கொரோனா படுத்தும் பாடு - பாகம் 2
மேகலா : கிருஷ்ணா….. இப்போ சமீபத்தில், என் தம்பி மகள் கல்யாணத்திற்குப் போனேனல்லவா….
கிருஷ்ணர் : என்னது….. உன் தம்பி மகளா…. உங்கள் வீட்டில் தான் எல்லா கல்யாணமும் முடிஞ்சிருச்சில்ல…
மேகலா : கிருஷ்ணா….. இது எங்க ‘சின்னய்யா’ பேத்தி கிருஷ்ணா…
கிருஷ்ணர் : ‘சின்னய்யா’…. ‘வாவ்’, தூய தமிழ்ச் சொல்; இந்தக் ‘கொரோனா’ time-ல கல்யாண வீட்டிற்கு சென்று ஆட்டம் போட்டாயா….?
மேகலா : எங்கேயும் வெளியில் போகாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தோம்…. ஒரு வண்டி நிறைய பாசத்தைக் கொண்டு வந்து, நம்ம மேல கொட்டி, கையில் அவன் மனசு போலயே ‘தகதக’வென மின்னும் ‘சேலையை’,,,,. ஒண்ணல்ல, மூணு கொடுத்து, ‘அக்கா! கல்யாணத்துக்கு வந்திருங்கக்கா’ என்றால், என்ன செய்ய கிருஷ்ணா! அதான்! போய் விட்டேன். கல்யாண வீட்டில், reception-ல் சந்தனமும், கல்கண்டும் வைக்கல; ‘mask’ தான் வைத்திருந்தார்கள். ஒரு chair-க்கும் இன்னொரு chair-க்கும் இடையில் 2 அடி இடைவெளி……
கிருஷ்ணர் : நீங்கள் இடைவெளியைக் கடைப்பிடித்தீர்களா…., நெருக்கிப் போட்டு உட்கார்ந்து அரட்டை அடிச்சீங்களா….?
மேகலா : ம்…. கொஞ்சம்…. கடைப்பிடித்தோம்…. கொஞ்சம்…..
கிருஷ்ணர் : கொஞ்சம் விதியை மீறினீர்கள்….
மேகலா : கிருஷ்ணா….. அதை விடு கிருஷ்ணா….. அங்கு ‘camera’-வை handle பண்ணுன camera man தான் இன்றைய topic….
கிருஷ்ணர் : ‘camera man’-ஆ, ‘camera’-வா….
மேகலா : Oh! Sorry, sorry….. camera-தான். கிருஷ்ணா…. அவர்கள் camera……, நடக்குது…., மேலும் கீழும் ஏறி இறங்குது…. என்ன வேலையெல்லாம் பார்த்தது தெரியுமா….?
கிருஷ்ணர் : வீடியோ எடுத்தாங்களா; அப்போ angle பார்த்து move பண்ணுவதற்காக அங்கும் இங்கும் போய்த்தானே வரும்….. நீ மட்டும், இந்த டப்பா camera-வை வைத்து, உருண்டு உருண்டு photo எடுக்கும் போது, படம் எடுப்பதைத் தொழிலாகக் கொண்டவர், camera-வை move பண்ண மாட்டாரா…?
மேகலா : Move பண்ணுவார்கள். Camera man என்றால், என்ன செய்வார்கள்…. தோளில் camera-வை வைத்திருப்பார். அவர், அந்த கல்யாண வீட்டை விட்டு வெளியேறும் வரைக்கும், அந்தத் தோளிலிருந்து camera இறங்காது. அந்த view-வைப் பார்த்த கண்ணும், lense-ஐ விட்டு அகலாது அல்லவா…; இங்கு அப்படியில்லை. ஒரு stand, ‘stool’ மாதிரி இருக்குது. அதன் நடுவில் railway track மாதிரி ஒரு track இருக்கு; அதில் camera-வை மாட்டி விடுகிறார். எந்த சம்பவத்தை எடுக்கப் போகிறாரோ, அங்கு இந்த stool-ஐ வைத்து, மேலே தெரியும் camera screen-ல் picture-ஐப் பார்த்துக் கொண்டே, camera-வை இங்கும் அங்கும், ’அசால்ட்டாக’ நகர்த்துகிறார். அந்தக் camera-வும் சுற்றிச் சுற்றி வந்து படமெடுக்கிறது கிருஷ்ணா…. நான் கல்யாண வீட்டில் வேறு எதையும் பார்க்கவில்லை கிருஷ்ணா. அந்த camera-வைத்தான் அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். இது ஒரு வசதி, சுற்றிச் சுற்றி எடுப்பதற்காக. அடுத்து, கல்யாண மேடையில், மேலும் கீழுமாக angle-ல் படமெடுக்கணுமல்லவா, அப்போ, அந்தக் camera-வை ஒரு நீண்ட தோசைக்கரண்டி மாதிரியான handle வைத்திருக்கிறார். அதில் மாட்டி விட்டு, மேலும் கீழும் அசைத்து படம் எடுக்கிறார். Lense-ல் கண்ணை வைத்துப் பார்ப்பது என்பதே கிடையாது கிருஷ்ணா….
கிருஷ்ணர் : அட மக்கு! அதான் screen-ல் படம் தெளிவாகத் தெரியுமில்லையா…. நீ உன் mobile-ல் படம் எடுக்கும் பொழுது, லென்ஸில் கண் வைத்தா பார்க்கிறாய்? எந்தக் காலத்தில் இருக்கிறாய் மேகலா…! நீ ‘Vijay Channel’-க்கு, சமையல் கில்லாடிகள் program-க்காக சென்றிருந்தாயே, அப்போ, ஒரு camera அங்கும் இங்கும் move ஆகி படம் எடுத்ததே, ஞாபகம் இருக்கா? ஒரு camera man எந்த angle-ல் நின்றால், visual-ஆக மேடை மொத்தத்தையும் cover பண்ண முடியும்; எதை zoom பண்ணிக் காட்ட வேண்டும்; எந்த angle-ல் அழகாக இருக்கிறது…. இதெல்லாம், கல்யாண மண்டபத்திற்கு வந்த சில நொடிகளிலேயே தெளிவாகி விடுவார். மற்றப்படி, ‘கண்ணுல காட்சி கேமரா கொண்டு வந்தானே சூப்பரா’ என்ற பாட்டு camera man-களுக்காகவே பாடப்பட்டது. ‘camera கண்ணு’…
மேகலா : ‘வாவ்’… சூப்பரா பாடுன கிருஷ்ணா….
கிருஷ்ணர் : சரி…. அதெல்லாம் இருக்கட்டும். கல்யாண வீட்டுல, camera-வை மட்டும் தான் பாத்தியா…. வேற ஒண்ணும் பாக்கலியா…?
மேகலா : கிருஷ்ணா….. நான் கல்யாண வீட்டிற்கு, முகூர்த்த நாளும், அதன் மறுநாள், கறிச்சாப்பாடு அன்று மட்டும் தான் போக வேண்டும் என்று நினைத்திருந்தேன் கிருஷ்ணா…. திருமண நாளுக்கு மூன்று நாட்கள் முன்பாக, என் தம்பி wife-இடமிருந்து ஒரு phone call வருது…, ‘மெஹந்தி போடலாம், வாங்க அண்ணி’ என்று கூப்பிட்டாளா….? நான் சொன்னேன். ‘இதெல்லாம் சின்னப் புள்ளைங்க பங்கு பெறும் function; நான் எதற்கு வெங்கடேஸ்வரி’ என்றதும், அவள், ‘வாங்க அண்ணி, இது நம்ம வீட்டு function, கட்டாயம் வாங்க அண்ணி’ என்றாள். கிருஷ்ணா, இதுவரைக்கும் கல்யாணம் நடத்தியவர்கள், இந்த மெஹந்தி function-க்கு, எங்களையெல்லாம், அதாவது, வயசானவங்களை கூப்பிட மாட்டார்கள். இவளோ, இது நம்ம வீட்டு function, என்று formal-ஆ கூட இல்லை கிருஷ்ணா, நெசம்மாவே குரலில் ஒரு பாசத்தைக் கலந்து கூப்பிட்டாளா….. எனக்கு, ‘function-க்குச் செல்ல வேண்டும்’ என்று தோன்றி விட்டது. மெஹந்தி போடாட்டாலும் பரவாயில்லை, அந்த பாசத்திற்காகவேனும் கலந்து கொள்ளணும் என்று முடிவு செய்தேன். முக்கியமாக ஷீத்தலிடம் சொல்லவில்லை….
கிருஷ்ணர் : ஏன்….? சொன்னால் என்ன செய்வாள்?
(கிருஷ்ணா…, இதற்கான பதிலுடன் அடுத்த பகுதியைத் தொடங்குகிறேன்)
Comments
Post a Comment