நாடெங்கும் வெறிச்சோடிக் கெடக்கே.. என்ன காரணம்..? - பகுதி 2
மேகலா : ஸ்ரீவி enter பண்ணியவுடன் நேரே..... என் ‘மாரியம்மனின்’ காலடியில் தான், போய் இறங்கினேன், கிருஷ்ணா.... கிருஷ்ணர் : யப்பா.... போய்ப் பார்த்துட்டியா.... ஆத்தாளும் உன்னைப் பார்க்கக் காத்திருப்பாள்...., இல்லையா, மேகலா? மேகலா : கிருஷ்ணா....., பூக்குழி கொடியேறி 5 நாட்கள் ஆகி விட்டன. இதுவரையில், இப்படி பூக்குழி விரத காலத்தில், ஊருக்கு வெளியே இருந்ததே கிடையாது. என் குற்ற உணர்வு, பாசம், அன்னையைப் பிரிந்த பிள்ளையின் ஏக்கம், எல்லாம் கலந்த தவிப்பில் நான் நிற்க, என் அன்னை சிறிது நேரம் அங்கேயே என்னை நிறுத்தி விட்டாள். பூசாரி என்னைக் கவனிக்கும் நேரம் வரைக்கும், என் மௌன மொழிகள், என் அன்னையிடம் ஆயிரம் வார்த்தைகள் பேசின. அம்மாவும், ‘எங்க போன, நீ’ என்று கம்பீரமாய் கேட்டது போல சிலிர்த்துப் போனேன், கிருஷ்ணா! கிருஷ்ணர் : கேட்டாளா....? ஆயிரம் பக்தர்கள் புடைசூழ இருந்தாலும், தன்னை விரும்பும் ஒரு பக்தனையாவது காணவில்லையென்றால், அன்னை தவித்துத்தான் போவாள். மேகலா : கிருஷ்ணா...., இந்த வார்த்தைகள்; இது போதும் எனக்கு.... வெக்கையான நேரத்தில், மழைநீரை, ‘ஹோலி’ நீராக என் மீது பாய்ச்சியிருக்கிறாய் . அ