மேகலா : என்ன கிருஷ்ணா.... நான் என்ன பேசப் போகிறேன் என்று வேடிக்கை பார்ப்பதற்காக, ஒன்றும் தெரியாதவன் போல் நடிக்கிறாயா....? நீ பேச்சு மறந்தாயோ.... இல்லை என்னைப் பேச வைக்கிறாயோ...., எனக்குத் தெரியாது. இருந்தாலும், இதை நான் தான் பேச வேண்டும். இந்த topic-ன் ஆரம்பத்தில் நீ என்ன கேட்டாய்...; ‘நம் இருவருக்கும் இடையில் நட்பு வலுப்பெறுவதற்கு பாலமாக இருப்பது யார்’ என்று கேட்டாயல்லவா....? அதற்கு, நான் ‘மகாபாரதம்’ என்ற இதிகாசம் தான் என்னை உன்னிடம் கொண்டு வந்து சேர்த்தது என்று சொன்னேன். அது நூற்றுக்கு நூறு உண்மை கிருஷ்ணா...
எனக்கு மட்டுமல்ல, கிருஷ்ணா...., என்னைப் போல பல கோடி மக்களுக்கும், ஏதாவது ஒரு நேரத்தில் இறைவனின் திருப்பாதம், சிறந்த அடைக்கலமாகவும், அவனுடைய திருக்கரம், ஆதரவு தரும் வழித்துணையாகவும் இருப்பதாக உணரும் காலம் வரும். அந்தக் கணத்தில், பிரச்னைக்குத் தீர்வாக மட்டுமே பார்க்கப்படும் கடவுள், பிரச்னை தீர்ந்தவுடன், தீர்த்து வைத்த கடவுளை அறிய வேண்டும் என்ற ஆவல் எழலாம்.
சிலர், பாகவதம் படிக்கலாம்; சிலர் பெரிய புராணம் படிக்கலாம்; சிலர் உபன்யாசம் கேட்கலாம்; பக்திப் பாடல்கள் கேட்கலாம்; கதை கேட்கலாம்.... அப்போ, எல்லோர் மனசுக்குள்ளும் ஒய்யாரமாய், கடவுள் உட்கார்ந்து விடுகிறார். நல்லதை யோசிக்க வைக்கிறார்; கடவுளைத் தெரிந்து கொள்ள வைக்கிறார். இது ‘பக்திப் பாலம்’ கிருஷ்ணா! என்னைப் போன்றோரின் பக்திப் பாலமாக இருந்ததே, ‘இராமாயணம்’, ‘மகாபாரதம்’, ‘பெரிய புராணம்’ போன்ற இதிகாசங்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் தான், கிருஷ்ணா. இதோ, உன்னிடம் இத்தனை நெருக்கமாக உட்கார்ந்து, உலக விஷயங்களைப் பேசுவதற்கும், கண்ட மேனிக்கு நட்பாய் உறவாடுவதற்கும், ஒரு அன்னியோன்யம் வேண்டுமே... அதைத் தர வல்லது, நாயன்மார்கள் பாடிய ’தேவாரம்’, ‘திருவாசகம்’, மற்றும் ஆழ்வார்கள் பாடிய ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ தான்.
இந்த நூல்களில், நாயன்மார்களும், ஆழ்வார்களும் இறைவனிடம், காதலியாகத் தன்னைப் பாவித்து, இறைவனிடம் காதல் கொண்டுள்ளார்கள். தாயாகத் தன்னை நினைத்து, இறைவனைத் தாலாட்டியுள்ளார்கள். அதெல்லாம் தான் நமக்கு ஒரு guide ஆக இருந்து மோட்சத்திற்கு வழி காட்டுகிறது என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன், கிருஷ்ணா.....
கிருஷ்ணர் : So, பக்திப் பாலத்தையும் சுட்டிக் காட்டி விட்டாய்.....
மேகலா : இது பக்திப் பாலம் மட்டும் கிடையாது, கிருஷ்ணா! நம்மைப் பக்குவப்படுத்தும் பாலம். நமக்குத் தன்னம்பிக்கையை ஊட்டும் பாலம். தைரியம் தரும் பாலம். இதுதான் உண்மை; இதுதான் சிறந்த வழி; இதைக் கடந்துதான் கடவுளைக் காண வேண்டும் என்றெல்லாம் நமக்கு உணர்த்தும் பாலம். இந்தப் பாலங்கள் மூலமாக கடவுளின் பெருமைகளை மட்டும் நான் அறியவில்லை, கிருஷ்ணா. கடவுளின் பெருமைகளை எடுத்துச் சொல்லும் இதிகாசங்களில், அதை எழுதிய வால்மீகி முனிவர், வியாசர் இவர்களின் பெருமையையும், இவர்கள் கதை சொல்லும் நேர்த்தியையும், கதை சொல்பவர் உண்மையை மறைக்காமல் சொல்லும் நேர்மையையும் அறிய முடிகிறது.
‘பெரிய புராணம்’ வாசிக்கும் போது, திருக்குறிப்புத் தொண்டரின் எளிய வாழ்க்கையிலும், அவர் கொண்ட உறுதியான பக்தியைக் காண முடிகிறது. ‘திருநாளைப்போவாரை’ இறைவன் தன்னுடனேயே சேர்த்துக் கொண்டதைப் படிக்கும் போது, மெய் சிலிர்த்துப் போகிறது. ‘கண்ணப்பர்’ படைக்கும் பன்றிக்கறியையும், உமிழும் எச்சில்நீர் அபிஷேகத்தையும், இறைவன் ஏற்றுக் கொண்டதை, எத்தனை முறை வாசித்தாலும், நெகிழ்ச்சியில் கண்ணீரே வருகிறது, கிருஷ்ணா.... இதெல்லாம் படிப்பது ஒரு புண்ணியம். படிக்கத் தூண்டிய வால்மீகி, வியாசர், சேக்கிழார், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், ஆண்டாள், பெரியாழ்வார் அனைவரும், கடவுள் இருக்கும் இடத்திற்கே நம்மைக் கொண்டு சேர்க்கும் பாலங்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக பெறற்கரிய பேறு கிடைத்துள்ளது, கிருஷ்ணா. அதுதான் ‘பாலத்தினால்’ நான் பெற்ற வரம்....
கிருஷ்ணர் : வரமா....? என்னமோ, பெருசா சொல்றியோ.... என்ன அது....?
மேகலா : வரமாக, என் கிருஷ்ணனின் நட்பு கிடைத்துள்ளது, கிருஷ்ணா!
கிருஷ்ணர் : என்னவோ, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைக்கணும்; மேலாண்மை வாரியம் அமைத்து, அதற்கு விஷயம் தெரிந்தவர்களை உறுப்பினர்களாகப் போடணும்; பிரச்னையைச் சுமுகமாக தீர்த்து வைக்கணும். தீவிரவாதிகள் இருக்கும் இடத்துக்கு, தூதுவரை அனுப்பி வைக்கணும்; தீவிரவாதத்தையே காலி பண்ணணும். போக்குவரத்து நெருக்கடியான சாலையில் மேம்பாலம் கட்டணும்; நெருக்கடியைக் குறைக்கணும் என்பது மாதிரி ரொம்ப easy-யா பேசுற... இருந்தாலும், வாழ்க்கையில் நீ வேண்டியது கிடைக்கவில்லை என்றாலோ, வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட்டு, வாழ்க்கையை எதிர்கொள்ள தைரியம் குறைந்தாலோ, வாழ்க்கையின் நெருக்கடியான சமயங்களில், அதை சமாளித்து, மேலெழுவதற்கும், உனக்கு 'கிருஷ்ண நட்பு’ வரமாகக் கிடைத்தது என்கிறாயே, அதுவும், இந்தப் பாலங்களின் மீதேறி நடக்க, நடக்க, பக்குவம் மிகுந்து, பக்தி என்பதை, அழகான நட்பாக உன்னால் பார்க்க முடிகிறது என்றால், எனக்கு சந்தோஷமே....
Anyhow, இந்த topic கொஞ்சம் வித்தியாசமாக நல்லாத்தான் இருக்கிறது. Very good. அடுத்து ஒரு topic-ல பேசலாம். ‘ஹாவ்’... எனக்குத் தூக்கம் வருதுமா.... Bye!
மேகலா : Bye, Krishna.....

Comments
Post a Comment