எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 12
மேகலா : ஏன் கிருஷ்ணா…. அப்படிச் சொல்லிட்ட….. இயற்கையோடு சம்பந்தப்பட்ட வாழ்க்கை வாழும் கிராமத்தானுக்கு இயற்கை சம்பந்தப்பட்ட அறிவும், இயற்கையை அனுசரிச்சுப் போகும் திறனும், இயற்கையாக இருப்பது இயல்புதானே கிருஷ்ணா… கிருஷ்ணர் : இயற்கை சம்பந்தப்பட்ட அறிவா…? எப்படிச் சொல்ற…? மேகலா : கிருஷ்ணா, ஒரு விவசாயி, பள்ளிக்கூடம் சென்று பாடம் படிக்காமலேயே, கரிசல் மண்ணில் இது விளையும், செவக்காட்டு மண்ணில் இது நல்லா விளையும் என்று மண்ணைக் கையில் அள்ளிப் பார்த்தே, அதன் ஈரத்தன்மையை வைத்தே கண்டு பிடித்து விடுவான். மண்ணை ‘லேப்’ பரிசோதனை செய்துதான், இத்தனை சதவீதம் மக்னீஷியம், இவ்வளவு பொட்டாசியம் என்று சொல்லணும்னு அவசியமில்லை… மண்ணைக் கையில் எடுத்து, அதன் பிசுபிசுப்புத் தன்மை, வாசனையை வைத்தே, இதில் என்னென்ன மணிச்சத்துக்கள் இருக்குன்னு கண்டுபிடிச்சிடுவாங்க. நிலத்தடியில் நீரோட்டம், எவ்வளவு ஆழத்தில், எவ்வளவு density-யில் இருக்கு என்பதை, நிலத்தில் எழும் அதிர்வைக் கேட்டே கண்டுபிடித்து விடுவார்கள் கிருஷ்ணா… அதிசயமில்லையா கிருஷ்ணா…. கிருஷ்ணர் : இதிலென்ன அதிசயம் மேகலா…. மனுஷன் பிறக்கும் போதே, ஒவ்வொரு அதிசயத்தையும