நாடெங்கும் வெறிச்சோடிக் கெடக்கே.. என்ன காரணம்..? - பகுதி 4

கிருஷ்ணர் : உரிமையைப் பற்றிப் பேசியவனை வெளுத்துத் தள்ளிட்டாங்கன்னு சொன்னியே; பாரு! மனுஷங்களோட நல்லதுக்காகத்தான் இத்தனை கடுமையான கட்டுப்பாடுகளும், கண்காணிப்புகளும். இது புரியாமல், அறியாமையில் ஆட்டம் போடுகிறவர்களை அடக்குவதற்கு அறிவுரை மட்டும் பத்தாது. ‘அடி உதவுவது போல, அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்’. என்றாலும், உலகெங்கும் கொரோனாவிற்கான பாதுகப்புகளும், நடவடிக்கைகளும் எடுத்திருப்பதில் இந்தியா தான் ‘role model'. பாதிக்கப்பட்டவர்களும், மற்ற நாட்டைக் காட்டிலும் ரொம்பக் குறைவு. அதற்கான மருத்துவ நடவடிக்கைகள், விரைவான செயல்பாடுகள், ஒரே நாளில் மருத்துவ மனை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகள் அத்தனையும், உலக அரங்கில், இந்தியாவை ஒரு வலிமை மிக்க நாடாகக் காட்டுகிறது. 'Hats off to Indian Government'.

மேகலா : கிருஷ்ணா! தமிழ்நாடு அரசாங்கத்திற்கும், ஒரு special வாழ்த்து சொல்லு, கிருஷ்ணா....

கிருஷ்ணர் : Of course! கட்டாயம் சொல்ல வேண்டும், மேகலா! இதை ஒரு ‘போர்’ என்று வைத்துக் கொண்டால், ‘மோடி’ நாட்டின் படைத் தளபதி என்றால், தமிழ்நாடு முதலமைச்சர், எடப்பாடி பழனிச்சாமி ஒரு ‘மகாரதர்’ என்றே கொள்ளலாம். சீக்கிரமே இந்தத் தொற்றுக் கிருமியை, இந்தியாவை விட்டு, ஏன், உலகத்தை விட்டே விரட்டுவோம்....

மேகலா : ரொம்ப thanks, கிருஷ்ணா! நீ கிருமியை விரட்டுவோம் என்று எங்களோடு சேர்ந்து குரல் கொடுக்கிறாயே; இனி இதன் வீரியம் குறைய ஆரம்பித்து விடும்.

கிருஷ்ணர் : ஏன் மேகலா....? எதிர்க்கட்சித் தலைவர்களில் யார், யார் களப் பணி ஆற்றுகிறார்கள்...?

மேகலா : யார் கேட்டார்கள், கிருஷ்ணா! நம்ம ஆளுங்களே நல்லா வேலை பாக்குறாங்க..... நம்ம பிரதம மந்திரி 22 மணி நேரம் (ஒரு நாளில்) வேலை பார்க்கிறாராம், கிருஷ்ணா! எதிர்க் கட்சியினர், எதில் குற்றம் சொல்லலாம் என்று தேடித் தேடிப் பார்க்கிறாங்க. மக்களுக்கு, வெளிநாடுகளிலிருந்து வரும் செய்திகள் எதுவும் தெரியாது என்று நினைத்துக் கொண்டு, வெளிநாடுகளில் பரவலாக எல்லா மக்களையும் நேரில் சென்று பரிசோதனை செய்து, நோயைக் கண்டறிவது போல, நம் நாட்டிலும் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று ஒருவர் கூறுகிறார். Social media-வில் அவரைத் தாறுமாறாகக் கிழித்துத் தொங்க விடுகிறார்கள்.....

கிருஷ்ணர் : யார் சொன்னது.....? இரு...., check பண்ணிப் பார்க்கிறேன். ஓ....! நம்ம C.B.I அதிகாரிகள், சுவரேறிக் குதித்துச் சென்று, விசாரணை பண்ணினார்களே, அவரா....? உலகமெல்லாம் மோடிஜியைத் தேடுகிறார்கள்; இவர் அதையெல்லாம் கவனிக்கவில்லையா....?

மேகலா : கிருஷ்ணா! இவர்களெல்லாம், ராத்திரி தூங்குவதற்கு முன், நாளைக்கு என்ன அறிக்கை விடலாம் என்று யோசிப்பார்கள் போல.... ‘வெளிநாடு’, ‘பரிசோதனை’ என்ற ரீதியில் பேசினால், மக்களும் நம்புவார்கள் என்று அவர்களாகவே முடிவெடுத்துப் பேசுகிறார்கள். இன்று, social media, பூமிக்கு அந்தப் பக்கம் இருக்கும் உலகத்தில் நடப்பதைக் கூட, live ஆகவே telecast பண்ணி விடுகிறது. பல நாடுகளிலும், ஒவ்வொரு நாளிலும், இந்த வைரஸின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நம்ம நாட்டில், நமது அரசாங்கம் மிகக் கடுமையாகப் போராடி, இரண்டாம் கட்ட நிலையிலேயே வைத்திருப்பது, ஒரு செயற்கரிய செயலாகவே நான் நினைக்கிறேன். தெய்வ அருள் உள்ளவராகவே பிரதமரை நான் பார்க்கிறேன், கிருஷ்ணா.... அவருக்கு இணையாக, தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுவதும், உன்னருளால் தான் என்று நான் திடமாக நம்புகிறேன். இந்த நேரத்தில், இப்படியெல்லாம் அறிக்கை வெளியிட்டு, comedy பண்ணுகிறார்கள்....!

கிருஷ்ணர் : சரி விடு, மேகலா! April 5, இரவு 9 மணிக்கு நான் excite ஆகி, ஒரு helicopter எடுத்துக் கொண்டு, வான்வெளியில் பறந்து, இந்தியாவை உற்றுப் பார்த்தேன். மிகச் சரியாக 9 மணிக்கு, மின்விளக்குகள் அணைக்கப்பட்டு, தீபங்கள் ஏற்றப்பட்ட அழகினைப் பார்த்தேன். நான் வான்வெளியில் பறந்து கொண்டு பார்த்ததால், இந்தியாவின் வரைபடம் மாதிரியான எல்லைக் கோடுகள், தீப விளக்குகளால் ஒளி விட்டுப் பிரகாசித்ததைப் பார்க்க முடிந்தது, மேகலா! 9 நிமிடங்களும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னையறியாமல் என் மனது நெகிழ்ந்து போனது. அத்தனை விளக்குகளும் எனக்குத் தனித் தனியே தெரியவில்லை. எல்லாம் இணைந்து, வெளிச்சமாய் மட்டுமே தெரிந்தது. இப்பப் புரியுதா மோடியின் ஒருமைப் பாட்டுத் திட்டம்....?

மேகலா : கிருஷ்ணா! நீ இப்படிச் சொல்லும் போதுதான், இந்தத் திட்டத்தின் ஆழம் எனக்குப் புரியுது, கிருஷ்ணா! மக்கள் அன்றாடம், bore அடிச்சுப் போய், அன்றாடத் தேவைகளுக்காகக் கூட வெளியில் வர முடியாத நிலையில், பிரதமர், April 5-ம் தேதி இரவு 9 மணிக்கு, உங்கள் வீட்டின் மின்விளக்குகளை ஒரு ஒன்பது நிமிடங்களுக்கு அணைத்து விட்டு, அவரவர், மெழுகுவர்த்தியோ, அகல்விளக்கோ, ‘டார்ச்சோ’ ஒளிரச் செய்து, ‘உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம், பயப்படாதீங்க என்று உங்கள் நண்பர்களுக்குப் பகிருங்கள்’ என்று சொன்ன வார்த்தை, மக்களுக்கு ஆறுதலாக, இதமாக இருந்தது என்பதுதான் நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை, கிருஷ்ணா....! வழக்கம் போல, ’மேதாவிக் கூட்டம்’, பிரதமரை சென்ற நூற்றாண்டு மனிதராக சித்தரித்து, நக்கல் பண்ணிப் பார்த்தார்கள். ஆனால், மக்கள், நக்கல் பார்ட்டிகளுக்கு வயித்தெரிச்சலைக் கொடுத்து விட்டு, விளக்கை ஏற்றி வைத்து, வெளிச்சத்தால் ஒன்றுபட்டு விட்டார்கள், கிருஷ்ணா!

கிருஷ்ணர் : இதுதான் ‘விதி’ போல.... பிரதம மந்திரிக்கு, கடவுள் பக்தியும், தெய்வ அருளும் நிறைய இருக்கு. அதனால்தான் அவருடைய நல்ல எண்ணத்தையும், முயற்சியையும் மக்கள் புரிந்து கொண்டு, அவர் கேட்டுக் கொண்டபடி, கூட்டுப் பிரார்த்தனையில் ஒன்று சேர்கிறார்கள். சரி, இந்த முக்கியமான காலக்கட்டத்தில் சுகாதாரத் துறை செய்திருக்கும் ஒரு நல்ல நடவடிக்கை ஏதாவது சொல்லேன்.

மேகலா : அடுத்த பகுதியில் விவரமாகக் கூறுகிறேன், கிருஷ்ணா....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1