ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 111
(பாண்டவர்கள் காந்தாரியின் இடத்தை அடைந்து, அவளைச் சந்திக்கிறார்கள்) மேகலா : அந்த நிலையில் காந்தாரி, யுதிஷ்டிரரைச் சபித்து விட எண்ணிக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து, வியாசர் அங்கே வந்தார். ‘காந்தாரி! ஒரு விஷயத்தை நினைத்துப் பார். யுத்தம் தொடங்குவதற்கு முன்பாக, துரியோதனன் உன்னை அணுகி, உன்னுடைய ஆசியை வேண்டி நின்றான். ‘எனக்கு வெற்றி கிட்ட வேண்டும் என்று ஆசி கூறுவாயாக’ என்று துரியோதனன் கேட்ட போது, நீ என்ன கூறினாய் என்பதை சற்று எண்ணிப் பார். ‘எங்கே தர்மம் இருக்கிறதோ, அங்கே வெற்றி’ என்று தான் நீ சொன்னாய். அதுதான் இப்போது நடந்திருக்கிறது. புண்ணியவதியாகிய நீ சொன்ன மாதிரியே தர்மத்திற்கே வெற்றி கிட்டியிருக்கிறது. ஆகையால், பாண்டவர்கள் விஷயத்தில் நீ கோபம் பாராட்டுவது தகாது’ என்று வியாசர் கூறினார். காந்தாரி சொன்னாள், ‘புத்திர சோகத்தின் காரணமாக என் மனம் நிலை தடுமாறுவது உண்மை தான். ஆனால், பாண்டவர்கள் அழிந்து போக வேண்டும் என்று நான் விரும்பவில்லை. பாண்டவர்கள் எவ்வாறு குந்தியினால் பாதுகாக்கப்படத் தக்கவர்களோ, அவ்வாறே என்னாலும் பாதுகாக்கப்படத் தக்கவர்களே. துச்சாசனன், சகுனி, கர்ணன், துரியோதனன் ஆகிய