அழகு - பகுதி 9
கிருஷ்ணர் : சில இடங்களில், கட்டுப்பாடாய் இருப்பதுதான் அழகு மேகலா….. School, hospital, கோயில்…, இது தவிர இன்னும் ஒரு இடம் இருக்கிறது. ‘ராணுவம்’…. Military campus-க்குள் நுழைந்து பார்த்தால் தான் தெரியும்… ‘கட்டுப்பாடு’ என்பது, ஒரு ஒழுங்கு… அது, எவ்வளவு அழகானது…. இந்தக் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டும் தான், ராணுவத்தில் சேருவார்கள். ஒட்ட வெட்டிய hair style… முறுக்கி விடப்பட்ட மீசை மட்டுமல்ல…, சூரியன் உதிக்கும் முன்னயே எழுவது…., பயிற்சி எடுப்பது…., சீருடை அணிந்து, march past பண்ணுவது என்று…, தேசத்தின் கம்பீரத்தை வெளிப்படுத்தும் அழகு இது…. மேகலா : கட்டுப்பாடு என்பது, ஒரு ஒழுங்கு… ‘ஒழுங்கு’ என்பது தெளிவான அழகு என்று நீ சொல்லும் போதே, ராணுவத்தின் அழகு கம்பீரமாகத் தெரியுது கிருஷ்ணா…. இன்னும் ஒரு அழகு…. எனக்கு ரொம்பப் பிடிக்கும் கிருஷ்ணா….. பறவைகள் வானத்தில் பறக்கும் போது…, நீ பார்த்திருக்கிறாயா கிருஷ்ணா…. ஒற்றைப் பறவையாய் பறப்பதில்லை. ஒரு கூட்டமாய் பறக்கும் போது, ஆகாய விமானம் பறப்பது போல இருக்கும். ஒரு பறவை கூட, இப்படி அப்படி நகர்ந்து பறப்பதில்லை. ஒற்றுமையாய்தான் பறக்கும்