வயசானாலும், சின்னச் சின்ன ஆசைகள், நம்மைச் சிறகடிக்க வைக்கும் - பகுதி 4

மேகலா : ‘வடபத்ர சயனப் பெருமாளைத் தரிசிக்கக் கோயிலுக்குள் நுழைந்தேன்’ என்று சென்ற பகுதியில் முடித்திருந்தேனா.... மாலை நேரம் ஐந்து மணியளவில், கோயிலுக்குள் ஏன் இத்தனை கூட்டம் என்று யோசித்துக் கொண்டே, கூட்டம் குறைவாய் இருந்த ‘லக்ஷ்மிநரசிம்மர்’ சன்னிதானத்துக்குள் நுழைந்தேன். விழி மலர்ந்த பார்வையும், கம்பீரமான தோற்றமும், அழகு மகள் லக்ஷ்மித்தாயின் பெருமிதமும், நரசிம்மரின் அழகினைப் பல மடங்காகக் காட்டியது. ‘அகலமான என் கைகளைப் பார். உலகமே, இந்த உள்ளங்கையில் விசாலமாய்க் குடியிருக்கும் போது, உனக்கு மட்டும் இடமில்லாமலா போய் விடும்’. இப்படித்தான் நரசிம்மரின் பார்வை என்னைக் கேட்டது, கிருஷ்ணா!

கிருஷ்ணர் : நீயும், உனக்கு ஒரு இடம் book பண்ணிட்டயாக்கும்....?

மேகலா : Booking-லாம் இங்கு கிடையாது, கிருஷ்ணா! நம்முடைய அன்பு மட்டும் தான் ’குடியுரிமை’ பெற முடியும். C.A.A, N.R.C இந்தச் சட்டமெல்லாம், நரசிம்மர் உலகத்தில் strict-ஆகக் கடைப்பிடிக்கப்படுகிறது, கிருஷ்ணா! பக்தியில்லாதவர்கள் எல்லோரும் கையில் passport இல்லாமல் குடியுரிமை மறுக்கப்படும் அகதிகள்தான். யாரும் போராட்டமெல்லாம் கிளப்ப முடியாது.

சந்தோஷமாய் வடபத்ர சயனரைப் பார்க்கப் போனேன். கிருஷ்ணா, சன்னிதானம் திரையிடப்பட்டிருந்தது. ‘இன்னும் 10 நிமிஷம் ஆகும்’ என்று ஒரு சின்னப் பூசாரி அறிவித்துக் கொண்டே இருந்தது, என்னைக் கருடாழ்வார் பக்கம் திரும்ப வைத்தது, கிருஷ்ணா! அப்போதான் எனக்குப் பொறி தட்டியது.... ‘ஆஹா! இன்று மார்கழி மாதம் அல்லவா; ‘பகல் பத்து’ அல்லவா; அதான் கோயிலில் இவ்வளவு கூட்டமா...? - என்று யோசித்துக் கொண்டே, கருடாழ்வார் அருகில் வந்து விட்டேன். அருகில் இருந்த மேடையில், ஆண்டாளும், ரங்கமன்னாருமாகவும், பூதேவி, ஸ்ரீதேவி சமேத பெருமாளும், சர்வ அலங்காரத்துடன், சன்னிதானத்தை விட்டும் இடம் பெயர்ந்து, அமர்ந்திருந்தனர். கருடாழ்வாருக்கும், பெருமாளுக்கும் இடையில் இருந்த இடைவெளியில், பன்னிரு ஆழ்வார்களும், தனித்த பெருமாளும், அலங்காரத்துடன் அமர்ந்திருந்தது, அந்த இடத்தையே, ‘வைகுந்தமாக்கியிருந்தது’. என்னைப் போல நிறையப் பேர், திறந்த கண்களையும், திறந்த வாயையும் மூட மறந்து, சிலிர்த்துப் போன மனதையும், மேனியையும் நிலை மறந்து அனுபவித்துக் கொண்டிருந்தனர், கிருஷ்ணா!

தீபாராதனை காட்டியவுடன், நீண்ட நாள் பிரிந்திருந்த என் நண்பனைப் பார்க்கும் ஆவலோடு, வடபத்ர சயனரைப் பார்க்கச் சென்றேன். திரை விலகியிருந்தது. Queue-வில் நின்று தரிசனத்திற்காகக் காத்திருந்தோருடன், நானும் நின்று, வரிசையில் முன்னேறிச் சென்றேன். கூட்டமும் ‘சரசர’வென்று நகர்ந்தது. என் முறை வந்தது. எத்தனை முறை இங்கு வந்திருப்பேன்; எத்தனை முறை வடபத்ர சயனரைத் தரிசித்திருப்பேன். இன்று புதிதாய்ப் பார்ப்பது போல என் கண்களுக்குத் தெரிந்தது. 50 விநாடிகள் மட்டும் தான் அங்கு நின்றிருந்தேன்; ஜென்ம ஜென்மமாய் நிற்பது போலவும், பல யுகங்களாய் இந்த பந்தம் தொடர்வது போலவும் தோன்றியது, கிருஷ்ணா!

கிருஷ்ணர் : அப்படியா..... இந்த மாதம் மார்கழி என்பதையே மறந்துட்டு...., எங்கிட்ட கதையா வுடுற.... ‘வைகுண்ட ஏகாதசி’யாவது நெனப்புல இருந்ததா.... அதுவும் கோயில் படியேறும் போதுதான் நினைவு வந்ததா....?

மேகலா : கிருஷ்ணா! காலையில் எழுந்ததுமே பார்த்து விட்டேன், இன்று ‘வைகுண்ட ஏகாதசி’ என்று. ஆனாலும், வேலை அலுப்பில் மறந்தும் போனது. கோயிலுக்குள் சென்ற பின் தான்....

கிருஷ்ணர் : ‘என்னடா.... கூட்டம் நிறைய இருக்கே..... ஸ்.... ஸ்...... oh.....! இன்று வைகுண்ட ஏகதசியோ...... நல்ல வேளை, இன்று பெருமாளைக் கும்பிட வந்தோம்....’ என்று நினைத்தாயாக்கும்.....
மேகலா : நீ கிண்டலா சொன்னாலும், உண்மை அதுதான், கிருஷ்ணா.....!

கிருஷ்ணர் : இவ.... பெரீய்....ய.... கண்ணப்ப நாயனார்..... மெய் மறந்து போயிருவா....

மேகலா : கிருஷ்ணா..... நீ கண்ணப்ப நாயனாரைச் சொன்னாயா....! நாங்கள் இன்று, ‘பெரிய புராணம்’ கதை சொல்ல ஆரம்பித்திருக்கிறோம், கிருஷ்ணா.... அதிலும், குறிப்பாக, நேற்று கண்னப்ப நாயனார் கதைதான் சொன்னேன்....

கிருஷ்ணர் : சரி.... சரி..... நீ இப்போ...... மார்கழி மாசத்துல நிற்கிறாய்.... உன் சின்னச் சின்ன ஆசைகளைச் சொல்லிக் கொண்டு வருகிறாய்.... ஞாபகம் இருக்கா....? சரி..., இப்படி ஆரம்பிப்போம்.... நான் ஒரு கேள்வி கேட்கிறேன்... அந்தக் கேள்விக்கு உனக்குப் பிடித்த விஷயத்தைப் பதிலாகச் சொல்லு....

மேகலா : ஹை! இது நல்லா இருக்கே..... நான் தயார்.... நீ தயாரா.....?

கிருஷ்ணர் : அம்மா, மேகலா..... நான் தாயார்தான். சரி..., உனக்குப் பிடித்த ஒருத்தர், தனக்கு, நல்லா மணக்க மணக்க ஏதாவது சமைத்துக் கொடு என்று கேட்டால், உடனே என்ன செய்து தருவாய்....?

மேகலா : எனக்குப் பிடிச்ச ஒருத்தரா....? அப்படீன்னா.... எனக்கு சமைக்கப் பிடிக்கல, என்னை வெளியில கூட்டிட்டுப் போங்க என்று சொல்வேன்...

கிருஷ்ணர் : நான் கேட்டால் கூடவா....?

மேகலா : உன்னிடம் தான், உண்மையாகவும், உரிமையுடனும் கேட்பேன், கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : ஒழிஞ்சி போ......! சரி, உன் பிள்ளைகள், எனக்குப் பசிக்குது என்று கேட்டால்....?

மேகலா : அப்படீன்னா.... Plan பண்ணீருவேன், கிருஷ்ணா....... instant decision-லாம் cooking-ல வச்சிக்க மாட்டேன். எல்லாம் pre-plan-தான்...... பிள்ளைங்க வந்தால், all-time favorite, பிரியாணிதான், கிருஷ்ணா....!

கிருஷ்ணர் : Cooking-ல் உனக்கு எந்த சின்னச் சின்ன ஆசையும் கிடையாதா, மேகலா...?

மேகலா : சில food, சாப்பிடணும்னு மனசுல தோணீரும், கிருஷணா..... அந்த food-ஐ சமைக்க, தீவிரமாயிடுவேன். மற்றப்படி, சமையல் என்பது routine work; அவ்வளவுதான். என்ன...., கொஞ்சம் sincere, கொஞ்சம் dutiful, கொஞ்சம் ரசனை எல்லாம் கலந்து செய்வேன்.

கிருஷ்ணர் : சாப்பிடுவதில் உனக்குப் பிடித்தது, veg-ஆ....., non-veg-ஆ.....?

மேகலா : எல்லா food-ம் எனக்குப் பிடிக்கும், கிருஷ்ணா! Fruits, salads, பொரியல், அவியல், சாம்பார், ரசம், juice, snacks என்று எல்லாமும் பிடிக்கத்தான் செய்யும். ஆனாலும், ஒரு தட்டில் ‘சுக்காவும்’ ரசமும் வெச்சி, இன்னொரு தட்டில் vegetables இருந்தால், என் கை automatic-ஆ....., சுக்காவைத்தான் எடுக்கும்.....

கிருஷ்ணர் : எனக்குத் தெரியும்...... சரியான சாப்பாட்டு ‘ராமி’....

மேகலா : கிருஷ்ணா! Route-அ மாத்து.... வேற..... வேற கேள்வி கேளு, கிருஷ்ணா.... இப்ப எப்படி..... பதில் சொல்றேன்....., பாரு.......

கிருஷ்ணர் : சரி! அடுத்த கேள்வி..... எத்தனையோ இடங்களுக்குப் போயிருக்க... நீ நெனச்சவுடனேயே, ‘சில்லுனு’ மனசுக்குப் பிடித்த மாதிரியான இடம் எது மேகலா...?

மேகலா : உனக்கே நல்லாத் தெரியும், கிருஷ்ணா...... குற்றாலம்..... அந்த ஊரை நினைத்தவுடனேயே, அருவி சத்தம் என் காதுகளில் ஒலிக்கிறது. என் மேனியெங்கும், குற்றாலச் சாரல் தெறித்து விழுவது போல, சிலிர்ப்பாய் இருக்கிறது, கிருஷ்ணா..... என்னோட best choice, குற்றாலம் தான், கிருஷ்ணா!

கிருஷ்ணர் : இதை விடப் பசுமையான நகரங்களும், நதிகள் தவழ்ந்து ஓடும் ஊர்களும் இருக்கும் போது, குற்றாலம் தான் உனக்குப் பிடிக்குமா....?
‘கங்கை’ நதியையே பார்த்து வந்திருக்கிறாய்...., அவையெல்லாம் உன் மனசை நிறைக்கவில்லையா.....?

மேகலா : உன் கேள்விக்கான பதிலோடு, அடுத்த பகுதியை ஆரம்பிக்கிறேன், சரியா, கிருஷ்ணா....?

கிருஷ்ணர் : Okay....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2