அரசியல் அதகளம் - பகுதி 7 (நிறைவுப் பகுதி)
கிருஷ்ணர் : சினிமா shooting-ஆ….?
மேகலா : ஆமாம்…. Hyderabad Film City-யில் shooting எடுக்கையில் வேற team யாரையும் enter பண்ண விடவில்லை. Team மொத்தப் பேருக்கும் medical check-up கொடுத்து, tight security கொடுத்து shooting எடுத்தும், அந்த team-ல நாலு பேருக்கு ‘கொரோனா’ attack ஆயிருச்சி கிருஷ்ணா…
கிருஷ்ணர் : அடப் பாவமே…..! Kidney transplant operation-ஐயே மறைக்கத் தெரிந்த நடிகருக்கு, இப்ப நடக்கிற எந்த incident-ஐயும் மறைக்க முடியலயே…. அவருக்கு ஒண்ணும் ‘கொரோனா’ attack ஆகலியே…
மேகலா : அதெல்லாம் இல்லை கிருஷ்ணா…. இருந்தாலும், அலுப்பு காரணமாகவோ, மனத்தளர்ச்சி காரணமாகவோ, Hyderabad hospital-லில் ஒரு வாரம் rest எடுக்க வேண்டும் என்று doctors ஆலோசனை சொல்ல, hospital-லில் admit ஆகி விட்டார். இங்கு தமிழ்நாட்டில் செய்தி சேகரிப்பாளர்களும், செய்திகளை யூகிப்பவர்களும், ரசிகர்களும், இந்தக் கண்ணாடிப் பாத்திரத்தைக் கையில் எடுத்து ஆராய ஆரம்பித்து விட்டார்கள்…..
கிருஷ்ணர் : எனக்கு ஒரு சித்தர் பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது.
‘நந்தவனத்துல ஒரு ஆண்டி
வெகு நாளாகக் குயவனை வேண்டி
கொண்டு வந்தாண்டி ஒரு தோண்டி
அதக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி’
மேகலா : இந்த இடத்துல, இது சரியான பாட்டு கிருஷ்ணா…. எத்தனை யூகம்….. எத்தனை ஆர்ப்பாட்டம்….. Hyderabad-லிருந்து திரும்பியதும், அவருடைய அரசியல் பிரவேச அறிக்கை வர வேண்டிய நேரத்தில், அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைப்பதாக, நடிகரிடமிருந்து செய்தி வந்தது…..
கிருஷ்ணர் : செய்தி வந்துருச்சா…. என்ன ஆனார்கள்…, யூகிப்பவர்களும், செய்தி சேகரிப்பவர்களும்….?
மேகலா : கிருஷ்ணா…., அவரோட statement, ‘open statement’ ஆகிப் போச்சுல்ல கிருஷ்ணா… அவங்க பாட்டுக்கு, நம்பவும் முடியாமல், நம்பாம இருக்கவும் முடியாமல், 10 நிமிஷத்துக்கு ஒரு news என, அவங்களுக்கு கிடைச்ச news-ல் கொஞ்சம் சேர்த்தும், மாற்றியுமாக புலம்பிக் கொண்டிருந்தார்கள். அதிலும் ஒருவர், விரக்தியின் உச்சத்துக்கே போய், ‘இனி என் மரணம் வரையிலும், அரசியல் பிரவேசமே கிடையாது’ என்று சத்தியமே செய்கிறார்…..
கிருஷ்ணர் : ஏனாம்….?
மேகலா : அதுவா…. அவர் நடிகர் ரஜினிகாந்தின் நிழலாகவே இருந்து வந்தார். ஒருவேளை நடிகரின் கட்டளையின் பேரில், முதலமைச்சராகலாம் என்றிருந்தாரோ என்னவோ….
கிருஷ்ணர் : முதலமைச்சராகவா…. தலைமையிருக்க இவர் எப்படி முதலமைச்சர் கனவில்….?
மேகலா : Oh! அந்தக் கதையைச் சொல்லல இல்லையா…. கிருஷ்ணா…. Super Star-க்கு முதலமைச்சராக விருப்பமில்லையென்றும், தான் ஆலோசனை வழங்கும் இடத்தில் மட்டுமே இருக்கப் போவதாக அரசல் புரசலாக செய்தியைக் கசிய விட்டிருந்தார். அதனால் தான் அவரின் நிழலாகவே இருந்தவர்களுக்கு, அதுவும் சந்தடி சாக்கில் தான் முதலமைச்சர் ஆகி விடலாம் என்றிருந்தவர்களுக்கு, அவரின் அரசியல் துறவறம் விரக்தியைக் கொடுத்தது கிருஷ்ணா…
கிருஷ்ணர் : Oh! இவ்வளவு சமாச்சாரம் இருக்கா….? என்ன அரசியல் உலகமடா இது…! எனக்கு இப்ப புரிஞ்சி போச்சு…. சரி…. அவரோட ரசிகர்கள் என்ன ஆனார்கள்….?
மேகலா : தமிழ்நாட்டின் மொத்த மக்களும் இவ்வளவு முட்டாள்களா என்று யாரும் நினைக்க முடியாத வண்ணம் நடந்து கொண்டார்கள் கிருஷ்ணா. ரொம்ப வேதனையாக இருந்தது.
கிருஷ்ணர் : அப்படியா…..? அப்படி என்ன தான் செய்தார்கள்….?
மேகலா : ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டன் பகுதியில், வீதியில் உட்கார்ந்து கொண்டு, ‘அறப்போராட்டம்’ நடத்துகிறார்களாம். ‘தலைவா’, ‘தலைவா’ என்று கூக்குரலிடுகிறார்கள். இத்தனைக்கும், அவர்களோட தலைவன், வீட்டை விட்டு வெளியே வந்து, அவர்களைச் சமாதானப்படுத்த முயற்சி கூட பண்ணவில்லை.
கிருஷ்ணர் : சரி, விடு மேகலா…. அவருக்கு மக்கள் மீது அக்கறையில்லை…. அவரோட ரசிகர்களுக்கோ… அவர் உடல் நலத்தின் மீது அக்கறையில்லை…. நீ ஏன் புலம்புகிறாய். இருவரும், அவரவர் சுயநலத்துக்காக, தேசத்தின் மீது அக்கறையை விட்டு விட்டார்கள். நாம் இதைப் பேசப் போக, தேர்தல் அலப்பறைகளை விட்டுட்டோமே…
மேகலா : நாம விட்டாலும், இந்த தேர்தல் களத்தில், அலப்பறைகள் தொடர்ந்து அதகளப்பட்டுக் கொண்டே தான் இருக்கு கிருஷ்ணா… இதில் இந்த நடிகர்களின் சவடாலும், பன்ச் டயலாக்கும், தமிழ்நாட்டுக்கு விதித்த சாபக்கேடு போலும்.
கிருஷ்ணர் : நீ ஏன் அப்படி நினைக்கிறாய்? இவர்கள் பேசும் பன்ச் டயலாக்குகளை புரிஞ்சிக்குவதற்கு ஒரு வாய்ப்பாய் எடுத்துக்கோங்க…. Election-ல் பதில் சொல்லுங்க….
மேகலா : கண் சிமிட்டி சொல்லுற… எனக்கு புரிஞ்சிருச்சி…. Election-ல் பதில் சொல்லணும்; அவ்வளவுதானே…, சொல்லிட்டாப் போச்சு….
கிருஷ்ணர் : That’s good…. bye….
(’அரசியல் அதகளம்’ நிறைவு பெற்றது)
Comments
Post a Comment