வாகனங்கள் பலவிதம் - பகுதி 7
மேகலா : கிருஷ்ணா! Sorry கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : எதுக்கு sorry….! என்ன ஒரு மாதிரி முழிக்கிற….? ஏதாவது தப்பு…. கிப்பு…. இல்லையே, அது மாதிரி ஒண்ணும் நடக்கலயே….
மேகலா : நீண்ட…. belated happy birthday, கிருஷ்ணா….. நேத்தே சொல்லியிருக்கணும்…. சொல்லலை… இன்று கட்டுரையை எழுத உட்கார்ந்ததும் சொல்லியிருக்கணும்…. என்ன மன்னிச்சுக்கோ கிருஷ்ணா…
கிருஷ்ணர் : Happy birthday சொல்லலயா…. என்ன உளர்ற… நேற்று முறுக்கு சுட்டு, லட்டு செய்து, பால், வெண்ணெய், தயிர் எல்லாம் எடுத்து வைத்து, என்னையும் தவழ விட்டு, வாயில் வெண்ணெய் தடவி, குதூகலப்பட்டு; என் முன்னே உட்கார்ந்து கதையும் சொன்னயே…. இது என் பிறந்த நாளுக்காகத்தானே…..
மேகலா : அது வேறு…., கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம். நான், note book எடுத்து, பேனாவால் பேசினால் தான் உன்னுடன் பேசுவதாகவும், உனக்கு வாழ்த்து சொன்னதாகவும் அர்த்தம். நேற்று ஜெயந்தி பூஜை முடிந்த பின்பு, பிரசாதம் சாப்பிட்டு, serial பார்த்து, அப்படியே படுத்து விட்டேன். நான் book-ம் தூக்கல…., birthday wishes-ம் சொல்லல….. அதனாலதான்….
கிருஷ்ணர் : முட்டாள்…. முட்டாள்….. ‘அதனாலதான்’…., என்ன இழுக்கற….?
மேகலா : Belated happy birthday கிருஷ்ணா….
கிருஷ்ணர் : திகட்டிப் போச்சு…. பால், வெண்ணெய், முறுக்கு, லட்டு எல்லாம் சாப்பிட்டாச்சு…. அதெல்லாம் திகட்டல…. உன் birthday wishes தான்….. ரொம்ப திகட்டிப் போச்சு…. சரி…., உங்க அப்பாக்கு நல்லா கார் ஓட்டத் தெரியும் என்று சொன்ன பிறகு, பேச்சு ‘track’ வேற route-ல போயிருச்சி… வேற வாகனங்களைப் பற்றி ஏதும் சொல்லப் போகிறாயா….?
மேகலா : ஆமாம் கிருஷ்ணா! ‘புகைவண்டி’ என்று பெயர் கொண்ட ரயில் வண்டியைப் பற்றி நீ அறிவாயா கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Train தான….. நல்லாத் தெரியுமே….. ஆமாம்…, இதற்கு ஏன் ‘புகைவண்டி’ என்று பெயர் வைத்தார்கள்? புகையாலயா வண்டி ஓடுது?
மேகலா : நீ கிண்டலடித்தாலும், அப்பாவியாகக் கேட்டாலும், ‘புகை’யால் தான் இந்த வண்டி ஓடியது கிருஷ்ணா…!
கிருஷ்ணர் : என்னது….. ‘புகையாலா’….. மேகலா, நீ என்ன ‘புருடா’ வுடறியா?
மேகலா : ‘புருடா’….., ‘நான்’….. ஏன் சொல்ல மாட்ட; கிருஷ்ணா…. இதுவரைக்கும் நாம் பார்த்த வாகனங்களின் old get-up-ம், new get-up-ம் சேர்ந்துதானே பார்த்தோம். அதே மாதிரி train-ன் ‘பழைய வடிவம்’, இன்னும் சொல்லப் போனால், ஆரம்ப வடிவமே, ’ஆவி’, ‘புகை’ இவற்றின் உந்துசக்தியைக் கொண்டு வடிவமைத்தது தான். நீராவியின் ஆற்றல், கனமான வண்டியைக் கூட இழுக்க வல்லது என்று அறியப்பட்டவுடன், நிலக்கரியின் ஆற்றலைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதுதான் இந்த ரயில் வண்டி கிருஷ்ணா……
கிருஷ்ணர் : அப்படியா….. ஓஹோ….!
மேகலா : என்ன, ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி கேக்குற கிருஷ்ணா…. காலத்தால் கூட அளவிட முடியாத காலநாயகன் நீ….. அந்தக் காலத்து ரதத்திலிருந்து, புஷ்பக விமானம் முதல், இன்றைய ‘ராக்கெட்’ வரை அனைத்தையும் அறிவாய். எல்லா இயக்கங்களை இயக்குபவனும் நீயே….. ‘கலாம்’ மாதிரியான இயக்கங்களின் நாயகர்களைப் படைத்து இயக்குபவனும் நீயே….. இது எதுவும் தெரியாத பாமரன் போல….. ‘உம்’ கொட்டி கேட்கிறாயே…..
கிருஷ்ணர் : எல்லாம், ‘நீ’ ‘சரியா’ச் சொல்லுறியா என்று சரி பார்க்கத்தான்….
மேகலா : அடப் பாவி…..
கிருஷ்ணர் : சரி…. சரி….. அடுத்து என்ன….?
மேகலா : இப்போ புகைவண்டி காலம் மலையேறிப் போச்சு கிருஷ்ணா….. குளிக்காம, வேர்த்து விறுவிறுத்து இருக்கிறவங்களப் பார்த்து, ‘ரயில் இன்ஜின்ல கரியள்ளிப் போடுறவன மாதிரி’ இருக்கிறயே என்று கேட்ட காலம் போயி, train-ல இருந்து இறங்கி நேரே conference hall-க்குப் போகலாங்கிற மாதிரி, train பிரயாணம் அத்தனை சௌகர்யமாய் இருக்கிறது கிருஷ்ணா…. அதிலும், ஊருக்கு ஊர் செல்லும் train-ஐ விட, ஊருக்குள்ளேயே செல்லும் train இன்னும் sophisticated ஆக இருக்கு கிருஷ்ணா; நான் Bangalore-ல் சென்றேன்….
கிருஷ்ணர் : ஊருக்குள்ளே செல்லும் train-ஆ….? என்ன, கதை உடறயா….? ஸ்ரீவி ஊருக்குள்ளே எங்க train ஓடுது?
மேகலா : நம்ம ஊரு….. village…..; நான் சொல்றது சென்னை, பெங்களூர் போன்ற மாநகரத்தில் ஓடும் ‘metro train’.
கிருஷ்ணர் : ஓ! Metro train-ஆ…. நானெல்லாம் metro train, U.S.A-யிலேயே travel பண்ணியிருக்கேன்.
மேகலா : பார்றா…; கிருஷ்ணா, அந்த அனுபவத்தை எனக்கும் தான் சொல்லேன்…
கிருஷ்ணர் : சிகாகோ நகரத்தில், Down-town area-விலிருந்து 1 மணி நேரம் travel-ல் Rosemont என்ற area-வுக்குச் சென்றேன். சிகாகோவில் railway station, ஊருக்கு வெளியே என்பது கிடையாது. Bus stand மாதிரி, அதுவும் ஊருக்கு நடுவில் தான் இருக்கும். ஆனால், station இருப்பது, train ஓடுவது எல்லாம் up-ல தான் இருக்கும்…
மேகலா : Up-லயா….., என்ன கிருஷ்ணா….?
கிருஷ்ணர் : ஆமாம்….. up-லனா…… மேம்பாலம் மாதிரி கட்டி, இப்போ metro train station, Chennai, Bangalore-லயும் இது மாதிரிதான இருக்கு….
மேகலா : ஓ…. அப்படிச் சொல்றயா….
கிருஷ்ணர் : ஊருக்கு வெளியே வந்தவுடன், track தரையிலேயே ஓட ஆரம்பிக்கும். அங்கெல்லாம் ticket எடுப்பது கிடையாது; Card system தான். நாங்க train-க்காக wait பண்ணிக் கொண்டிருந்தோம்; இதமான climate (ஆங்கிலப் படத்தில் வரும் scene மாதிரி). Train மலைப்பாம்பு வருவது போல, வளைந்து, வளைந்து வருகிறது. காத்திருப்பவர்களிடம் பரபரப்பே கிடையாது. Station வந்தவுடன், ஏறுபவர்களுக்கு இதமாக, தரையோடு சேர்ந்து நிற்கும், ரயிலின் ஏறுபாதை; ஏறியவுடன், family-யாக அமர்வதற்கு seat, தனித்தனி seat என்று இருக்கிறது. நாம் அமர்ந்ததும், நிமிர்ந்து பார்க்கும் இடத்தில், digital board; அதில் ஊரின் பெயர், அடுத்த station வரும் நேரம் என்று சிவப்பு வெளிச்சத்தில் ஒளிர்ந்து கொண்டே வருகிறது. நாம் இறங்கும் station வரப் போவது தெரிந்தவுடன், ready-யாகி, இயல்பாக இறங்கிச் செல்ல முடியும். இறங்கியவுடன், ‘rental car’ எடுத்துக் கொண்டு, நாம் செல்லும் இடம் செல்ல வேண்டும்.
மேகலா : ஓஹோ….! Metro station தவிர, ஊர் விட்டு ஊர் செல்லும் தொலைதூர train-ல் போனீர்களோ….!
கிருஷ்ணர் : ஆமாம்….; போனோமே…..; ‘நயாகரா நீர்வீழ்ச்சி’ தெரியுமா….?
மேகலா : ஆமாம்; நயாகரா நீர்வீழ்ச்சி….., தெரியும்….
கிருஷ்ணர் : தெரியுமா….., நான் சொன்னது, Nayagara Falls; I mean, U.S.A-யில் இருக்கும் New York…. இருக்குல்ல…. அந்த State-ல் இருக்கும் ‘Buffalo’ நகரம்…. அங்குள்ள Falls….
மேகலா : சரி…. சொல்லு…. அந்த ஊருக்கு train-ல் போனீர்களா…..
கிருஷ்ணர் : அந்த அனுபவத்தை அடுத்த பகுதியில் விவரமாகக் கூறுகிறேன், okay….
Comments
Post a Comment