வாகனங்கள் பலவிதம் - பகுதி 5

 மேகலா : இரு சக்கர வாகனங்கள் சிலவற்றின் பெயர் கேட்டிருந்தாயல்லவா கிருஷ்ணா? கிருஷ்ணா! ‘லேம்ரட்டா’ (Lambretta) என்று சொல்லப்படும் ஒரு scooter தான் எனக்குத் தெரிஞ்சி ‘அரதப்பழசு’. நான் பார்த்த வரையில், ‘லேம்ரட்டா’ scooter உயரமாகவும், pillion-ல் உட்காருபவர்களுக்கு கொஞ்சம் அசௌகர்யமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய கல்யாணம் நடந்த வருடத்தில், ‘Bajaj scooter’ வந்து விட்டது. இது ஓட்டுபவர்களுக்கும், பின்னாடி அமர்ந்து செல்பவர்களுக்கும் சௌகர்யமாக இருக்கும். அப்பல்லாம், key வைத்து start பண்ண முடியாது. Scooter-னாலும் சரி, motor bike-னாலும் சரி, key வைத்து open பண்ணி, வலது பக்கம் starter-ஐ உதைத்து, start பண்ணினால் தான், வண்டி, move ஆகும். கொஞ்சம் old ஆன வண்டியை start பண்ணுவதற்கு உதைச்சு, உதைச்சு ‘ஒரு கால்’ நொண்டியடிக்கிற அளவுக்கெல்லாம் அழிச்சாட்டியம் பண்ணும் வண்டியத்தான் நான் நெறய பார்த்திருக்கிறேன் கிருஷ்ணா!

கிருஷ்ணர் : Oh! நீ scooter-ஐ உதைச்சு ‘start’ பண்ணியிருக்கியா, மேகலா?

மேகலா : ஐயோ… கிருஷ்ணா…. எத்தனை வாட்டி உதைச்சிருக்கேன்…. எங்காவது, அவசரமாகக் கிளம்பும் போது தான்…. அதுவும் சினிமாக்குக் கிளம்பிட்டோம்னா…., scooter, smell பண்ணி விடும். உடனே, உதைக்காமல் கிளம்புவதில்லை என்று ‘மக்கர்’ பண்ண ஆரம்பிக்கும். அதிலும், scooter-ன் handle என்று சொல்வோமே, அதைக் ‘காது’ என்று வைத்துக் கொள்வோம். அந்தக் காதையும், பின்னாடி டயர் ஒன்று (stepney) மாட்டியிருப்பார்கள். அதன் பின்னால் ஒரு carrier handle இருக்கும். அதைப் பிடித்து சாய்த்து, சாய்த்து வலுவேத்தி, ‘கிக்’கு கொடுப்பாங்க….

கிருஷ்ணர் : அப்புறம் start ஆயிருமா….?

மேகலா : ஒரு வழியா start ஆயிரும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Starting-ல் உதை வாங்கும் scooter ஓடும் போது, ஏதாவது ‘சில்மிஷம்’ பண்ணுமா….

மேகலா : உதை வாங்குன பிறகு, நல்லாதான் ஓடும் கிருஷ்ணா… இப்ப இருக்கிற scooter-ல seat-அத் தூக்குனா, ‘டிக்கி’ இருக்கும்; அதில் வாங்கும் சாமான்களைப் போட்டுக் கொள்ளலாம். ஆனா, அப்ப இருந்த scooter-ல், டிக்கி place தான், petrol tank. இரண்டு seat-க்கு நடுவில், tank-ன் mouth இருக்கும்.

கிருஷ்ணர் : அப்போ…., வாங்கும் சாமானை எங்கு வைப்பார்கள்….?

மேகலா : Back wheel-ஐ மறைக்க ஒரு ‘கவர்’ இருக்கும். அந்த இடத்தில் ஒரு ‘டிக்கி’ மாதிரி இருக்கும். அதற்குள், scooter-ஐத் துடைக்கும் துணி, nut-ஐக் கழட்டும் spanner எல்லாம் வைத்து…., அது ஒரு மாதிரியாகத்தான் இருக்கும். இப்ப இருக்கும் scooter சகல சௌகர்யங்களையும் வைத்து தயாரித்திருக்கிறார்கள். இன்றைய scooter-ஐ உதைக்கத் தேவையில்லை கிருஷ்ணா…. இருந்தாலும், எனக்கு scooter-ஐ விட, motor bike என்று சொல்லப்படும் இரு சக்கர வாகனம் தான் ரொம்பப் பிடிக்கும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : என்ன காரணமோ….

மேகலா : அந்தக் காலத்தில், ‘Bullet’ என்ற ஒரு வண்டி உண்டு. Royal Enfield என்ற company-யின், Bullet என்ற வண்டிதான் எல்லோராலும் விரும்பப்படுவது. Bullet என்ற வண்டியை ஓட்டுவதே தனி ‘கெத்து’ தான் கிருஷ்ணா…. நல்ல வாட்ட சாட்டமான மனிதர்கள் ஓட்டினால் தான், அந்த வண்டிக்கே மரியாதை கிருஷ்ணா! 1970-ல் சிவகாசி மாதிரி ஊர்களில் மொத்தம் பத்து பேர் ‘புல்லட்’ வைத்திருப்பார்களா என்பதே சந்தேகம் தான். ‘போலீஸ்’ மாதிரி கம்பீரமானவர்கள் ‘புல்லட்’டை ஓட்டினால், வாயில் ‘ஜொள்ளு’ விடாத பொம்பளப் புள்ளைங்க இருக்க முடியாது…!

கிருஷ்ணர் : அடிப்பாவி…… ஒரு ‘மோட்டார் பைக்’கை ஓட்டி வந்தால், ‘ஜொள்ளு’ விடுவாயா….?

மேகலா : அதன் கம்பீரம் அப்படி…., கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Non-sense…. வண்டியைப் பார்த்து ஜொள்ளு விடும் பொண்ணு நீயாகத்தான் இருப்பாய்….

மேகலா : Non-sense ஆய் இருந்தால் தான கிருஷ்ணா…, ஜொள்ளு விட முடியும்…

கிருஷ்ணர் : அப்போ…. உனக்கு two wheeler-ல motor bike தான் ரொம்பப் பிடிக்கும்; இல்லையா…? சரி…, சைக்கிள் ஆச்சு…., இரு சக்கர வாகனம் ஆச்சு. மூன்று சக்கர வாகனம் உனக்கு ஓட்டத் தெரியுமா மேகலா….?

மேகலா : மூன்று சக்கர வாகனத்தில், சைக்கிள் ரிக்‌ஷா பார்த்துட்டோம். அது எனக்கு ஓட்டத் தெரியாது. அடுத்து இருப்பது என்னோட favorite வாகனம் ‘auto’ தான் கிருஷ்ணா. அதெல்லாம் எனக்கு ஓட்டத் தெரியாது, கிருஷ்ணா.

கிருஷ்ணர் : ‘Auto’ …. இப்போ எல்லா நகரங்களிலும் புழக்கத்தில் இருப்பதுதானே மேகலா…

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. நான் கோயம்புத்தூரிலிருந்து, ஸ்ரீவி வரும்போது கூட, இத்தனை auto கிடையாது கிருஷ்ணா…. இப்போதான் முக்குக்கு முக்கு, auto நிக்குது. அதுலயும், ஏழு, எட்டு ஆட்டோக்கள் நிக்குது….

கிருஷ்ணர் : அத்தனை பேருக்கு வாழ்வு கொடுக்குது…

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. இப்போ, நாம சிவகாசி போகும் வழியில், ‘மல்லி’ல கூட ஆட்டோ நிக்குது; நீ கூட பார்த்திருப்ப கிருஷ்ணா. இந்த ஆட்டோவைப் பற்றின சுவாரஸ்ய தகவல்களை உன்கிட்ட சொல்லியே ஆகணும் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : சொல்லு…. சொல்லு…. நீ விடுகிற கதையெல்லாம் கேட்கத்தானே உட்கார்ந்திருக்கிறேன்…..

மேகலா : பரவாயில்லை…. ‘போர்’ அடிச்சாக் கூட நீ கேட்கத்தான் செய்யணும்…

கிருஷ்ணர் : கதை விடுறதுண்ணு தீர்மானிச்சுட்ட… சொல்லு…. சொல்லு….

மேகலா : சினிமாலயெல்லாம், Taxi driver-ஐக் காட்டிலும், ஆட்டோக்காரன் கதையைத்தான் அதிகம் காட்டுவார்கள்……

கிருஷ்ணர் : ஆமாம்…. அது ஏன் அப்படி….?

மேகலா : அது என்னண்ணு தெரியல கிருஷ்ணா….. ஹீரோ, ஏழைப்பங்காளனாக இருந்தால், சௌகர்யமான வேலை, ஆட்டோக்காரனாக வருவது தான்….. ‘பாக்ஷா’ ஹீரோ, தாதாவாக இருந்து ஆட்டோக்காரனாவான்; ‘காதல் கோட்டை’ ஹீரோ, பெரிய officer ஆக இருந்து ஆட்டோக்காரனானவன்; விவேக், ஒரு படத்தில் மட்டுமில்லை, நிறைய படங்களில் ஆட்டோக்காரன்; ‘சகுனி’ படத்தில் சந்தானம் ஆட்டோக்காரன் தான். அதிலும், ஒரு படத்துல விவேக் பேசும் comedy என்ன தெரியுமா கிருஷ்ணா….? ’நாங்க left-ல கைய காமிப்போம், right-ல signal-அப் போடுவோம்; ஆனா, நேரா வண்டிய வுடுவோம்’…. என்று ஆட்டோக்காரங்களோட கலக்கல் வண்டி ஓட்டும் தன்மைய காமெடியாச் சொல்லுவாரு…

கிருஷ்ணர் : ஆட்டோ, சந்து பொந்துக்குள்ள எல்லாம் பூந்து வெளி வரும் என்பதால், ஆட்டோ தான் கதை எழுதறவங்களுக்கும் சௌகர்யமான வாகனம் போலும்; ‘Chase’-க்கு, காமெடிக்கு, லவ் பண்ணுவதற்குக் கூட…! இல்லையா…

மேகலா : இந்த நூற்றாண்டின் மிகச் சௌகர்யமான, ‘சீப்’பான வாகனம், ஆட்டோ தான் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : நீ ஏன் ‘ஆட்டோ’, உன் உபயோகத்திற்கு வாங்கக் கூடாது?

மேகலா : கிருஷ்ணா…. ‘கார்த்தி’, ‘ஆதி’லாம் எங்கூட இருந்திருந்தால், local use-க்காக ஆட்டோ வாங்கியிருக்கலாம், கிருஷ்ணா… எங்க ரெண்டு பேருக்கு, ஆட்டோ மட்டும் வாங்கினால், நெடுந்தூரப் பயணத்திற்கு என்ன செய்வது? அதனால், local-க்கு ஆட்டோவைக் கூப்பிடுவேன்; சிவகாசி, மற்றும் வெளியூர்களுக்கு, காரை எடுப்பேன்.

கிருஷ்ணர் : சரி…., கார் பற்றிய விவரங்களோடு அடுத்த வாரம் சந்திப்போம்….

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1