அரசியல் அதகளம் - பகுதி 2
மேகலா : கிருஷ்ணா! நீ என்னவோ…. election அலப்பறைகளைச் சொல்லு….ணு சொல்லிட்ட…. election வந்துட்டா, இங்க நடக்கிறதெல்லாம் அலப்பறை மட்டும் தான் கிருஷ்ணா…. முன்னெல்லாம் கட்சி பிரச்சாரம் பண்ணுவதென்றால், மேடைப் பேச்சு மட்டும் தான கிருஷ்ணா… தலைவர்கள் பேச்சு என்றாலும், கட்சிக்காரங்க பேச்சு என்றாலும், மறுநாள், newspaper-ல் தான் வரும்…. இந்தக் காமெடி, வாக்குறுதி, பரப்புரை இதெல்லாம், பொதுமக்கள் newspaper படித்து தான் தெரிந்து கொள்ள முடியும்.. அதற்குள், பேசிய பேச்சின் சூடு ஆறிப் போயிருக்கும்! அன்றைக்கு, newspaper வாசிப்பவர்கள் என்பது 40% மக்கள் தான் இருப்பார்கள். குறிப்பாக, இல்லத்தரசிகளுக்கு அரசியல்வாதிகளின் பேச்சு என்பது தெரியாததாகவே இருந்து விடும்.
ஆனால், இன்று, twitter என்று ஒரு website உள்ளது. மேடையில் பேச நினைப்பதை மட்டுமல்ல, மனதில் நினைக்கும் எந்த விஷயத்தையும், அரசியல் விமர்சனம்; எதிர்க்கட்சிக்கு பதில் சொல்வது என்று எந்த விஷயமாக இருந்தாலும், உடனுக்குடன் twitter-ல் போட்டு விடுகிறார்கள். facebook-ல் account வைத்திருப்பவர்கள், facebook-ல் share பண்ணுகிறார்கள். இவர்கள் ‘ட்வீட்’ பண்ணிய மறுவிநாடியே, ‘like’ குவிய ஆரம்பிக்குது. கடுமையான விமர்சனமோ, நக்கலாகவோ இருந்தால், comments-ம் கூடவே தொடர்கிறது. அதாவது, அன்றைய காலகட்டத்தில், மேடைப் பேச்சுக்களைக் கேட்பவர்கள் வெகு சிலரே; பேசுவதை newspaper-ல் படிப்பவர்கள் இன்னும் கம்மிதான். ஆனால், இன்று, twitter-ல் பதிவு பண்ணியவுடன் படிப்பவர்கள், smart phone வைத்திருப்பவர்களில் 70% பேர் வாசித்து விடுகிறார்கள். உடனே comments என்றாலும், ‘மீம்ஸ்’ என்றாலும், troll என்றாலும் தொடர்ந்து வந்து விடுகிறது. முன்னேயெல்லாம், மேடைப் பேச்சில் வில்லங்கமாக தலைவர்கள் பேசினாலும், தலைவர்கள், தலைவர்களாகவே தொடர்வார்கள். ஆனால், இன்றோ, ‘ட்வீட்’ பண்ணிய சமாச்சாரம், விவகாரமாக இருந்தால், ‘ட்வீட்’ பண்ணியவன், கொம்பனாக இருந்தாலும், துவைத்து தொங்க விட்ருவாங்க….
கிருஷ்ணர் : Oh! அப்படியா….! ஏன் மேகலா…. துவைத்து தொங்க விட்டவனை…. சம்பந்தப்பட்டவர்கள் பேசாமல் விட்டு விடுவார்களா என்ன…?
மேகலா : தொந்தரவு குடுக்கத்தான் செய்வார்கள் கிருஷ்ணா…. சத்தங்காட்டாமல் செய்ய முடியும் என்றால், பழி வாங்குபவர்கள் எதையும் செய்யத்தான் செய்வார்கள். மிஞ்சிப் போனால், channel-ஐ hack செய்வார்கள். ஆனால், அவர்களைக் காப்பாற்றுபவர்களும் லேசில் விட மாட்டார்கள்; உண்மையை தோலுரித்துக் காட்டி விடுகிறார்கள்; hack செய்தது வரைக்கும் பிரித்து மேய்ந்து விடுவார்கள்! நிதர்சனம் என்னண்ணா, இந்த நிமிஷத்தில், அமெரிக்காவில் ‘ட்ரம்ப்’ ஒரு விஷயத்தை ‘ட்வீட்’ பண்ணினால், அடுத்த second, இங்கு தமிழ்நாட்டில், news வைரலாகி விடுகிறது…. விவகாரம் வெட்ட வெளிச்சமாகும் போது, சத்தங்காட்டாமல், கமுக்கமாய் ‘எதிர்வினை’ பண்ணுவது கொஞ்சம் risk தானே… அதுலயும்….. தவறாக ஒரு செய்தியை tweet பண்ணினால், உடனே, social media-வில் வைரலாக்கி, காமெடியாக்கி, ‘மீம்ஸ்’ போட்டு செய்யும் அலப்பறை இருக்கே…., அடேயப்பா….
கிருஷ்ணர் : Oh! உனக்கு இதெல்லாம் செம காமெடி விருந்தாயிருக்கும், இல்லையா மேகலா…. சரி… இந்த ‘மீம்ஸ்’, ‘troll’ இவற்றில் உன்னை ரொம்ப சிரிக்க வைத்த comedy சொல்லேன்…. நானும் கொஞ்சம் சிரிக்கிறேன்….
மேகலா : ஒரு ‘கவுண்டமணி காமெடி’ கிருஷ்ணா. செந்தில் ஏதோ தப்பா உளறுவார். உடனே கவுண்டமணி, ‘மறுக்கா சொல்லு’ என்பார்…. செந்தில் மறுபடியும் சொல்வார். கன்னத்தில் ‘பளார்’ என்று ஒரு அறை கொடுத்து, ‘மறுக்கா, மறுக்கா சொல்லு’ என்று கேட்டு, உளறியவரை பின்னி பெடலெடுப்பார். அந்த ‘மீம்ஸ்’ என்னை ரொம்பவே கலகலப்பாக்கியது. யாராவது, தப்பா, புள்ளி விவரமோ, நேற்றைய உண்மையை இன்று மாற்றிச் சொன்னாலோ…, இந்த ‘மீம்ஸை’ போட்டு, கூடவே புள்ளி விவரத்தோடு, உண்மையை உடைத்து விடுவார்கள் கிருஷ்ணா. நமக்கு, அப்பத்தான், இந்த social media மீது ஒரு நம்பிக்கையும், மரியாதையும் வருது கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Oh! இதுல இவ்வளவு சமாச்சாரம் இருக்கா? அப்ப…., இங்க யாரும் பொய்யை ‘பரப்புரை’ பண்ணவே முடியாது…., இல்லையா….?
மேகலா : இந்த மாதிரி, பொய்யை, நக்கலை, ஏமாற்றுவதை கண் கொத்திப் பாம்பாய் watch பண்ணும் ஏகப்பட்ட channels இருக்கு கிருஷ்ணா…
கிருஷ்ணர் : பரவாயில்லையே…. election time-ல, social media-க்களால, YouTube-ஏ அதகளப்படும் போலயே….
மேகலா : பின்ன…, எங்களுக்கெல்லாம்…, இன்னைக்கு இந்தக் கட்சி ஜெயிக்கும்ணு தோணும்…. மறுநாள், மீம்ஸ்ல, கும்மு கும்முணு கும்மி எடுத்ததும், இன்னொருத்தர் ஜெயிப்பாங்களோ அப்படீன்னு தோணும்…. கிருஷ்ணா…, அந்த நேரத்துல எனக்கு B.P. வேற ‘கன்னாபின்னான்னு’ எகிறிப் போயிரும் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : தப்பான information கொடுக்கும் போதே நீ சாமியாட ஆரம்பிச்சிருவ….
மேகலா : கிருஷ்ணா…. ‘மீம்ஸ்’ பார்த்தவுடன், சாமியாட்டமெல்லாம்…., கும்மாளமாப் போயிரும் கிருஷ்ணா!
கிருஷ்ணர் : சரி…. technology வளர்ந்த இந்த காலத்துல அரசியல் களம், மீம்ஸ்களாலும், troll-களாலும் தெறிச்சி சிதறுது…; முன்னயெல்லாம், சுவர் விளம்பரம், மேடைப் பேச்சு; newspaper விமர்சனம் தானே மேகலா…. சுடச்சுட பதிலடிகளெல்லாம் இப்ப மாதிரி கிடையாதோ…
மேகலா : இந்த மாதிரி, சுடச்சுட அந்த விநாடியே பதிலடி தர முடியாது என்றாலும்…., நக்கலும், நையாண்டியும், அன்றைய பத்திரிக்கைகளிலேயே, மாலையிலோ, காலையிலோ வரத்தானே செய்யும் கிருஷ்ணா! அதிலும், ‘துக்ளக்’ பத்திரிக்கையில் வரும் அட்டைப்பட cartoon…. இந்த ‘மீம்ஸ்’ சொல்லாத அத்தனை நையாண்டியும் சேர்த்து சொல்லும்…. தலைவர்கள் பேசும் பேச்சை பிரசுரித்த பத்திரிகையை கழுதை சாப்பிடுவதாக போட்டுத் தாக்கியிருப்பார்கள். இன்னும் இந்த cartoon-க்கு இணையான ஒரு comedy-யும், நக்கலும் இருப்பதாக நான் நினைக்கல கிருஷ்ணா…. அந்தக் காலத்துல இருந்த பரபரப்பான இன்னொரு கலாச்சாரம், இப்பவும் ‘ப்ளக்ஸ் போர்டு’ என்று நடைமுறையில் இருக்கின்ற கலாச்சாரம்….
கிருஷ்ணர் : அப்படி என்ன கலாச்சாரம்…?
(தொடரும்)
Comments
Post a Comment