வரி கட்ட மறந்துட்டாங்க...!

கிருஷ்ணர் : ஹாய்....ஹாய்....ஹாய்... என்ன மேகலா, ஒரே visit மயமாக இருக்குதோ.... ஒரு club, ’சிங்கப் பெண்’ விருது கொடுக்கிறது; ஒரு club, cooking competition-க்கு judge ஆகக் கூப்பிடுகிறார்கள்..... இனி, உன்னை ’chef அம்மா’ என்றுதான் கூப்பிடப் போகிறேன்....!

மேகலா : நீ என்ன வேணாலும் என்னைக் கூப்பிட்டுக்கோ.... இப்போ...., என்ன topic-ல் பேசப் போகிறோம்...?

கிருஷ்ணர் : மேகலா.... இப்ப, தமிழ்நாட்டுல யாரோ mass hero-வாமே.... யாரு அது....? வருமான வரித்துறை அதிகாரிகள், shooting spot-க்கே போயி, arrest பண்ணிட்டாங்களா...?

மேகலா : உனக்கு யாரு இந்த news-அ சொன்னது...? IT raid தான் நடந்தது..... arrest-லாம் பண்ணல.....

கிருஷ்ணர் : வருமான வரித்துறை அதிகாரிகள், படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே சென்று, விசாரணைக்காக அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள். நம் ஹீரோ, தன்னுடைய காரில் ஏறப் போனார். ’அவரைத் தங்கள் Innova காரில், நடுவில் உட்கார வைத்து, இரு பக்கமும் அதிகாரிகள் உட்கார்ந்து அழைத்துச் சென்றனர்’ என்றால், இது ’ஒரு வகையான’ நடவடிக்கை தானே...

மேகலா : இதை, சட்டப்பூர்வமான நடவடிக்கை என்றும் சொல்லலாமே.....

கிருஷ்ணர் : சொல்லலாம்..... இதன் பின்னணி என்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றுதான் கேட்கிறேன்...

மேகலா : பொதுவா, IT raid என்பது என்ன, கிருஷ்ணா....?

கிருஷ்ணர் : சம்பந்தப்பட்டவரின் வருமானத்திற்குத் தக்கபடி விதிக்கப்பட்ட வரியினை, அரசாங்கத்திற்குச் செலுத்தவில்லை என்றால், அதனை ‘வரி ஏய்ப்பு’ என்கிறோம். முதலில், warning கொடுக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர் ஏதாச்சும் சொத்து வாங்கினால், அந்தச் சொத்தை எப்படி வாங்கினார்கள்? அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்று நோண்ட ஆரம்பிக்கிறார்கள். அப்படி நோண்டும் பொழுது, வேறு சில வரவுகளைப் பார்க்க நேர்ந்தால், liquid பணம் சிக்கினால், அதிகமான தங்கம் சேர்த்து வைத்திருந்தால்; அதற்கான முறையான கணக்கு வழக்குகளைக் கேட்கிறார்கள். இப்படியான செயல்களுக்கு ’வருமான வரித்துறை விசாரணை’ என்கிறார்கள். அரசாங்கம் விதித்த வரியைக் கட்டவில்லை என்றால், என்னவென்று சொல்வார்கள்? வரி கட்ட மறந்துட்டாங்க என்றா சொல்வார்கள்...? ‘வரி ஏய்ப்பு’ என்றுதானே சொல்வார்கள்...! ‘வரி ஏய்ப்பு’ என்றால், அரசாங்கத்தை ஏமாற்றுகிறார்கள், அல்லது அரசாங்கத்திற்குக் கட்ட வேண்டிய வரியை ‘அமுக்கிக் கொண்டார்கள்’ என்றுதான் சொல்வார்கள். இதைத்தான் IT raid என்கிறோம்.

மேகலா : இதை விசாரிப்பதற்கு ஒரு department இருக்கிறது. வருமான வரித்துறை அதிகாரிகள், அதாவது, vigilance department தான் இந்த வரி ஏய்ப்பு செயல்களை விசாரிக்கும் அதிகாரம் கொண்டவர்கள். அரசாங்கம், ’யாருடைய அரசாங்கமாக இருந்தாலும்’, வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டால், விசாரிக்க வேண்டியது, இந்தத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமை. சம்பந்தப்பட்டவர், ‘மாஸ் ஹீரோ, அவரை மிரட்டி வைப்போம்’ என்றெல்லாம் அரசாங்கத்தின் பொறுப்பாளர், அதாவது, பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, local முதலமைச்சரோ  நடவடிக்கை எடுக்க முடியாது. சில சமயங்களில், உளவுத்துறை தகவலின்படி, raid நடக்கும். உளவுத் தகவல்கள் தவறாகவும் இருந்திருக்கிறது. Raid-ல் கணக்கில் வராத சொத்துக்களோ, பணமோ கிடைக்காமல் கூடப் போய் விடும். அச்சமயம், அவர்கள், சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்புக் கூடக் கேட்கத் தேவையில்லை. ஏனென்றால், வரி வசூலிப்பது, விசாரிப்பது என்பதெல்லாம், அவர்களுடைய கடமை. ஆனால், விசாரிக்க வந்தாலே...., என்னவோ...., அரசாங்கத்தின் பழி வாங்கும் நடவடிக்கை என்று இவர்கள் செய்யும் அலப்பறை இருக்கே...., அடேங்கப்பா...., நாம மட்டும் இவங்க அலப்பறையை ஆதரிச்சிட்டோம்னு வச்சுக்கோ....

கிருஷ்ணர் : அடுத்த காரியமாக, பாரதப் பிரதமரை நாற்காலியை விட்டுக் கீழே இறக்கி விட்டு, அவங்க உக்காந்துக்குவாங்க....

மேகலா : ஐயோ..... சொல்லாத, கிருஷ்ணா...

கிருஷ்ணர் : நான் அவங்க ஆசையைத்தான் சொன்னேன். நாம ‘முழிப்பா’ இருந்துட்டா...., வரி கட்ட மறந்துட்டு, ‘selfie' எடுப்பவர்களெல்லாம், தலைவராக முடியுமா, மேகலா...?

மேகலா : விசாரணை முடிந்த மறுநாள், ரசிகர் பட்டாளத்தை வரவழைச்சு, selfie எடுத்தத நீயும் பார்த்துட்டியா, கிருஷ்ணா...?

கிருஷ்ணர் : ’எல்லோரும் பார்க்கணும்; அரசாங்கத்துக்கு எதிரா, ‘கெத்து’ காட்டணும்; ரசிகர் பட்டாளத்தோட ஆரவாரத்தை அரசாங்கம் பார்க்கணும்’ என்பதுதானே அவங்களோட கணக்கு. ஒரு இயல்பான விஷயம்.... ஒரு சின்ன enquiry.... clarify பண்ணிட்டா...., சுமுகமா முடிஞ்சிரும்; இல்லையா, வரி பாக்கி இருந்தா...., department கிட்ட, என்ன நடைமுறையோ, அதைக் கேட்டு, வரி பாக்கியைக் கட்டிட்டா, இன்னும் சுமுகமாகப் போகிறது. அதை விட்டுட்டு, வரி கட்ட மறந்துட்டாங்க என்ற பெயர் போய், ஒழுங்காக வரி கட்டுபவர் என்ற பெயர் தாறுமாறாக எகிறி விடும். அதிலும், income tax அதிகாரிகள், துப்புக் கிடைத்தவுடன், IT raid நடத்தி, அதில் ஒன்றும் கிடைக்கவில்லை என்றால், அதற்கு மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே போல, சம்பந்தப்பட்டவர் வரி கட்ட மறந்தது நிரூபிக்கப்பட்டால், 'on-the-spot-ல’ வரியைக் கட்டி, settlement பண்ணி விட்டால், இதைப் பெரிய குற்றமாகப் பரப்புரையும் செய்வதில்லை. இந்த மாதிரியான நடவடிக்கையும் நிறைய நடந்திருக்கிறது. கடமையைச் செய்பவர்களை அரசாங்கமா நெனச்சு, ‘கெத்து’ காட்டுவது வீரமா....?
மேகலா : அதுவும் கட்ட மறந்த வரியை விசாரிக்க வந்த போது, பம்மிக்கிட்டு இருந்துட்டு, அவங்க போன பின்பு, ஏதோ உத்தமபுத்திரனைப் போலவும், ஒற்றை விரலால் கையைச் சொடுக்கி, அரசாங்கத்தையே ஒரே நாளில் மாற்றப் போவது போலவும் ‘ஃபிலிம்’ காட்டுவதும்...., இங்க இப்படி ஒரு கூட்டம் பெருகிப் போச்சு, கிருஷ்ணா... இதைத்தான் செய்தியாளர் ‘ரங்கராஜ் பாண்டே’ சொல்கிறார், கிருஷ்ணா....

தனிப்பட்ட முறையில், திரைப்படத்துறை என்றே எடுத்துக் கொள்வோம். அன்றைய 'புரட்சித்தலைவர் M. G. R.' முதல், இன்றைய ‘மாஸ் ஹீரோ, ஏன் பிரபலமாகி வரும் நகைச்சுவை நடிகர் வரையிலும், IT raid என்ற இந்த நடவடிக்கைக்கு யாரும் விதிவிலக்கு அல்ல. இதில், ‘மாட்டிக்கிட்டாங்க’ ‘தப்பிச்சிட்டாங்க’ என்ற சொல்லே தேவையில்லை. Raid நடந்தால், அதை எதிர் கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கை எதுவோ, அதைத்தான் செய்ய வேண்டும். ஒவ்வொருவரும், raid நடவடிக்கை எடுக்கப்பட்டவுடன், அரசாங்கத்தின் பழிவாங்கும் முயற்சியாகப் பாவித்து, கட்சி ஆரம்பித்தால், தமிழ்நாட்டில், மக்கள் தொகைக்கு இணையாக, கட்சிகளின் பெருக்கமும் கூடி விடும்.

கிருஷ்ணர் : ஒண்ணு நல்லாத் தெரிஞ்சிக்கோ, மேகலா.... மனிதனுக்குத் தன் நிலையிலிருந்து உயரணும் என்று ஆசை வரலாம். வளர்ச்சி வந்த பின், தன் ஆசையே பேராசையாகி, நிலை உயர்ந்ததே தன்னால் மட்டும் தான் என்ற நினைப்பு தலைக்கேறி, ‘தன்னால் முடியும்’ என்ற தன்னம்பிக்கை போய், ‘தன்னால் மட்டும் தான் முடியும்’ என்ற நினைப்பு வந்துருச்சின்னா....., அதற்குப் பிறகு, அந்த அகம்பாவம் தான் ஆட்டம் போடும். அப்புறம், அவரவர் கர்மாவே அவரவர்க்குப் பலன் கொடுத்து விடும். சமுதாயத்தில், மனிதனுடைய கடமை ரொம்ப simple.... எல்லோருக்கும் பொதுவான சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும். சட்டத்தை மதிக்க வேண்டும். சட்டத்தை மீறுபவர்களும், எதிர்ப்பவர்களும், பிரச்னையை சந்திக்கும் போது, அதுவே சிக்கலாகி விடும். இன்னைக்கு வேணா, சட்டத்தின், அதாவது, ‘தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்...., ஆனால், மறுபடியும், தர்மம் தான் ஜெயிக்கும்....

மேகலா : ரொம்பச் சரியாய்ச் சொன்னாய், கிருஷ்ணா... ஒரு தப்புக்குப் பதில் சொல்லுறேண்ணு, இன்னொரு தப்பு.... அதுக்கு மேலே ஒரு தப்பு என்று தப்பு மேல் தப்புண்ணு போயி, நம்ம நிம்மதியே போயிரும்..... இல்லையா, கிருஷ்ணா....?

கிருஷ்ணர் : சரி, நீ நிம்மதியாய் இரு.... நானும் rest எடுக்கப் போகிறேன்...

மேகலா : அப்போ..... வேற topic-ல பேசலாமா...?

கிருஷ்ணர் : ஐயோ.... அம்மா..... நான் இன்னைக்குப் போயி, நாளைக்கு வாரேன்.....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2