வாங்க, கொஞ்சம் ‘பொய்’ பேசுவோம் - பகுதி 1

கிருஷ்ணர் : ஹாய்! மேகலா…..! என்ன, உன் முகத்தில் எந்த விதமான பாவமும் இல்லையே…. அடுத்து, என்ன தலைப்பில் எழுதலாம் என்று ரொம்ப யோசிக்கிறயோ….?

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. என் புத்திக்கு, நல்ல நல்ல விஷயங்கள் வத்திப் போச்சோ என்று பயமா இருக்கு கிருஷ்ணா!

கிருஷ்ணர் : அம்மா! நீ சிந்திக்க மறுக்கிறாய்…. எல்லாம் உன் சோம்பேறித்தனம் தான் காரணம். அறிவு என்பது வத்திப் போகிற சமாச்சாரம் இல்லை… யோசி…. நல்ல தலைப்பை முடிவு செய்…. ஆம்மாம்…., நீ மறுபடியும் தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமான் கோயிலுக்குப் போயிருந்தாயோ….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா! ஷீத்தல் வந்திருந்தால……. அவதான் கூட்டிப் போகச் சொன்னா…. இத நான் உங்கிட்ட சொல்லலியா கிருஷ்ணா….?

கிருஷ்ணர் : எங்க….? இப்பல்லாம் எங்கிட்ட முக்கியமான விஷயங்களைச் சொல்றதேயில்லை. ஷீத்தல் வந்ததைச் சொல்லல…. ஆமாம், எதிலயாவது ‘lock’ ஆகியிருக்கயா…. இப்படி மறக்கிற….?

மேகலா : Lock ஆகல கிருஷ்ணா…. Commit ஆகியிருக்கேன்…

கிருஷ்ணர் : ‘Commit’ ஆகியிருக்கயா….. எனக்குத் தெரியாமல், எதில் commit ஆகியிருக்கிற….

மேகலா : எல்லாம் உனக்குத் தெரிந்ததுதான் கிருஷ்ணா! கதை சொல்லப் போகிறேன்.

கிருஷ்ணர் : அதான், தினமும் உன் வீட்டுக்காரருக்கு கதை சொல்லத்தானே செய்கிறாய். நானும் கேட்கிறேனே…. இப்ப, ’திருவிளையாடல் புராணம்’ தானே சொல்லிக் கொண்டிருக்கிறாய்….

மேகலா : இது, அது இல்ல… ‘குட்டி stories by Amma’ என்று தனி channel, Sheethal ஆரம்பிக்கப் போகிறாள். நான் கதை சொல்பவள்; ஷீத்தல் Director. இதில், ‘இரட்டைப் பிள்ளையார் கதை’, ‘Greedy மைதாஸ்’, ‘பேசும் தவளை’ என்று மூன்று கதைகள் சொல்லி, shooting முடிச்சாச்சு கிருஷ்ணா!

கிருஷ்ணர் : வாவ்….! எவ்வளவு சந்தோஷமான விஷயம். என்னிடம் சொல்லியிருந்தால், நானும் வாழ்த்து சொல்லியிருப்பேன்ல…..

மேகலா : உன்னிடம் சொல்வதற்குள், நீயே கேட்டு விட்டாய் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : லேட்டாச் சொல்லிட்டு, ‘பம்முறயா’? சரி…, இதில் என்ன மாதிரி கதை சொல்லப் போகிறாய்….?

மேகலா : மகாபாரதம், இராமாயணம், திருவிளையாடல் புராணம், பஞ்ச தந்திரக் கதைகள், நாயன்மார் கதைகள்…., இன்னும் என்னென்ன சுவாரஸ்யமான கதைகள் உண்டோ…, அதெல்லாம் சொல்லலாம் என்றிருக்கிறேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இராமாயணம் சொன்னால், அதுவே நீண்ட நாள் போகுமே…! ஒவ்வொன்றாகச் சொல்லப் போகிறாயா…?

மேகலா : இல்ல கிருஷ்ணா….. இராமாயணம், மகாபாரதம் என்று எதுவாக இருந்தாலும், சின்னச் சின்ன episode ஆக script ready பண்ணி, தனித் தனிக் கதையாகச் சொல்லப் போகிறேன்….

கிருஷ்ணர் : புரிஞ்சி போச்சி; இராமாயணம் என்றால், தொடர்ச்சியாகச் சொல்லாமல், ‘தாடகை வதம்’ என்ற தலைப்பை எடுத்து, அதைத் தனி episode-ஆகச் சொல்வாய்…. அடுத்து மகாபாரதத்தில், ‘அட்சய பாத்திரமும், திரௌபதியும்’ என்ற தலைப்பை எடுத்து கதை சொல்லப் போகிறாய்…. அப்படித்தானே….

மேகலா : அப்படியேதான் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : நீ சொல்வதும் சரிதான்…, நீ ஆசைப்பட்ட மாதிரி, இராமாயணம், மகாபாரதம் கதை சொன்ன மாதிரியும் இருக்கும்; கேட்பவர்களுக்கு அலுப்பில்லாமலும் இருக்கும்…. எப்படியோ, நீ ஆசைப்பட்ட மாதிரி கதை சொல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டாய்….

மேகலா : எனக்கென்னவோ…., இந்த வேலையெல்லாம் நீ செய்தது மாதிரி தான் எனக்குத் தோணுது… சென்ற முறை மதனா இங்கு வந்த போது, அவள் தான் சொன்னாள், ‘audio speech’-ல் கதை சொல்வது மாதிரி எடுக்கலாம்…. அதற்கு, record ஆகும் extra சப்தங்களை அழிக்கும் ‘app’ ஒண்ணு இருப்பதாகவும், அதைப் பற்றி விசாரித்து, download பண்ணலாம் என்றாள். அன்றிலிருந்து ‘லக்‌ஷ்மிநரசிம்மரைப்’ பார்க்கும் போதும், மாரியம்மனைப் பார்க்கும் போதும், இதே வேண்டுகோள் தான் கிருஷ்ணா! நான் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன்…. எனக்கு எந்த நேரத்தில் என்ன தர வேண்டும் என்று பார்த்துப் பார்த்துச் செய்யும் என் தயாபரனே! வாய்ப்புக்களையும், வாய்ப்புக்களை பயன்படுத்தும் அறிவையும் வழங்குபவனே நீ தானே…. என்னிடம் வந்து ஒன்றும் தெரியாதவன் மாதிரி கோவிச்சுக்கவும், கிண்டல் பண்ணவும், கலாய்க்கவும் செய்து, இன்னும் அதிகமாக என்னிடம் பாசத்தைப் பொழிகிறாய்…. இந்த அன்பிற்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்….

கிருஷ்ணர் : நீ ஒண்ணும் கைம்மாறெல்லாம் செய்ய வேண்டாம். சும்மா வழவழன்னு பேசாமல் உருப்படியாக அரட்டையைப் போட சிறந்த தலைப்பு ஒன்று கொடு….. ஆமாம், உன்னை American College பக்கம் பார்த்தேனே…. என்ன திடீரென்று….

மேகலா : American College-ஐ cross பண்ணும் போது பார்த்தாயா….? கிருஷ்ணா, நீ எங்க அங்க இருந்தாய்…? நான் ஒரு கல்யாணம் attend பண்ணுவதற்காக மதுரை வந்திருந்தேன். ஆமாம், அங்கு ‘லட்சுமிசுந்தரம்’ மஹாலில் தான் கல்யாணம். அந்த மஹாலுக்குப் பின்புறம் ஒரு பெருமாள் கோயில் இருக்கு. நான் கூட நினைத்தேன் கிருஷ்ணா, இறங்குவோமா என்று. Car parking பெருசா இடம் இல்லை…. Traffic வேறு…. நீ பார்த்துட்டயா….?

கிருஷ்ணர் : நீ கோயில் cross பண்ணினால் மட்டும் தான் என்னால் கண்டுபிடிக்க முடியுமா என்ன….? மதுரை வந்த உனக்கு, ‘திருவிளையாடல் புராணத்தின்’ நாயகனான சோமசுந்தரப் பெருமானையும், மீனாக்ஷியம்மையாரையும் தரிசிக்கணும்னு தோணலையோ….

மேகலா : கிருஷ்ணா, நான் திருமண மஹாலை விட்டு வெளியே வரும் போது, மணி 11.30. அதன் பிறகு கோயிலுக்குச் சென்று அம்மையாரைத் தரிசிக்க முடியும் என்று தோணல கிருஷ்ணா…. சரி, இறையனாரைத் தரிசிக்க மட்டுமே மதுரை வரலாம் என்று யோசிச்சிட்டேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : என்னவோ காரணம் சொல்லி, ‘சுந்தரம் சாரீஸ்’ கடைக்கு மட்டும் சென்றாயாக்கும்….

மேகலா : பாத்துட்டயா கிருஷ்ணா…

கிருஷ்ணர் : உன்னையெல்லாம் திருத்தவே முடியாது…. சரி, ஏதாவது நல்ல topic select பண்ணு….

மேகலா : உனக்கு ‘பொய்’ சொல்றது பிடிக்குமா கிருஷ்ணா?

கிருஷ்ணர் : எங்க…. சொல்லிப் பாரு…. பிச்சிப் புடுறேன்….

மேகலா : ஐயோ கிருஷ்ணா…. நான் இதத்தான் topic-ஆகப் பேசலாம் என்கிறேன்….

கிருஷ்ணர் : என்னது….. ‘பொய் பேசுறது பிடிக்குமா?’ – என்றெல்லாம் ஒரு தலைப்பா….?

மேகலா : அதில்லை கிருஷ்ணா…. எந்த இடத்தில் பொய் பேசலாம்…., பொய் பேசுவதனால் விளையும் சம்பவம்…. இப்படி…. இப்படி பேசலாம் என்கிறேன்…

கிருஷ்ணர் : Oh! நாங்க கூட துரோணரை வீழ்த்த ஒரு சின்னப் பொய்யைக் கையாண்டோமே… மேகலா! Very good! ’பொய்’ என்ற topic எடுத்துப் பேசலாம். பல சுவாரஸ்யங்களைத் தெரிந்து கொள்ளலாம்….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2