வாகனங்கள் பலவிதம் - பகுதி 4
கிருஷ்ணர் : இன்னும் சைக்கிள் ரிக்ஷா இருக்குதா மேகலா…?
மேகலா : ஸ்ரீவி மாதிரி ஊரில் கூட சைக்கிள் ரிக்ஷா கிடையாது கிருஷ்ணா…. Traffic அதிகமாகிப் போன இந்தக் காலத்தில், பெடலை அழுத்தி அழுத்தி, slow-வாகச் செல்லும் சைக்கிள் ரிக்ஷாவை, ‘ரிக்ஷாமேன்’களை விரும்புவதில்லை கிருஷ்ணா….
கிருஷ்ணர் : ஹை! ‘ரிக்ஷாமேன்’ இந்தப் பெயர் நன்றாக இருக்கிறதே…. இவரை ஏன் driver என்று கூப்பிடவில்லை…?
மேகலா : ஒரு வேளை, petrol வண்டி ஓட்டினாத்தான் driver என்று சொல்லுவார்களோ, என்னவோ, தெரியவில்லை! ஆனால், சவாரிக்குக் கூப்பிடும் போது, ‘ஏ ரிக்ஷா! என்றோ; auto…! என்றோ…., taxi என்றோதான் கூப்பிடுவார்கள் கிருஷ்ணா… சிலர், சைக்கிள் ரிக்ஷாவில் கூட, ‘மோட்டார்’ பொருத்தி ஓட்டியதும் உண்டு!
கிருஷ்ணர் : Oh! Funny! இந்த வாகனங்களையெல்லாம் நாம் கூப்பிட்டால் வந்து விடும். Train, Aeroplane – இந்த வாகனங்களைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.
மேகலா : ஆமாம்…… Train, track-ல் ஓடுவது; aeroplane, ஆகாயத்தில் பறப்பது…
கிருஷ்ணர் : மனிதனுக்கு, ஆகாயத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதே ஒரு விந்தையான விஷயம் தான், இல்லையா….. கண்ணதாசன் பாட்டு, என் நினைவில் வந்து என்னைப் பாடச் சொல்லுகிறது….
”பறவையைக் கண்டான், விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான், வானொலி படைத்தான்
எதனைக் கண்டான், மதங்களைப் படைத்தான்”
மேகலா : கிருஷ்ணா! நான் மேகலா….. இங்கிருக்கிறேன். புல்லாங்குழலின் இசையாக உன் மிருதுவான குரலில் பாட ஆரம்பித்து விட்டாய்…. இனி, பாட்டுக் கச்சேரி தானா….?
கிருஷ்ணர் : என்ன அருமையான பாடல்…… சரி….. நீ சொல்லு….. மனிதன் பறக்கும் ஆசையை எப்படி வெளிப்படுத்தினான்? உனக்குத் தெரிந்ததைச் சொல்லு….
மேகலா : கிருஷ்ணா…. நாம இந்த topic-ல பேச ஆரம்பிக்கும் பொழுது, இராமாயணத்தில், குபேரனின் ‘புஷ்பக விமானத்தை’, ராவணன் வைத்திருந்ததையும், ராவண வதம் முடிந்த பின், ராமர் அந்த விமானத்தில் ஏறி அயோத்தி திரும்பியதாகப் படித்தோம். இவர்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்கள். அனுமன் கூட, தன் காலை, மஹேந்திர மலையில் ஊன்றி, வானில் பறப்பதாக, அதாவது ஒரு விமானம் take-off ஆவது போலத்தான் வால்மீகி விவரித்திருப்பார். அந்தக் காலத்தில், பறக்கும் சக்தியை மக்கள் எப்படி அறிந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், 19-ம் நூற்றாண்டின் இறுதியில், மனிதனுக்கு hydrogen-ஐ ஒரு பலூனில் அடைத்து, அதைப் பறக்க வைக்க முடியும் என்று யோசித்திருக்கிறான். அதன்படி, பலூனில், காற்றை அடைத்து, அதில் ஒரு கூடை மாதிரி ஒரு இருக்கையை அமைத்து, பட்டம் பறப்பது போல பறந்திருக்கிறான். அது காற்றடிக்கும் திசையிலெல்லாம் பறந்து செல்லும். காற்று நின்று விட்டால், கீழே விழுந்து விடும்…… ஆனாலும், காற்றில் மிதந்த சுகம், காற்றடிக்காவிட்டாலும் பறப்பது எப்படி என்று மனிதனை சிந்திக்க வைத்தது. அதன் பிறகு தான், பலூனில் hydrogen-ஐ அடைத்து, ஜெனரேட்டர் மாதிரியான ஒரு மோட்டாரைப் பொருத்தி……
கிருஷ்ணர் : இரு…. இரு…… ஜெனரேட்டரா……?
மேகலா : ஆமாம் கிருஷ்ணா! Inverter, ‘U.P.S’ வருவதற்கு முன்பு, power cut time-ல் ஜெனரேட்டரை இயக்கித்தான், electricity-யை இயக்குவார்கள். அதில் ஒரு belt மாதிரி இருக்கும். அந்த belt-ஐ இழுத்து, switch-ஐப் போட்டால், power இயங்கும். அது மாதிரியான ஒரு மோட்டாரைப் பொருத்தி, பலூனை லேசாக்கி மேலெழுப்பச் செய்யும் முயற்சியில் மனிதன் வெற்றியும் பெற்றான். காற்றின் நிசப்தமான இடத்தில் கூட, பலூன் பறந்தது.
கிருஷ்ணர் : அப்புறம்…..
மேகலா : என்னவோ…., உனக்கு ஒண்ணுமே தெரியாத குழந்தை மாதிரி கேட்கிறாயே கிருஷ்ணா….. நீ அறியாததா….?
கிருஷ்ணர் : நீ சொல்லும் பொழுது, இடை மறித்துச் சொல்ல வேண்டாம் என்று பார்க்கிறேன்…. சொல்லு….
மேகலா : அப்புறம் என்ன…… hydrogen வெடிக்கும் தன்மையுடையதல்லவா…., ஒன்றிரண்டு வெடித்துப் போனதால், அரசாங்கம் hydrogen balloon-க்குத் தடை விதித்தது. அப்புறம் Wright brothers-ன் பெரு முயற்சியில், இன்றைய பறக்கும் விமானம் வடிவமைக்கப்பட்டது…..
கிருஷ்ணர் : ஓஹோ…. எப்படியோ, மனிதனுக்குள் பறக்கும் ஆசையும், ஆர்வமும், அவனுடைய சௌகர்யத்திற்கான ஒரு வாகனம் பிறக்க காரணமாகிறது.
மேகலா : அது மட்டுமல்ல கிருஷ்ணா…. பெரும் நாசத்தில், ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் போகும் பொருட்கள் கூட, அதை என்ன செய்வது என்று யோசித்த நிலையில், ஒரு வாகனம் பிறக்க காரணமாயிருந்திருக்கிறது.
கிருஷ்ணர் : அப்படியா…. இது என்ன புதுக்கதை….. எனக்குத் தெரியாமல்…..
மேகலா : உனக்குத் தெரியாமலா….. அண்ட சராசரங்களில், இண்டு இடுக்கில் நடக்கும் சிறு அசைவு கூட உன் பார்வையிலிருந்து தப்ப முடியாது என்னும் போது…., இந்த நிகழ்வு மட்டும் நீ அறியாமல்…., எப்படி கிருஷ்ணா…?
கிருஷ்ணர் : நெசம்மா எனக்குத் தெரியாது….. கொஞ்சம் இரு….. எங்க, நீ சொன்ன வார்த்தையை திருப்பிச் சொல்லு…. ‘பெரும்’….. ‘நாசத்….’ இரண்டாம் உலகப் போர் நடந்த இடத்திலா….? ‘ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் போகும் பொருட்கள்’….. ஸ்ஸ்ஸ்…. ம்….. கண்டு பிடிச்சிட்டேன்….. ராணுவப் பகுதிக்குள், சிதறிக் கிடந்த ராணுவத் தளவாடங்களையும், போர் விமானங்களின் பகுதிகளையும் பார்க்கச் சென்றவர் கண்களில் பட்டதுதான், விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த ‘சக்கரங்கள்’…, சரியா…..?
மேகலா : Yes…… you catch my point….. எல்லா நிகழ்வுகளையும் நடத்தி விட்டு…., கொஞ்சம் கூட அசராமல்…., ஏதோ யோசிச்சு சொல்லுவது போல சொல்றியே கிருஷ்ணா….!
கிருஷ்ணர் : அது இருக்கட்டும்….. நீ சொல்ல வந்தத சொல்லு…..
மேகலா : கிருஷ்ணா…., இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பின், போர் நடந்த இடங்களில் சேதமடைந்த ராணுவத் தளவாடங்களைப் பார்வையிட வந்த அதிகாரிகள் கண்களில், விமானங்களில் மாட்டப்பட்டிருந்த டயர்கள் காணப்பட்டது. உபயோகமற்ற இத்தனை டயர்களையும் என்ன செய்யப் போகிறோம் என்று திகைத்த நிலையில், ஒரு மெக்கானிக், அந்த டயர்களை இணைத்து, இரு சக்கர வாகனத்தை உருவாக்கி, டயர்களை உபயோகமானதாகச் செய்து காட்டினாராம்.
கிருஷ்ணர் : வாவ்…! ஓ….! 2-ம் உலகப் போர் காலத்திற்குப் பிறகு தான், இரு சக்கர வாகனங்கள் புழக்கத்துக்கு வந்ததோ…… ஆம்மாம்…. நடுத்தர குடும்பத்தினரின் பட்ஜெட்டுக்கு உட்பட்ட இரு சக்கர வாகனம்….., சூப்பர் தகவல். இந்த இரு சக்கர வாகனங்களில் உனக்குத் தெரிந்த பெயர்களைச் சொல்லு மேகலா….
மேகலா : இது பற்றி விரிவாக அடுத்த பகுதியில் பேசலாமே…
Comments
Post a Comment