'வலிமை’ என்பதா...? ‘Strong personality' என்பதா...? - பகுதி 6 (நிறைவுப் பகுதி)

மேகலா : ஆனாலும், அஹிம்சையின் value இப்ப செல்லுபடியாகாது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : தனி மனித வாழ்க்கையிலும் கூடவா….

மேகலா : நிச்சயமாக கிருஷ்ணா…. இன்றைய காலகட்டத்தில், மக்களுடைய எண்ணப் போக்கு, ‘ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டு’ என்பதில் கிடையாது கிருஷ்ணா… ‘வலிமை தான் வலிமையை எதிர்கொள்ள முடியும்…..’ ’நட்பு நாடி வந்தால், குழலூதி இன்னிசை விருந்து கொடுப்போம். அதைத் தாண்டி எங்களை அசைத்துப் பார்த்தால், ’சக்ராயுதம்’ தாங்கும் கடவுளை வணங்குகிறோம்…., அந்தச் சக்ராயுதத்தை ஏவவும் செய்வோம். எங்களுக்கு குழலும் ஊதத் தெரியும்…., சக்ராயுதத்தையும் ஏவத் தெரியும்’. இந்த பஞ்ச் டயலாக்கை பேசியது யார் தெரியுமா கிருஷ்ணா…. ‘வலிமையை வலிமை கொண்டு முறியடிப்போம்’ என்று சொன்னது ஏவுகணைகளின் தந்தை, நம்முடைய பெருமை மிகு டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்கள். கிருஷ்ணரை, பாரதத்தின் signature symbol ஆகச் சொன்னது வேறு யாருமில்லை கிருஷ்ணா…. ‘கலியுகக் கிருஷ்ணர்’…. நம்முடைய பாரதத்தின் பிரதமர் Honorable நரேந்திர மோடி அவர்கள் தான்….

கிருஷ்ணர் : ஓஹ்ஹோ…. பெரிய பெரிய ஆட்களெல்லாம்…., வலிமையை வலிமையாகப் பார்த்ததனாலேயே…., தீவிரவாதம் கலகலத்துப் போய் விட்டதோ…..

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. இப்பத்தான் பாரதத்தின் வலிமை என்னெண்ணு பலருக்குத் தெரிய வந்திருக்கிறது. அதிலும், அப்துல் கலாம் என்ற ‘அக்னிச் சிறகுகள்’ ஏவுகணையாகப் பறக்க ஆரம்பிக்கவும், உலகமே பாரதத்தை வியந்து பார்க்க ஆரம்பித்ததா… அந்த சமயத்தில்,

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா…’ –

என்ற புறநானூற்றுப் பாடலை, தீவிரவாத நாடுகளுக்கு, உலக அரங்கில் எச்சரிக்கையாகப் பேசினார் அல்லவா… அதன் உள்ளர்த்தம் என்ன தெரியுமா…. அவரவர் வேலையை அவரவர் பார்த்துக்கிட்டுப் போங்க…. அடுத்தவங்களுக்குத் தீமை நினைச்சா, அவங்களுக்குத்தான் தீமை விளையும்…. என்று எச்சரிப்பது மாதிரி பேசினாரே… அது வலிமை…. உனக்குத் தெரியுமா கிருஷ்ணா… இதே புறநானூற்றுப் பாடலை…. மறுபடியும் பாரதப் பிரதமர்…. உலக அரங்கில் பேசிய சம்பவம் நடந்தது….. இந்தப் பாடல், நம் நாட்டினருக்கு அர்த்தம் தெரிந்ததோ என்னவோ…. உலகம் முழுமையும்… இந்தியாவுடன் நட்பு கொள்ள விரும்புகிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அந்தப் பாடலின் வலிமை அப்படி மேகலா…. கணியன் பூங்குன்றனாரின் சொல்வன்மை எத்தனை ஆழமானது. காலம் கடந்தும் தமிழின் பெருமையை உலகறியச் செய்கிறதே….

மேகலா : தமிழின் பெருமை என்று நீ கூறியது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது கிருஷ்ணா… அவரவர் ஆடும் ஆட்டத்திற்கு அவரவரே பதில் சொல்ல வேண்டும் என்று ‘பொடி’ வச்சு எழுதியிருக்கார் பாரு…., அதத்தான் அப்துல் கலாம் அவர்களும், பிரதமர் அவர்களும் ‘நச்’சுனு சொல்லியிருக்காங்க…..

கிருஷ்ணர் : இப்பல்லாம், நம்முடைய புலவர்கள் எழுதிய பாடல்களை அப்பப்ப, ஜனாதிபதியும், பிரதமரும் கையாளுவது வழக்கமாகப் போயிற்று இல்லையா…

மேகலா : ஆமாம் கிருஷ்ணா… இது அந்தப் பாடலின் வலிமையா…. அதைச் சொல்லுபவர்கள், சொல்லும் இடத்திற்குத் தகுந்த மாதிரி சொல்லும் நெஞ்சுரத்தினாலா… எப்படி வேணாலும் அர்த்தம் கொள்ளலாம். இதையெல்லாம் பார்த்து, கேட்டு, உலக அரங்கில், பாரதத்திற்கு தனி அந்தஸ்து வந்திருக்கிறதே…. அதுதான் இன்றைய நிஜமான வலிமை. நம்முடைய கலாச்சாரத்தின் மீதும், புண்ணிய பூமியாகிய பாரதத்தின் வரலாறும், பாரதத்தின் பெருமையை உயர்த்திக் காட்டும் தெய்வங்களின் வில், வேல், திரிசூலம், புல்லாங்குழல், சக்ராயுதம் போன்ற ஆயுதங்களின் தத்துவங்களும் உலக மக்களால் அர்த்தமுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு படி மேலே போய், தைவான் நாட்டு கார்ட்டூனிஸ்ட், ராமர் தன் வில்லால் சுழன்று சீனத்து டிராகனை தாக்குவதாக இருக்கும் படத்தை media-வில் போட்டு, ‘வலிமையுள்ளவனே, அதர்மத்தை அழிப்பான்’ என்று சொல்லாமல் சொல்வார்களா…..

கிருஷ்ணர் : So…. வலிமை தான்…., வலிமை மட்டும் தான், வலிமையை எதிர்கொள்ளும்…, வெல்லும்…. Super…, super மேகலா….

மேகலா : Yes, கிருஷ்ணா…..

(நிறைவு பெற்றது)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2