வயசானாலும், சின்னச் சின்ன ஆசைகள், நம்மைச் சிறகடிக்க வைக்கும் - பகுதி 5
மேகலா : நான் பார்த்த ஊர்களிலேயே, நினைத்த மாத்திரத்தில் எனக்கு ரொம்பப் பிடித்த ஊர் எது என்று நீ கேட்ட போது, நான் ‘குற்றாலம்’ என்று சொன்னேன். நீ அதற்கான special காரணத்தைக் கேட்டிருந்தாயல்லவா...?
சிறு வயது முதலே என்னை ஆட்கொண்ட கொள்ளையழகு, குற்றாலம் தான், கிருஷ்ணா!
குற்றாலத்தை நெருங்கும் முன்னேயே.... நம்மை மோதித் தழுவி வரவேற்கும் மூலிகைக் காற்று, வேதத்தின் குரல் போல ஒலிக்கும் சாரல் சப்தம், அருவியின் அருகில் செல்லச் செல்ல, நம் முகத்தில் தெறிக்கும் அருவியின் சாரல்; இதையெல்லாவற்றையும் வருஷம் முழுக்க அனுபவித்துக் கொண்டிருக்கும் குளிர்ச்சியான ‘குற்றாலநாதர்’. அவர் அருகினில் ஆனந்தமாய்க் குடியிருக்கும் ’குழல்வாய்மொழி அம்மையார்’;
அவர்களைச் சுற்றியிருக்கும் கடைவீதிகள். இவையெல்லாம் என்னோட குழந்தைப் பருவம் தொட்டே என் மனதைக் கொள்ளையடித்த இயற்கைச் செல்வங்கள். இன்னும் எத்தனை இடங்களைப் பார்த்தாலும், ‘நயாகராவாக’ இருந்தால் கூட, என் மனதுக்குள் குற்றாலத்தோடு compare பண்ணி, ‘நம்ம ஊரு மாதிரி வருமா’ என்று தான் நினைக்கத் தோன்றும், கிருஷ்ணா!
கிருஷ்ணர் : சரி.... எனக்கும் குற்றாலம் தான் பிடிக்கும்....
மேகலா : கிருஷ்ணா! இதெல்லாம் கொஞ்ச நேரம் ஒதுக்கி வைப்போம். நான் வேற ஒண்ணு சொல்லப் போகிறேன். என்னை, Sivakasi Lions Cosmos Club-லிருந்து, ‘சிங்கப் பெண்’ விருது வழங்கி, கௌரவப்படுத்தினார்கள், கிருஷ்ணா!
கிருஷ்ணர் : இது எப்ப....? எங்கிட்ட நீ சொல்லவேயில்லை. இப்பல்லாம் நீ நிறைய விஷயத்தை எங்கிட்ட மறைக்கிற.....
மேகலா : ஸ்....... ஸ்....... stop..... stop.... கிருஷ்ணா. இப்ப நாங்க கல்யாண வீட்டுக்குப் போனோம்ல.... அங்க வச்சுத்தான் இந்த விருதினை வழங்கப் போவதாக என்னிடம் சொல்லவே செய்தார்கள், கிருஷ்ணா! கல்யாண வீடு.... அடுத்து, கறிச்சாப்பாடு, அமலச்சந்திரன் டாக்டர் வீட்டுக் கல்யாணம்.... என்று அடுத்தடுத்து program முடிந்து இன்றுதான் free-யாகி இருக்கிறேன். இந்தப் பரபரப்பு நாட்களிலேயே, விருது வழங்கும் விழாவும் முடிந்து விட்டது. உன்னிடம் share பண்ணணும் என்று வந்த என்னை ஏமாற்றி விடாதே, கிருஷ்ணா!
கிருஷ்ணர் : என்ன..... ‘டயலாக்’ பேசுறயா.....? Anyhow, வாழ்த்துக்கள், மேகலா..... என்னோட மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.... இன்னும் பல கிரீடம் உனக்கு சூட்டப்படட்டும்....
மேகலா : ஐயோ.... கிருஷ்ணா..... இதோ பார்.... புல்லரிக்குது பார்..... இப்படி யார் சொன்னாலும், நான் வாழ்த்துக்களாக ஏற்றுக் கொண்டு மகிழ்ந்திருப்பேன். இதைப் பரம்பொருள் நீ சொல்லும் போது, மகிழ்ச்சி மட்டுமல்ல, கிருஷ்ணா! வரமே கிடைத்தது போலப் பூரித்துப் போனேன், கிருஷ்ணா! ‘சிங்கப் பெண்’ award கிடைத்த அன்று கூட, இத்தனை பரவசப்படல, கிருஷ்ணா.....
கிருஷ்ணர் : சரி.... சரி..... என்ன நடந்தது? எதற்கு இந்த award?
மேகலா : எல்லாம் ‘சிவகாசி சமையல்’ கொடுத்த வெளிச்சம் தான், கிருஷ்ணா... அதிலும், இந்த award-ஐ எனக்குக் கொடுக்க வேண்டும் என்று decide பண்ணியவர், நாங்கள் சமைக்கும் போது பேசுவது தான், மக்களிடையே வரவேற்பைக் கொடுத்துள்ளது என்றாரா...., எனக்குத் தலைகால் புரியவில்லை....
கிருஷ்ணர் : ஓஹ்...ஹோ... பேசுவதற்குக் கூட award கொடுக்கிறார்களாமா....? பரவாயில்லையே.....
மேகலா : நான் program இடையில் பேசுவதுதான்...., சமையலை இந்த அளவுக்கு மக்கள் மனதில் பதிய வைத்திருக்கிறதாம், கிருஷ்ணா..... இந்த வார்த்தையை, என்னைத் தேர்ந்தெடுத்தவர் மட்டுமல்ல கிருஷ்ணா....., அங்கு விருது வாங்க வந்திருந்த மற்றொரு ‘சிங்கப் பெண்’ணும் இதைத்தான் சொன்னாங்க....
கிருஷ்ணர் : போச்சுடா.... நீ, நிறுத்தாம பேசுவது எல்லோருக்கும் தெரிஞ்சி போச்சா...... நான் தான் மாட்டினேண்ணு நெனச்சேன். நிறையப் பேர் உங்கிட்ட மாட்டியிருக்கிறாங்க போலயே... சரி.... அந்த விழாவில் என்னென்ன நடந்தது... என்னென்ன பிரிவுகளில் award கொடுத்திருக்காங்க.... யாரோட சாதனையை மிகச் சிறந்ததாக நீ கருதுகிறாய்....? ஒவ்வொன்றாக சொல்லு, பார்ப்போம்...
மேகலா : கிருஷ்ணா! மொத்தம் 11 பேருக்கு, ‘சிங்கப் பெண்’ விருது கொடுத்திருக்காங்க, கிருஷ்ணா.... இதில் ஒருவர், அரசியலைச் சார்ந்தவர்; ஒருவர், பரத நாட்டியம் கற்றுத் தருபவர். முதலில் award வாங்க வந்தவர், மனநிலை சரியில்லாத குழந்தைகளுக்கான பள்ளியை நடத்தி வருபவர். அவருடைய சாதனையைக் கேட்கும் போது, நான் அசந்து போனேன், கிருஷ்ணா!
பள்ளியில் கல்வி மட்டுமே தகுதியாய் இருந்த பொழுது, திருமணம் செய்து கொண்ட ஒரு நடுத்தர வகுப்பைச் சேர்ந்த பெண். தனக்கு, மனநிலை சரியில்லாத குழந்தை பிறந்தவுடன், அந்தக் குழந்தைக்குக் கல்வி புகட்ட வேண்டும்; தானே தன் வேலையைச் செய்யப் பழக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில், பள்ளிக் கல்வியை முடித்து, U.G., அடுத்து P.G-யும் முடித்து, அதன் பின்னே, மனநலம் சரியில்லாத குழந்தைகளை வளர்ப்பதற்கான பயிற்சியைக் கொடுக்கக் கூடிய institute-ல் சேர்ந்து, அதற்கான தகுதி பெற்று, அதன் பிறகு தன்னுடைய குழந்தை மட்டுமல்லாமல், இதே மாதிரியான மற்ற குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டு, சிறிய அளவில் ஆரம்பித்த இந்தக் காப்பகம், இன்று 150 குழந்தைகளை, தன் கண்காணிப்பில் பயிற்றுவிக்கிறார் என்ற செய்தியைக் கேட்டவுடன், நான் அசந்து போனது மட்டுமல்ல, கிருஷ்ணா...., சோர்ந்தும் போனேன்.....
கிருஷ்ணர் : ஏன்....?
மேகலா : ஏனா...? சாதனைன்னா...., இது சாதனை. நாம first ball-ல்லயே out..... என்று நினைத்தேன், கிருஷ்ணா.....
கிருஷ்ணர் : லூசா நீ....? அவர்கள் ஒவ்வொரு பிரிவாக யோசித்து, social media-வில், ’ஒரு பெண்மணி, தன் மகளுடன் சேர்ந்து, வீட்டில் இருந்தபடியே, தனக்குத் தெரிந்த துறையில் இத்தனை சாதித்திருக்கிறாள்’ என்று select பன்ணியிருக்கிறார்கள். ஒண்ணு நல்லா புரிஞ்சிக்கோ..... ஒவ்வொரு மனிதனும், தன் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு முன்னேற முயற்சிக்க வேண்டும். காலம் அவரவர்களுக்கான பணியைக் கொடுக்கும் போது, மனிதன் சிறப்பாய் செயல்பட வேண்டும். அதன் பின் அந்தக் காலம் என்ன கொடுக்கிறதோ..... அப்ப தெரியும், நீ என்ன செய்திருக்கிறாய் என்று.... புரியுதா....? சிங்கப் பெண்ணே! அடுத்ததைச் சொல்லு.....
மேகலா : கிருஷ்ணா! இப்போ.... இதோ நீ positive-ஆக எடுத்துச் சொல்லும் போது தான்...., என்ன சாதித்திருக்கிறோம் என்று புரிகிறது. அடுத்தடுத்து ஒவ்வொருவரையும் அழைத்து, அவர்களுடைய சாதனைகளை விவரித்து, screen-ல் clippings-ஆக, அவர்களின் புகைப்படங்களை திரையிடும் பொழுது, எனக்கும் பரபரப்பு அதிகமாயிருச்சி. என்னுடைய பரபரப்பில், காதுக்குள், ‘ஙொய்’ என்ற சப்தம் உண்டாகி, என் பெயரைச் சொல்லி அழைத்ததைக் கூடக் கேட்கவில்லை, கிருஷ்ணா! எல்லோரும் கைதட்டி எழுந்திருச்சி நிற்கிறார்கள். Sheethal தான், ‘அம்மா, எந்திரிங்க’ என்றபோதுதான், ‘ஓஹ்... இது நம்ம turn என்று சுதாரித்தேன், கிருஷ்ணா’......
கிருஷ்ணர் : என்னம்மா...., பயந்துட்டயா..... நம்ம ஆளு அப்படியெல்லாம் பயப்படும் ஆள் கிடையாதே.....
மேகலா : பயப்படலாம் இல்ல, கிருஷ்ணா..... அன்று அந்த meeting-ல் செய்யப்பட்டிருந்த முன்னேற்பாடு..... எல்லோரும் எழுந்து நின்று கை தட்டியது, என்னை பரபரப்பாக்கியது.
கிருஷ்ணர் : ஒரு மாதிரி..... கனவில் மிதப்பது போல இருந்ததோ......?
மேகலா : எனது எண்ண ஓட்டம் பற்றியும், மேலும் நடந்த நிகழ்வுகள் பற்றியும் அடுத்த பகுதியில் பேசலாம், கிருஷ்ணா.......

Comments
Post a Comment