விருதினைத் திருப்பித் தருகிறேன் - பகுதி 2 (நிறைவுப் பகுதி)
மேகலா : பாலியல் பலாத்கார உண்மையை…. உண்மை, உரச, உரச தீப்பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டி விடும் என்று பயப்படுகிறாரோ என்னவோ…. விருது வழங்கப்படும் என்ற அறிவிப்புதான் வந்திருக்கு…. அதற்குள் எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்து விட்டது. ‘மறுபரிசீலனை’ செய்யப்படும் என்றும் சொல்லி, விருதைத் தூக்கி உள்ளே வைத்து விட்டார்கள். இருட்டுக்குள் மட்டுமே புலி மாதிரி தெரியும் இந்தப் பூனை சொல்லுது, ‘இந்த விருதினை நான், அகாடமிக்கே திருப்பித் தருகிறேன். O.N.V. Kurup வழங்கும் மூன்று லட்ச ரூபாயுடன் என்னுடைய இரண்டு லட்சம் சேர்த்து கேரள அரசிற்கு நிவாரண நிதியாகத் தருகிறேன்’ – என்று speech கொடுக்கிறார் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : என்ன…. என்ன சொல்றாரு…. இன்னும் வழங்காத விருதினைத் திருப்பித் தருகிறாரா…. என்ன மேகலா… Social media பார்த்துக்கிட்டா இருந்தது….
மேகலா : கிருஷ்ணா…. தொவைச்சி தொங்க விட்டுட்டாங்கல்ல…. அதுவும் விருதைத் திருப்பித் தரேன்னு சொன்னதை திருப்பித் திருப்பி, சொல்லிச் சொல்லி, ‘ஏண்டாப்பா, ONV Kurup இந்த விருதை நமக்குக் கொடுப்பதாக announce பண்ணியது என்று சம்பந்தப்பட்டவரை நினைக்க வைத்திருக்கும்… ‘Me too’ விவகாரத்தில் நான் சொன்னேன், ;கிருஷ்ணா, நீ சாட்டையை கையில் எடுத்து விட்டாய்…, பம்பரத்தை சுழற்றப் போகிறாயா…, வேறு என்ன செய்யப் போகிறாய் என்பதை நீ மட்டுமே அறிவாய்’ என்று சொல்லியிருந்தேன். கிருஷ்ணா…, அர்த்தம் தெரியாமல் தான் பேசினேன்; அர்த்தம் விளங்கிவிட்டது கிருஷ்ணா… இனி யார் விருது கொடுக்க நினைத்தாலும், கேரளத்துப் பென்களைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்கத்தான் செய்வார்கள். அடுத்தடுத்து, 17 பெண்களின், ‘சார், நீங்க எனக்கு அப்பா மாதிரி’ என்று கதறிய வாசகங்களும் ஞாபகத்திற்கு வராமல் போகாது. ஆனாலும் கிருஷ்ணா…. இந்த நேரத்தில் இது சம்பந்தமான இன்னொரு சம்பவத்தையும் நான் உன்னிடம் சொல்லியே ஆகணும் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : என்ன, புதுசா ஒரு விஷயத்தை சொல்லுற…. எனக்கும் ‘பகீர்ங்குதுமா….
மேகலா : கிருஷ்ணா…. இங்கு சென்னையில் ‘பத்மா சேஷாத்திரி’ பள்ளியில் ராஜகோபாலன் என்ற வாத்தியார், ‘online coaching’ போது, பெண்பிள்ளைகளிடம் ஆபாச வார்த்தைகளைப் பேசுவது, ’தனியாக வாரியா’ என்று கேட்பது; coaching time-ல் வெறும் துண்டு கட்டிக் கொண்டு வந்து class எடுப்பது என்று சேட்டைகள் பண்ணிக் கொண்டிருந்தார். பிள்ளைகள் police-இடம் complaint பண்ணி, action எடுத்து, அந்த teacher, குற்றத்தை ஒப்புக் கொண்டு ஜெயிலுக்கும் போய் விட்டான். இங்குள்ள அரசியவாதிகள், பள்ளிக்கூடத்தை நடத்துவது ‘பிராமின்’ என்பதால், பள்ளி நிர்வாகத்தை சாட ஆரம்பித்து விட்டார்கள். அதிலும். பென்களுக்காகக் குரல் கொடுக்கும் பெண் சிங்கம் ஒருவர், பள்ளி நிர்வாகத்தை இனி அரசே எடுக்கும்படி செய்வோம் என்றாரா…. இப்பத்தான் பாடகி ‘சின்மயி’ ஒரு கோரிக்கையை இதில் கோர்த்து விடுகிறார். ‘பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகம் தப்பு பண்ணினால் கட்டாயம் action எடுக்கத்தான் செய்யணும்; அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே போல, பதினேழு பெண்களை, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய கவிஞரின் case-ஐயும் கொஞ்சம் கையில் எடுங்கள்’ என்று ‘ட்வீட்’ பண்னினாரா…, எதிர்த்திசையிலிருந்து இந்த ‘ட்வீட்’டுக்கு பதிலே இல்லை கிருஷ்ணா….
கிருஷ்ணர் : பத்மா சேஷாத்திரி விவகாரம் என்ன ஆச்சு…?
மேகலா : தனி மனிதன் தப்பு பண்ணினான்; தண்டனை கொடுத்தாச்சு; அதற்கு பள்ளி நிர்வாகம் என்ன செய்யும்? சாதி அரசியலை, தந்திர அரசியல் கொண்டே அடக்கிட்டாங்க கிருஷ்ணா. எல்லாம் சுப்பிரமணியசுவாமி கைங்கர்யம்! சரி…, விருது கொடுப்பதற்கு எதிர்ப்பு எழும்பியதே…. உன்னுடைய கருத்து என்ன கிருஷ்ணா…
கிருஷ்ணர் : மகாபாரதத்தில், உத்தங்கர் என்ற முனிவர், ‘நீ இருந்தும், யுத்தம் நிகழ்ந்ததா…. நீ நினைத்தால், கௌரவர்களை பாண்டவர்களோடு சேர்த்து வைத்திருக்கலாம்’ என்று கிருஷ்ணனைக் கேட்பார். அதற்கு கிருஷ்ணர் சொல்லும் பதில், இங்கு பொருத்தமாக இருக்கும் மேகலா…. ’ஒவ்வொரு மனிதனுக்கும் விளைகிற சம்பவங்களுக்கும், அந்த அந்த மனிதனே காரணமாகிறான். குருக்ஷேத்திரத்தில் நடந்த மகாயுத்தத்தைத் தடுப்பதற்கு, துரியோதனனிடம் எவ்வளவோ எடுத்துரைத்தேன். அதையெல்லாம் துரியோதனன் கேட்கவில்லை. அவனுடைய அழிவுக்கு அவனே காரணமானான்’ – என்று கிருஷ்ணர் கூறிய இந்த வாசகம், எல்லா இடத்துக்கும் பொருந்தும். ஒருவர் செய்த வினைக்கான பயனை, அவர் அடைந்தே தீர வேண்டும். நீ கேட்டவுடன் எனக்கென்னவோ, இந்த சம்பவம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. Be cool மேகலா… விதி இதுதானோ என்னவோ…. ONV Kurup, ‘அவருக்கு விருது என்று ஏன் அறிவிக்க வேண்டும்? மக்களின் எதிர்ப்புகளைப் பற்றி கவலைப்படாத, தமிழ்நாட்டிலிருந்து எதிர்ப்பு வராமல், கேரளாவிலிருந்து எதிர்ப்பு ஏன் வர வேண்டும். பெண்கள் மறுபடியும் இந்த விஷயத்தைக் கையில் எடுத்து சம்பந்தப்பட்டவர் செய்த அட்டூழியங்களைப் பட்டியலிடுவானேன்? Academy விருதினை மறுபரிசீலனை செய்வதாகச் சொன்னது, அவருடைய கர்மபலன் மேகலா…. நினைவு கொள்.
மேகலா : உண்மை கிருஷ்ணா…. இது சத்தியம். எனக்குப் புரியுது. நீ சொல்லச் சொல்ல பல விஷயங்களில் எனக்குத் தெளிவு வருகிறது கிருஷ்ணா…
கிருஷ்ணர் : Okay…. Bye…!
(நிறைவு பெறுகிறது)
Comments
Post a Comment