அழகு - பகுதி 1
கிருஷ்ணர் : என்ன மேகலா…. உன்ன ஆளையே காணோம்…. கிராம வாழ்க்கையைப் பற்றிப் பேசும் போது, நேரம் போவது தெரியாம பேசினோமே…. இன்னும் உனக்கு சரியான தலைப்பு கிடைக்கவில்லையா…. மேகலா : அது ஒரு காரணம் தான் கிருஷ்ணா. இருந்தாலும், பூஜா விடுமுறைக்குப் பிறகே, ஹரி வந்ததும்…, அடுத்து தீபாவளி வந்தது…. மறுபடியும் ஹரி வந்தான்…. சஷ்டி விரதம் இருக்கக் கூட முடியவில்லை… அடுத்து இதோ, மகாதீபம் கூட முடிவடைந்து விட்டது. ரொம்ப…. நாள் gap விட்டதால், என்ன தலைப்பில் எழுதலாம் என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர் : உனக்கு ரொம்ப நல்லா எழுதக் கூடியதான தலைப்பாகச் சொல்லு…. பேசலாம்…. சரி…. இப்பவும் கேட்கிறேன், உனக்கு ரொம்பப் பிடித்தது என்று எதை நீ நினைக்கிறாய்…? மேகலா : ‘ அழகு’ – அது எங்கெல்லாம் இருக்குதோ, அதை ரசிக்கப் பிடிக்கும்….. ரசிப்பதை எழுதுவது பிடிக்கும்… இப்படி…. நமக்குப் பிடித்தவர்களோடு அரட்டை அடிப்பது ரொம்பப் பிடிக்கும்… கிருஷ்ணர் : Oh! அப்படியா….. உனக்குப் பிடித்தது என்று பட்டியல் போட வேண்டாம்… ‘ அழகு’ என்ற தலைப்பில், உன் பார்வையின் அழகைப் பேசுவோம்… மேகலா : பேசலாம் கிருஷ்ணா… கிருஷ்ணர் :