எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 3
மேகலா : ‘வண்டு கட்டுறது” – அப்படீன்னா, குழம்புச் சட்டியை வெறுமனே மூடி போட்டு மூடி வைத்தால், மூடியிலிருந்து வேர்த்து தண்ணீர் ஒழுகி, குழம்பு கெட்டு விடலாம். அதனால், பாத்திரத்தை துணியால் கட்டி, அதன் மீது மூடி போடுவார்கள். கிருஷ்ணர் : Oh! அப்படியா…. ஆமாம், அந்தச் சட்டியில் என்ன இருக்கும்? மேகலா : ச்சுக்கா…. கமகம சுக்கா கிருஷ்ணா…. அந்த குழம்புச் சட்டியை அடுப்பில் ஏற்றி சுட வைத்தால், உறைந்து கிடக்கும் கொழுப்பு உருகி, சுக்கா வாசனையில் ஊரே மணமணக்கும். அந்தச் சுவைக்கு இந்த உலகம் ஈடாகுமா கிருஷ்ணா…. கிருஷ்ணர் : இதுக்கு மேலே இந்தக் கதை எனக்கு நல்லா தெரியும்…. உங்க ‘ஐயாமா’ வீடு, கிராமத்து வீடு போல, ஓடு பதித்ததாக…, மாடு கட்டப்பட்டதாக இல்லையோ மேகலா… மேகலா : கிருஷ்ணா…. எங்க அப்பா சின்னப்புள்ளையாக இருந்த போது…, இந்தப் பெரிய வீடு கிடையாது கிருஷ்ணா… அது வெட்ட வெளியாகத்தான இருந்திருக்கும். அங்குதான் மாடு கட்டப்பட்டிருக்கும். எங்க ஐயாமா, ஆடு, மாடு வளர்த்துதான், தன் ‘சிறுவாடு’ பணத்தை சம்பாதித்திருக்கிறார். வீட்டின் பின்புறம், எங்க ஐயாப்பாவோட நிலம் இருக்கும். அதில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளைப்