நீங்க..., நல்லவரா...., கெட்டவரா.....? - பகுதி 1

 கிருஷ்ணர் : வா…. வந்து உட்கார் மேகலா…. மனதைத் தெளிவாக வைத்துக் கொள். ஒரு டீச்சரிடம், மாணவி பேசுவது போல் மனநிலையை வைத்துக் கொள்.

மேகலா : காலத்தை வென்ற பரம்பொருளே! நீ ஏதோ மனதில் தீர்மானம் பண்ணிக் கொண்டு என்னை இயக்குகிறாய்… உன் முகத்தில் கனிவான அமைதியைப் பார்க்கிறேன். எப்பொழுதும், என்னை நீ தாங்குபவனாகவும், அரவணைப்பவனாகவும் மட்டுமே உணர்கிறேன் கிருஷ்ணா. உன் ஒவ்வொரு செயலும், என் மனதுக்குள் என்ன கேட்கப் போகிறாயோ என்று பரபரப்பாய் இருக்கிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : மேகலா…. நீ free-யா இரு…. வேற ஒண்ணும் இல்லை…. நீ இப்போ மகாபாரதம் வாசிக்கிறாய் அல்லவா…. ஏதேதோ பேசுவதற்கு…., நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி வந்தால், நல்ல topic கிடைக்கலாம் அல்லவா… நான் என் style-ல் கேள்வி கேட்கிறேன்; நீ உன் style-ல் பதில் சொல்லு….

மேகலா : Yes boss….

கிருஷ்ணர் : That’s good! மனிதர்களை நீ எப்படிப் பார்க்கிறாய் மேகலா…..?

மேகலா : வாழத் தெரிந்தவர்கள்; வாழத் தெரியாதவர்கள் என்று இரு வகையாகப் பார்க்கிறேன் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : அப்படீன்னா….? நல்லவர்கள்; கெட்டவர்கள் என்று பார்க்கவில்லையா…?

மேகலா : எதன் அடிப்படையில், நல்லவர்கள், நல்லவங்க அல்லாதவர்கள், கெட்டவர்கள், கெட்டவர்களாகப் பார்க்கப்படுபவர்கள் என்று பார்ப்பது கிருஷ்ணா…? நல்லவர்களாக இருப்பவர்கள், வாழத் தெரியாதவர்களாக இருக்கலாம். வாழத் தெரிந்தவர்கள், பலரால் கெட்டவர்களாகப் பார்க்கப்படுபவர்களாக இருக்கலாம். மனிதர்களை, வாழத் தெரிந்தவர்கள், வாழத் தெரியாதவர்கள் என்று இரு பிரிவாய் பிரித்தால், நாம் மனிதனுடைய குணங்களையும் சம்பவங்களுக்கேற்ப, அவன் மாறுவதையும், மாறாமல் இருப்பதனால் நடந்தேறும் துயரங்களைக் கூட அலசலாம் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : பரவாயில்லை மேகலா…. நீ மகாபாரதத்தை மனம் ஒன்றிப் படிக்கிறாய்…. அதனால் தான் இத்தனை எளிமையாகப் பேசுகிறாய்…. சரி…. ’நல்லவர்கள்’ என்பவர்களை நீ எப்படிப் பார்க்கிறாய்…..?

மேகலா : கிருஷ்ணா! எனக்கு மட்டுமல்ல கிருஷ்ணா. பொதுவாகவே, நமக்கு பிடித்த மாதிரி பேசுபவர்கள், நமக்குப் பிடித்த செயல்களைச் செய்பவர்கள், இவர்களை நல்லவர்கள் என்று உலகம் நம்புகிறது கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : அப்போ…., ‘நல்லவர்கள்’ என்பதற்கு இலக்கணம் எதுவும் கிடையாதா….?

மேகலா : கிருஷ்ணா! பொது வாழ்க்கையில் இருப்பவர்களை வச்சிப் பார்ப்போம்…. நம்முடைய பிரதம மந்திரியை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்; அவசர கால நடவடிக்கை; போர் பதற்றத்திலும் சாதுர்யமாய் முடிவெடுக்கும் கம்பீரம்; தவறு என்று நினைத்து விட்டால், தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து, அந்தத் தவறைச் சரி செய்யும் நேர்மை, இவையெல்லாம் மொத்தமாய்க் குடியிருக்கும் ஒரு உன்னதமானவர்…. அவரை ‘நல்லவர்’ என்று மட்டும் சொல்லி விட முடியாது…., அதற்கும் மேலே, இவரைக் கெட்டவராகச் சித்தரித்துப் பார்த்தாலும், சித்தரித்தவர் தான் கெட்டவராகிறார்! இப்படிப்பட்டவர், சொந்த வாழ்க்கையில் என்ன செய்கிறார்…. எப்படி வாழ்கிறார்…. என்றெல்லாம் நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஏதாவது ஒரு சின்ன குறை இருந்தால் கூட, அதை நாம் பெருசா எடுத்துக் கொள்வதில்லை. இப்படித்தான் கிருஷ்ணா, நல்லவர்களை நாம் அடையாளம் காண முடியும்….

கிருஷ்ணர் : சரி…. நீ நரேந்திர மோடியைப் பற்றிப் பேசி, நல்லவர்களுக்கு easy-யாக அடையாளம் சொல்லி விட்டாய்…. ‘M. G. R.’ – இவரை வைத்து, ‘நல்லவர்கள்’ என்ற பதத்தை prove பண்ணு. இவருக்குத்தான் நாணயத்தின் இரு பக்கமும் என்பது மாதிரியான விளக்கம் தர முடியும். ‘நல்லவர்கள்’ என்ற பதத்தை சரியான முறையில் அணுகவும் முடியும்….

மேகலா : சுவாரஸ்யமான ’கதாபாத்திரம்’ கிருஷ்ணா… சரி, அடுத்த பகுதியில், விரிவாகப் பார்க்கலாம்….

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2