வாகனங்கள் பலவிதம் - பகுதி 3
மேகலா : நான் குதிரை வண்டியில் போயிருக்கிறேனா என்று கேட்டாயல்லவா.....? குதிரை வண்டியில் போன மாதிரியும் இருக்கு....; போகாத மாதிரியும் இருக்கு.... சரியா நினைவில்லை கிருஷ்ணா.... ஆனா, மாட்டு வண்டியில் போயிருக்கிறேன், கிருஷ்ணா..... எங்க அப்பா, எனக்கு நினைவு தெரிஞ்ச காலத்திலிருந்தே, ‘car' வாங்கி விட்டார் என்பதால், மாட்டு வண்டியிலும் போக வேண்டிய அவசியமில்லாமல் இருந்தது. ஆனாலும் மாட்டு வண்டியில் சென்றிருக்கிறேன். குலதெய்வம் கோயிலுக்கு வழிபடச் செல்பவர்கள், குடும்பம் குடும்பமாக மாட்டு வண்டியில் செல்வதைப் பார்த்திருக்கிறேன் கிருஷ்ணா..... பொங்கல் வைப்பதற்கு உண்டான சாமான்கள் இத்யாதி, இத்யாதி எல்லாம் வண்டியின் அடியில், ‘தூளி’ மாதிரி சாக்கால் கட்டி தொங்க விட்டிருப்பார்கள். அதற்குள் தான் போட்டுக் கொண்டு செல்வார்கள்.
கிருஷ்ணர் : Car 'டிக்கி’ மாதிரி....
மேகலா : அப்படியேதான் கிருஷ்ணா.... இதெல்லாம் குடும்பமாக செல்லும் போது உபயோகிப்பது. அந்தக் காலங்களில், தனிப்பட்ட முறையில், car, two-wheeler எல்லாம் புழக்கத்திற்கு வந்திருந்தாலும், அது ரொம்ப luxurious, costly என்றுதான் மக்களால் பார்க்கப்பட்டது. ‘லோக்கலில்’ மக்களின் அவசரத்திற்கும், லகுவான பயணத்திற்கும் மக்களுக்கு ரொம்பவும் பயன்பட்டது சைக்கிள் தான் கிருஷ்ணா.
கிருஷ்ணர் : சரி..... அந்தக் காலத்தில், பணப்புழக்கம் இவ்வளவு சரளமாகக் கிடையாதல்லவா....? அன்றைக்கு 1000 ரூபாயைக் கண்ணில் பார்ப்பதே, அரிதான காலம். பணத்தின் மதிப்பும் அதிகம் தான். இருந்தாலும், மக்கள் தங்கள் கையில் கிடைக்கும் பணத்தை, ‘கார் வாங்கணும்’, ‘ஊர் சுற்றணும்’ என்று நினைத்தெல்லாம் செலவழிக்கவில்லை.... நமக்கு சைக்கிள் இருந்தாலே போதும்...., வேலையைப் பார்த்து விட்டு, கிடைத்த பணத்தை, சிக்கனமாகச் செலவழித்து, மிஞ்சிய பணத்தை சேமிக்கத்தான் யோசித்தார்கள். ‘சொகுசு வாழ்க்கையை’ மக்கள் சிந்தித்துப் பார்க்கவே நேரமில்லாமல், ஓடி ஓடி உழைத்தார்கள்.
மேகலா : கரெக்ட் கிருஷ்ணா.... வியாபார விஷயமாக வெளியூருக்குப் போக வேண்டும் என்றால் கூட, பஸ்ஸிலோ, train-னிலோ தான் பிரயாணம் செய்வார்கள். அந்தக் காலத்து மக்களுக்கு train-ல் travel பண்ணுவது கூட ஒரு அதிசயமான, பிரமிக்கத்தக்க travel தான், கிருஷ்ணா.... இந்த சைக்கிளைக் கூட எப்படி design பண்ணியிருப்பார்கள் தெரியுமா...., பின்னால் carrier இருக்குமல்லவா.... அது அவர்களுடைய சரக்கு மூட்டையை வசதியாக வைக்கும்படிக்கு, carrier போட்டு வைத்திருப்பார்கள். அந்தக் carrier-ல் தான், அவங்களுடைய product-ம் இருக்கும்; குடும்பமாகச் செல்லும் போது, அவருடைய wife-ம், அதில் தான் உட்கார்ந்து செல்வார்.
கிருஷ்ணர் : Oh....!
மேகலா : சைக்கிளின் seat-ஐயும், handle bar-ஐயும் இணைக்கும் ‘pipe' இருக்கும்ல, அதில் தன் குழந்தைக்கு, ‘baby seat' இருக்கும். Handle bar-ன் முன்னாடி ஒரு கூடை இருக்கும். அதில், market-ல் வாங்கிய பொருளையோ அல்லது, இன்னொரு குழந்தையையோ உட்கார வைத்து ஓட்டிச் செல்பவர்கள் பலருண்டு கிருஷ்ணா!
கிருஷ்ணர் : Oh! ஒரு ‘two-wheeler' அதாவது scooter-ல் செல்வது போல.... அப்படித்தானே....
மேகலா : சரியாச் சொன்ன கிருஷ்ணா! இந்த சைக்கிள் இருக்குல...., இதில் பலருடைய சைக்கிள்கள் ஓட்டும் போது, எங்கயாவது, ஏதாவது ‘சப்தம்’ வரும் வண்டியாகத்தான் இருக்கும். இப்பெல்லாம், car என்பதையே, E.M.I கட்டித்தான் வாங்குகிறார்கள். அதிலும் 3 வருடத்திற்கு ஒரு முறை, காரை மாற்றி, up-to-date car வாங்குகிறார்கள் அல்லவா. ஆனால், அப்பல்லாம், சைக்கிள் வாங்குவதையே second-hand-ல் தான் வாங்குவார்கள். வாங்கினால், அதை லேசுக்குள் மாற்ற மாட்டார்கள். ‘எங்க அப்பா’ வைத்திருந்த வண்டி என்று sentiment டயலாக் வேற பேசுவார்கள். ஒவ்வொரு சைக்கிள்காரனும், தினமும் வண்டியைத் துடைத்து, வாரம் தவறாமல், overhaul பண்ணி.... அடேங்கப்பா..... அலப்பரையைக் கூட்டி விடுவார்கள்.
கிருஷ்ணர் : இப்படிச் செய்யவில்லை என்றால், வண்டி கிழடு தட்டி விடும் போலயே....
மேகலா : இன்றைக்கு, பிறந்த குழந்தை நடை பழகும் போதே, அம்மாமார், ‘சைக்கிள்’ வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள், கிருஷ்ணா..... அந்தக் குழந்தை உயரத்திற்கு சைக்கிள். மறு வருஷம், அந்த சைக்கிளை விட குழந்தை உயரமாகி விடும்....!
கிருஷ்ணர் : அப்புறம் அந்த சைக்கிள் 'waste'; காயலான் கடைக்குப் போய் விடும்.....
மேகலா : அந்தக் காலங்களில், ஊரிலேயே, ஒரு அஞ்சாறு பெண்கள் தான் school-க்குச் சைக்கிளில் வருவார்கள். கிருஷ்ணா.... ஊரில் இருக்கும் அனைவருக்கும் தெரியும், ‘பிரேமசுந்தரி’, ‘விஜயசுந்தரி’, ‘கீதா’, school-க்கு சைக்கிளில் வருபவர்கள் என்று. உனக்கு ஒண்ணு தெரியுமா கிருஷ்ணா...., என்னோட best friend Vinotha தெரியும்ல.... அவ சைக்கிள்ளதான் school-க்கு வருவா.... நாங்க school-ல இருந்து வீடு திரும்பும் போது, என்னைக் கூப்பிட வந்திருக்கும் car-ஐத் திருப்பி அனுப்பி விட்டு, அவ கூட cycle-ல்லதான் வீடு திரும்புவேன். அவள் எங்க வீடு வரும் turning வரைக்கும் வண்டியை உருட்டிக்கிட்டேதான் வருவாள். அதன் பின் அவள் ’அப்படிக்கா’ செல்வாள்; நான் ’இப்படிக்கா’ திரும்புவேன்.
கிருஷ்ணர் : ஏன் cycle-ல் உட்கார்ந்து வந்தா என்னவாம்....?
மேகலா : Car-ஐத் திருப்பி அனுப்புறதே, அவ கூட பேசிக்கிட்டே வருவதற்குத்தானே கிருஷ்ணா.... அதனால் தான் நடந்தும், வண்டியை உருட்டிக் கொண்டும் செல்வோம் கிருஷ்ணா...
கிருஷ்ணர் : Oh! நீயும் தானே அந்தக் காலத்தில் பள்ளிக்கூடம் சென்றிருக்கிறாய். நீ சைக்கிளில் செல்லவில்லையா மேகலா....?
மேகலா : நானும், சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளத்தான் போனேன் கிருஷ்ணா.... சந்தடி சாக்குல, என் தம்பி handle bar-ஐப் பிடித்து, brake போடத் தெரியவில்லை என்று வெளுத்துருவான். நான் ‘போடா’ என்று சொல்லி, சைக்கிள் ஓட்டக் கத்துக்கப் போக மாட்டேன் என்று சொல்லி விட்டேன். இரண்டு முறை கீழே விழுந்து, முழங்காலில் சிராய்த்து விட்டது. என் தம்பிதான் தள்ளி விட்டானோ என்று சந்தேகப்பட்டு, கத்துக்கிறதை நிப்பாட்டிக் கொண்டேன்.
கிருஷ்ணர் : வீராங்கனை..... எப்படியோ 'car' ஓட்டக் கத்துக்கிட்டாய். நம்ம லெவலெல்லாம், 'car driving' கத்துக் கொள்வது தான் என்று, அன்றே நினைத்திருப்பாய்.... நீ பார்த்து, அன்றைய காலத்தில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட ‘சைக்கிள்’ ஏதாவது உண்டா மேகலா...?
மேகலா : சைக்கிள் ரிக்ஷாவே, இரண்டு பேர், மூன்று பேர் சேர்ந்து செல்வது மாதிரி வடிவமைக்கப்பட்டதுதானே கிருஷ்ணா....
கிருஷ்ணர் : Yes.... yes.... இன்றைய auto-வே, அன்றைய சைக்கிள் ரிக்ஷாவுக்கு, engine மாட்டி விட்டது மாதிரி தானே....!
மேகலா : ஷீத்தல், baby-யாக இருந்த காலத்தில், school children அதிகமாக பயணிப்பது, இந்த சைக்கிள் ரிக்ஷாவில் தான் கிருஷ்ணா. ஏழு, எட்டு குழந்தைகளை ஒரே வண்டியில் திணித்து, ரிக்ஷாவுக்கு வெளியில் ‘hook' மாட்டி விட்டு, அதில் புத்தகப் பையைத் தொங்க விட்டிருப்பார்கள். சில school-களுக்குச் செல்லும் ரிக்ஷாவின் பின்புறம், கூண்டு மாதிரி வடிவமைத்து, அதில் 10, 15 குழந்தைகள் வரை ஏற்றிச் செல்வதும் உண்டு. வாகனங்கள் பெருகப் பெருக, சைக்கிள் ரிக்ஷா, auto-வாக உருமாறி விட்டது கிருஷ்ணா!
சரி, அடுத்த பகுதியில் மேலும் பேசுவோம்.

Comments
Post a Comment