வாங்க, கொஞ்சம் ‘பொய்’ பேசுவோம் - பகுதி 6
மேகலா : அவர் மட்டும் போனாப் பரவாயில்லை கிருஷ்ணா…. பாராட்டு விழா என்னவோ…, நிஜ எழுத்தாளருக்கு… இவர் தான் போலி எழுத்தாளரல்லவா…, ‘நானும் கூட வருவேன்…, உங்களை எல்லோரும் பாராட்டுவதை பார்ப்பதற்காக நானும் கூட வருவேன்’ என்று சின்னப்புள்ளையாட்டம் அடம் பிடிக்கும். அதற்கு ஏதேதோ காரணங்களை சொல்லி வீட்டிலேயே இருக்கச் செய்து விட்டு, தான் மட்டும் கிளம்பிப் போவார்.
கிருஷ்ணர் : பின்னாடியே அந்த அம்மாவும் விழாவுக்குக் கிளம்பிப் போகுமா…. அங்கு நிஜ எழுத்தாளருக்கு பாராட்டு விழா நடக்கும். மேடையிலேயே நம்ம டூப்மாஸ்டர் இருக்க மாட்டார்; அப்படித்தானே….. அப்புறம் அந்த அம்மா என்ன பண்ணினாங்க….. அழுதாங்களா…?
மேகலா : அழுதாங்களா….. அதுக்கெல்லாம் வேற ஆளப் பார்க்கணும் கிருஷ்ணா! அடேயப்பா…. ருத்ர தாண்டவமே ஆடி முடிச்சிருவாங்க. பொண்ணுன்னா…, அவதான் பொண்ணு. உடம்பெல்லாம் பொய்யாகவே நடமாடிக் கொண்டிருந்த அந்த மனுஷனத் திருத்தியே ஆகணும் என்பது மாதிரி ஒரு ஆட்டம்…
கிருஷ்ணர் : அவர் திருந்திட்டாரா மேகலா…?
மேகலா : திருந்திட்டா…..ராவா….? கிருஷ்ணா…. பொண்ணுங்க பல சமயங்களில் வெள்ளந்தியாவும் இருப்பாங்க…. புருஷனத் திருத்தணும் என்று களத்தில் இறங்கினால் ஜெயிச்சும் காட்டுவாங்க. அவர் பேச்சுத் திறமைக்குத் தகுந்த salesman வேலைக்குச் சேர்ந்து, புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருமா வேலை பாப்பாங்க கிருஷ்ணா….
கிருஷ்ணர் : அப்படிப் போடு…. இது மாதிரி இன்னொரு interest ஆன கதையைச் சொல்லேன் கேட்கிறேன்….
மேகலா : கிருஷ்ணா… உண்மையைச் சொல்ல வேண்டிய இடத்துல பொய்யையும், பொய்யைச் சொல்ல வேண்டிய இடத்துல உண்மையையும் சொன்னதால் நடந்த ஒரு சுவாரஸ்யமான கதை எங்கிட்ட இருக்கு…., சொல்லவா…?
கிருஷ்ணர் : ஐயோ…… ரொம்ப interesting-ஆ இருக்கும் போலயே….. சொல்லு மேகலா….
மேகலா : கிருஷ்ணா, நீ ‘சகலகலாவல்லவன்’ படம் பார்த்திருக்கிறயா…?
கிருஷ்ணர் : The great உலகநாயகன் கமலஹாசன் நடித்த படம் தானே; பாத்திருக்கிறேன்….
மேகலா : கிருஷ்…..ணா…. என்னை வெறுப்பேத்தறயா…. என்ன அடைமொழி வேண்டிக் கிடக்கிறது; என்ன ‘great’ வேண்டிக் கிடக்கிறது…. உலக்கையாம் உலக்கை….. இது அந்தப் படம் இல்லை. புது சகலகலாவல்லவன்.
கிருஷ்ணர் : Oh!
மேகலா : அந்தப் படத்துல, ஹீரோவும், காமெடியனும் ஒரே பொண்ண love பண்ணுவாங்க. அந்தப் பொண்ணு ஒரு நாள், அந்த ஊரு ஏரிப்பக்கம் நின்று கொண்டு, காமெடியனிடமும், ஹீரோவிடமும், ‘உங்களுக்கு நீச்சல் தெரியுமா?’ என்று கேட்கும். பொண்ணு முன்னாடி கெத்தா இருக்கணும் என்று நினைத்த காமெடியன், ‘ஓ! தெரியுமே’ என்று உண்மையைச் சொல்லுவார். ஹீரோ, ரொம்ப அப்பாவியாக, ‘தெரியாதுங்க’ என்று பொய் சொல்லுவார். உடனே அந்தப் பொண்ணு, ரொம்ப sincere-ஆக ‘வாங்க நான் கத்துக் கொடுக்கிறேன்’ என்று சொல்லி, ஹீரோவுக்கு நீச்சல் சொல்லிக் கொடுப்பார். அந்தச் சாக்கில், ரெண்டு பேருக்கும் காதல் மலரும்….
கிருஷ்ணர் : ஓஹோ! Love பண்ணும் போது boys பொய்தான் சொல்லுவாங்களோ… சரி, காமெடியன் உண்மையைச் சொன்னதால், ஒரு love, miss ஆயிருச்சி. அடுத்து காமெடியன் பொய் சொல்லினாரா? என்ன நடந்தது?
மேகலா : இன்னொரு நாள், ஹீரோ, காமெடியன், அந்தப் பொண்ணு எல்லோரும் அரட்டைக்கச்சேரி நடத்திக் கொண்டிருப்பார்கள். அந்தப் பொண்ணு, ‘உங்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமா?’ என்று கேட்கும். இந்த முறை, காமெடியன் ரொம்ப serious-ஆக, ‘எனக்குத் தெரியாது’ என்று ஒரு எதிர்பார்ப்புடன் சொல்லுவார். ஹீரோவோ, ‘ம்…. எனக்குத் தெரியும்’ என்று சொல்லுவாரா…. அவள் உடனே, ‘அப்போ எனக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கிறீர்களா?’ என்பாளா….., ஹீரோ, உடனே சைக்கிள் ஓட்டக் கற்றுத் தருகிறேன் என்று, கீழே விழுந்து, அவளைத் தாங்கித் தடுக்கி, காதல் வேகமாக வளர ஆரம்பிக்கும்….. காமெடியனுக்கு, பொய் சொன்னால் நமக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்று நினைத்தோமே; இந்த முறையும் அவனுக்குத்தானே love chance கிடைத்தது என்று பிலம்பித் தீர்ப்பான்.
கிருஷ்ணர் : சமயத்துக்குத் தகுந்த மாதிரி, பொய்யும் நன்மை பயக்கும்; உண்மையும் கடுப்பேத்தும்…. Quite interesting…. சரி, ஒரு பொய் ஒருவனுக்கு நல்லது செய்யும்…. இன்னொருவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்…. அப்படியொரு நிகழ்ச்சியை சொல்லேன் பார்ப்போம்….
(தொடரும்)
Comments
Post a Comment