எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 2
கிருஷ்ணர் : நெசம்மாவா மேகலா…. நீ பூலாவூரணிக்காரியா…. எனக்குத் தெரியாமப் போச்சே…. உங்க ஊரின் பெயரிலேயே ஊரணி இருக்கே…. அப்போ, வாய்க்கா வரப்பு…. வயல்வெளி இதெல்லாம் கிடையாதா….?
மேகலா : கிருஷ்ணா! எங்க ஊரு வானம் பார்த்த பூமி…. நான் சின்னப்புள்ளையா இருக்கும் போது, காளியம்மன் கோயிலுக்கு வலப்புறம் ஒரு கிணறு உண்டு…. அந்தக் கிணற்றில், தண்ணி ‘கெத்து கெத்துணு’ இருக்கிறத பார்த்திருக்கிறேன். ஊர் மக்கள் அதில் ‘டைவ்’ அடித்து குளிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், வயல்வெளி எல்லாம் கிடையாது என்பதால், வயல் வரப்பும் எங்க ஊரில் பார்த்ததில்லை. நாங்கள் school-ல் படிக்கும் போது, குலதெய்வம் கோயிலில் சாமி கும்பிடப் போவோம். நள்ளிரவு நேரம் வரைக்கும் பூஜை நடக்கும் கிருஷ்ணா…. உருமி மேளத்தின் வேகமும், ‘அரோகரா’ என்று மக்கள் எழுப்பும் சப்தமும்…, சாமி ஆடுபவரை உசுப்பி விடும்… ‘ஜிங்கு ஜிங்கு’ என்று சாமி வரும்; அருள்வாக்கு சொல்லுவார். விபூதி பிரசாதம் வாங்க எல்லோரும் முண்டியடிச்சி வருவார்கள். ‘சாமியாடி’, ‘உஸ்…உஸ்’ என்று குரல் கொடுத்து விபூதி பூசி விட்டு அருள்வாக்கு சொல்லுவார்.
கிருஷ்ணர் : ஆஹா…. இதத்தான் நான் எதிர்பார்த்தேன். ஏன் மேகலா…. உனக்குள் இப்படி ஒரு கிராமவாசியா….
மேகலா : ஏன் கிருஷ்ணா…. என்னப் பார்த்தா, நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் town-காரின்னு நினச்சியா….?
கிருஷ்ணர் : ‘Town-காரி’யா – நீ இப்படி சொல்றது கூட ரொம்ப வெள்ளந்தித்தனமா இருக்குல்ல…. ஆமா, town-காரங்கன்னா, தமிழில் பேச மாட்டாங்களா….
மேகலா : நிறைய தமிழ் வார்த்தைகள் வழக்கொழிந்து போச்சி கிருஷ்ணா…. கிராமங்களெல்லாம் மெள்ள மெள்ள நகரமாக மாறுவது போல, தமிழினூடே இங்கிலீஷும் கலந்து பேசி, பல தமிழ் வார்த்தைகள் மறந்தே போச்சு கிருஷ்ணா. இன்னும் சொல்லப் போனால், ஆங்கிலமே, இது தமிழ்தானோ என்னுமளவுக்கு புழக்கத்தில் உள்ளது. உனக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேள். ‘சூதானம்’ என்றால் என்ன அர்த்தம் சொல்லு….
கிருஷ்ணர் : ‘சூதானம்’ – கவனமாக என்றுதானே அர்த்தம்…
மேகலா : இப்ப, இந்த வார்த்தையை யார் கிருஷ்ணா சொல்றாங்க…? ‘Careful’ – ஆ, என்றுதானே சொல்றாங்க. அது தமிழ் வார்த்தை மாதிரி புழக்கத்தில் உள்ளது….
கிருஷ்ணர் : ஆமாம்ல…. ஓ! பேச்சுத் தமிழை அலசிப் பார்த்தாக் கூட, ‘கிராமீயம்’ மணக்கும் போலயே…. சரி… உங்க ஊரு பூலாவூரணியப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லேன். உங்க ‘ஐயாமா’ வீடு எப்படி இருக்கும் மேகலா…?
மேகலா : கிருஷ்ணா! எங்க ‘ஐயாமா’ வீட்டுக்கு front-லயே ரெண்டு வாசல் உண்டு. மேற்கே பார்த்த வாசல், கிருஷ்ணா – முதல் வாசல், நிலை கொஞ்சம் தாழ்வாகத்தான் இருக்கும். எங்க அப்பா, ஐயாமால்லாம் குனிஞ்சிதான் உள்ளே போவாங்க… வாசலின் இருமருங்கிலும் திண்ணை இருக்கும். எனக்கு நினைவு தெரிஞ்சி எங்க அப்பா, ஐயாமா வீட்டுக்கு ரொம்ப rare-ஆகத்தான் வருவார். வந்தால், அந்தத் திண்ணையில் தான் இருப்பார். திண்ணை தாண்டி, front hall, kitchen எல்லாம் சேர்ந்ததாக ஒரு சின்ன ரூம். அதன் வலப்புற மூலை, ‘அடுப்பாங்கரை’ என்று சொல்லப்படும் kitchen. அந்த சமையலறைக்கு மேலே, store room கட்டப்பட்டு, அதில் செல்வதற்கு ஏணிப்படி கட்டப்படாமல் ஒரு பொந்து மாதிரி இருக்கும். அங்கு தான் அரிசி, புளி, மிளகாய் என மொத்தச் சாமான்கள் இருக்கும். அடுப்படி பக்கத்தில் சின்னதாக, ஜன்னல் இல்லாத மச்சு வீடு ஒன்று இருக்கும். இதுதான் எங்க ஐயாப்பா கட்டிய அவர் காலத்து வீடு. இந்த வீட்டின் வலப்பக்கத்தில் இருந்த காலி நிலத்தை, எங்க அப்பா தலையெடுத்த பின், பெரிய வீடாகக் கட்டி, அதற்கு ஒரு வாசல் வைத்து கட்டப்பட்டிருக்கும். இந்த வீட்டிற்கும் பழைய வீட்டிற்கும் வாசல் வைத்து இணைத்திருப்பார்கள்.
புதிய வீட்டில், hall-க்குப் பின், ஒரு வெளி முற்றம் இருக்கும். இந்த முற்றத்தின் ஓரத்தில் bathroom இருக்கும். Hall-லிருந்து வெளியில் வந்தவுடனேயே ஒரு பெரிய திண்ணை இருக்கும். Summer-ல அந்தத் திண்ணை ரொம்ப வெக்கையாக இருக்கும். அந்தத் திண்ணை முடியும் இடத்தில், இந்தக் காலத்துக்குத் தகுந்த மாதிரியான kitchen. அதன் பக்கத்தில் ஒரு குட்டி room என்று இருக்கும் கிருஷ்ணா…. வீட்டுக்குள்ளயும், வாசலிலிருந்து enter பண்ணியவுடன், இரண்டு பக்கமும் பெரிய திண்ணை உண்டு. வெளி வாசலில் இருக்க வேண்டிய திண்ணை, வீட்டுக்குள்ளே இருக்கும். அதே போல, ஹாலை விட்டு வெளியேறியதும், ஹாலிலிருந்து அடுப்படி வரைக்கும் நீண்ட திண்ணை ஒன்று இருக்கும். இதெல்லாம் விஸ்தீரணமாக, நாம relaxed-ஆ படுப்பதற்கு சௌகர்யமாக இருக்கும். வீடு முழுக்க furniture எதுவும் இல்லாமல் இருப்பதால், வீடு ரொம்ப பெரு….சாக இருக்கும். Hall-ல் சுவரில் angle மாதிரி ஆணி அடித்து, அதில் பலகை போட்டு, பரண் மாதிரி செய்திருப்பார்கள். நாங்கள் குலதெய்வம் கோவிலுக்கு ‘சாமி’ கும்பிடப் போகும் போது, எங்க ‘ஐயாமா’ எங்களுக்காக வைத்திருக்கும், துணி போட்டு ‘வண்டு கட்டியிருக்கும்’ குழம்புச் சட்டியை பரணிலிருந்து எடுப்பார்கள்.
கிருஷ்ணர் : Stop…. stop…. ‘வண்டு கட்டுதல்’-னா என்ன மேகலா….?
(தொடரும்)
Comments
Post a Comment