அழகு - பகுதி 8

மேகலா : எண்ணெய் தடவிய கூந்தலை இழுத்து உச்சியில் கட்டிய கொண்டையும், வெறுமனே மஞ்சள் மட்டும் பூசிய கருத்த முகமும்…, பின் கொசுவம் வைத்து கணுக்கால் தெரிய கட்டிய சேலையும், முன் பக்கத்தில், ‘கட்’ இல்லாத வெள்ளைக் கலர் blouse…, எடுப்பாகத் தெரியும் முன் பல்லும்…., இப்படியெல்லாம் வர்ணிக்கக் கூடிய கொல்லங்குடிக் கருப்பாயியை, அழகாக, மிக அழகாக வானத்து நிலாவாகக் காட்டியது எது கிருஷ்ணா…. ‘குயில்’ மாதிரி யாரிடமும் முறைப்படி கற்றுக் கொள்ளாமல், தானாகப் பாடும் அந்தப் பாட்டுத் திறன் தானே….

‘சீவிச் சிங்காரிச்சி சிவகெங்கைக்கு

நாங்களெல்லாம் தேரோட்டம்

பாக்கப் போறோம் வாரீயா….

மச்சான் செவலக்காளை

வண்டி பூட்டித் தாரீயா’

‘ஆத்தோரம் தோப்புக்குள்ள

காத்திருக்கேன் என்று சொல்லிச் சொல்லி

நேத்து வரை ஏன் வரல கண்ணம்மா’ –

இந்தப் பாட்டைக் கேட்டாயா கிருஷ்ணா….. இதில் எந்த வார்த்தையாவது இலக்கியத் தரம் வாய்ந்ததா…., இல்லை. ஆனால், ஒரு அழகான காதலை அற்புதமாகச் சொல்லும் ஒரு சிறு ‘டயலாக்’. அதை சாதாரணமாக, ஆனால் ‘ரிதமோடு’ பாடி விட்டார்…., இந்த அசாதாரணமான பெண். இந்தப் பாடலை விட, அதில் தெரியும் கிராமத்துக் காதல் எவ்வளவு அழகு…. அதை விட, பாட்டைப் பாடிய பாடகி ‘உலக மகா அழகி’…. இப்படிப்பட்ட அழகுகளை நாம் தான் தேடிப் போகணும்…. அவர்களுக்கு வெளிச்சம் பார்த்து வரத் தெரியாது கிருஷ்ணா… இவரை மாதிரி தான், ‘தேனி குஞ்சரம்மா’, ‘பரவை முனியம்மா’ இவர்களெல்லாம்…. Channel-களாலும், திரைப்படங்களாலும் கண்டுபிடிக்கப்பட்ட அழகுப் பொக்கிஷங்கள்.

கிருஷ்ணர் : ஆம்மாம்… நீ சொன்ன மாதிரி, இது கண்டுபிடிக்கப்பட்ட அழகு தான்….. ஏன் மேகலா, அழகுக்கு அடையாளம் இருக்கிறதா….

மேகலா : என்ன கிருஷ்ணா…, என்ன கேக்குற நீ…. இதுக்கெல்லாமா identity இருக்கு…? இருந்தாலும் சில வேலைகளுக்காக அணியும் dress, அதன் வேலைக்கான identification ஆக இருந்தாலும், அந்த dress அணிவதே கம்பீரமான அழகாகி விடும் கிருஷ்ணா… நீ சும்மா கேட்டயா…, விவரமாதான் கேட்டயா… தெரியவில்லை…. இருந்தாலும், police dress அணிந்து வரும் போது, சாதாரண மக்களுக்கெல்லாம் மனசுல ஒரு மரியாதை கலந்த பயம் வரும் கிருஷ்ணா…. திருடர்களுக்கெல்லாம் வயிற்றைப் பிசையும் ஒரு பயம் வரும்ல. அது சம்பந்தப்பட்ட police என்ற personality-க்கு கிடைக்கும் மரியாதை 50% என்றால், அந்த போலீஸையே கம்பீரமாக்கும் காக்கி உடைக்கு 50% மரியாதை கிருஷ்ணா….. போலீஸுக்கு காக்கி uniform அழகுனா…. டாக்டருக்கு வெள்ளை coat அழகு…. வக்கீலுக்கு கருப்பு coat அழகு….

கிருஷ்ணர் : டீச்சருக்கு….

மேகலா : பெண் டீச்சர்னா – அழகான குட்டிக் கொண்டை, கையில் குடை, கண்ணுல கண்ணாடி…, அடையாளம். ஆண் டீச்சர்னா – Full hand சட்டையை முக்காக் கையா மடிச்சி விடுவது என்றுதான் சொல்ல முடியும் கிருஷ்ணா…. டீச்சருக்குன்னு தனிப்பட்ட uniform dress நம்ம இந்தியால கிடையாதுல கிருஷ்ணா… என்றாலும்…, டீச்சருடைய முகத்துல ஒரு அறிவுச்சுடர் தெரியும் கிருஷ்ணா…, அதுதான் அழகு….

கிருஷ்ணர் : டீச்சருக்கும் uniform இருந்திருந்தா நல்லா இருக்கும்ல மேகலா….

மேகலா : கிருஷ்ணா… எனக்கு இன்னும் ஒரு அடையாள dress ரொம்பப் பிடிக்கும். கேரளத்துப் பெண்கள், கோயிலுக்குப் போவதென்றாலும், ஓணம் பண்டிகை கொண்டாடும் போதும், வெள்ளை saree, அல்லது முண்டு, border-க்கேத்த blouse போட்டு, ‘நாங்கள் கேரளத்துப் பெண்கள்’ என்று சொல்லாமல் சொல்லும் அழகு இருக்கே…, ஆஹா அதைச் சொல்லி மாளாது. தமிழ்நாட்டுப் பெண்களுக்கு, பட்டுச் சேலை என்று சொல்லலாம். ஆனால், பட்டு, பருத்தி, designer saree என்று எல்லாமே கலந்து கட்டி மக்கள் அணிவதால், ‘அடையாள உடை’ என்று தமிழ்நாட்டு மக்களிடம் கிடையாதே என்று கொஞ்சம் ஏக்கமா இருக்கு கிருஷ்ணா…. எல்லா state-க்கும் அடையாள dress-ன்னு இருந்தாலும், கேரள மக்கள் இதை follow பண்ணுவது மாதிரி யாரும் follow பண்ணுவார்களாண்ணு தெரியல கிருஷ்ணா… குருவாயூர் கோயிலுக்குச் சென்றால், அங்கு எங்கு திரும்பினாலும், இது கேரளம் என்று தெரியும்படிக்கு பெண்கள், கேரளத்து வெள்ளை பருத்தி உடையிலும், ஆண்கள் வேஷ்டியிலும் இருப்பதைப் பார்க்கும் போது கொள்ளை அழகாக இருக்கும் கிருஷ்ணா… பத்மநாபசாமி கோயிலுக்குச் சென்றாலும், அங்கும் அப்படித்தான்…. அதிலும், பெண்கள் தங்கள் கூந்தலை அழகாக மயில் தோகை மாதிரி பரப்பி வைத்து, இடது புறம் கொஞ்சம், வலது புறம் கொஞ்சமாகக் கூந்தலை எடுத்து clip பண்ணி வரும் அழகு இருக்கே…. இப்படி ஒரு மாநிலம் முழுவதுக்கும் மக்கள் எல்லோரும் தன்னிச்சையாக ஒரே மாதிரி உடை அணிவது என்பது ஆச்சர்யமான அழகு கிருஷ்ணா.... வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், கோயிலுக்குச் செல்லும் போது, சேலை அணியாமல், சுடிதார் அணிந்து சென்றால் கோயில் வாசலிலேயே தடுத்து நிறுத்தி, நிர்வாகமே, வேஷ்டி என்ற முண்டுவை கொடுக்கும். அதை அணிந்துதான் கோயிலுக்குள் செல்ல முடியும். சாமியைக் கும்பிடப் போகும் போது கூட, dress கட்டுப்பாடா என்று கேட்பவர்களைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். எனக்கென்னாவோ, இந்த உடைக் கட்டுப்பாடு, மக்கள் மனதில், பணிவையும் பக்தியையும் வரவழைக்கிறது என்று நான் நம்புகிறேன் கிருஷ்ணா….

(தொடரும்)


Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2