அழகு - பகுதி 9

கிருஷ்ணர் : சில இடங்களில், கட்டுப்பாடாய் இருப்பதுதான் அழகு மேகலா….. School, hospital, கோயில்…, இது தவிர இன்னும் ஒரு இடம் இருக்கிறது. ‘ராணுவம்’…. Military campus-க்குள் நுழைந்து பார்த்தால் தான் தெரியும்… ‘கட்டுப்பாடு’ என்பது, ஒரு ஒழுங்கு… அது, எவ்வளவு அழகானது…. இந்தக் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டும் தான், ராணுவத்தில் சேருவார்கள். ஒட்ட வெட்டிய hair style… முறுக்கி விடப்பட்ட மீசை மட்டுமல்ல…, சூரியன் உதிக்கும் முன்னயே எழுவது…., பயிற்சி எடுப்பது…., சீருடை அணிந்து, march past பண்ணுவது என்று…, தேசத்தின் கம்பீரத்தை வெளிப்படுத்தும் அழகு இது….

மேகலா : கட்டுப்பாடு என்பது, ஒரு ஒழுங்கு… ‘ஒழுங்கு’ என்பது தெளிவான அழகு என்று நீ சொல்லும் போதே, ராணுவத்தின் அழகு கம்பீரமாகத் தெரியுது கிருஷ்ணா…. இன்னும் ஒரு அழகு…. எனக்கு ரொம்பப் பிடிக்கும் கிருஷ்ணா….. பறவைகள் வானத்தில் பறக்கும் போது…, நீ பார்த்திருக்கிறாயா கிருஷ்ணா…. ஒற்றைப் பறவையாய் பறப்பதில்லை. ஒரு கூட்டமாய் பறக்கும் போது, ஆகாய விமானம் பறப்பது போல இருக்கும். ஒரு பறவை கூட, இப்படி அப்படி நகர்ந்து பறப்பதில்லை. ஒற்றுமையாய்தான் பறக்கும். இயற்கையின் அழகுகளில் இதுவும் ஒண்ணு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஒண்ணு ரெண்டு விலகி வந்தாலும்…., வரிசை தப்பிருச்சே….. என்று மறுபடியும் கூட்டத்தோடு சேர்ந்து விடும்…. அவர்களுக்குள் இருக்கும், யாரும் விதிக்காத கட்டுப்பாடு….

மேகலா : இந்தப் பறவைகளைப் பற்றிப் பேசும் போது, எனக்கு இன்னும் ஒரு காட்சி ஞாபகத்துக்கு வருது கிருஷ்ணா… மும்பையில், ‘Gateway of India’ இருக்கும்ல…. அங்கு நிறைய புறாக்கள் இருக்கும். அவைகளுக்கு தானியம் போடுபவர்களும் நிறையப் பேர் போடுவார்கள். தானியத்தைக் கொத்தித் தின்னும் புறாக்களுக்கு நடுவில் யாராவது நடந்துட்டா போதும்… அத்தனை புறாக்களும், படபடன்னு சிறகை அடித்துக் கொண்டே பறக்கும் கிருஷ்ணா. Seven Colors வாண வெடி, வெடித்துக் கொண்டே, ஏழு கலராய் திசைக்கொரு பக்கமாய் சிதறி ஜொலிக்கும்ல கிருஷ்ணா…. அதே மாதிரி புறாக்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் பறந்தாலும், ஒரே நேரத்தில் கூட்டமாய் பறக்கும் கொள்ளை அழகைப் பார்ப்பதற்கே, நிறையப் பேர் புறாக்களுக்கிடையில் புகுந்து வருகிறார்களோ என்று எனக்குத் தோணும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இந்தப் பறவைகளே இப்படித்தான் மேகலா… தானியங்களை கொத்தித் தின்பதும் அழகு…. தண்ணீரில் நனைந்து குளிக்கும் அழகு ஒரு அழகென்றால்…., நனைந்த சிறகை விசிறி விசிறி சிலிர்த்துக் கொள்வது, இன்னுமோர் அழகு…. கோயில் மாடங்களில், ஒவ்வொரு நிலையாக பறந்து பறந்து தவிப்பதும் அழகு…. மாலை நேரத்தில் கூட்டுக்குத் திரும்பும் அம்மா பறவை, குஞ்சுக்கு சோறூட்டுவதைப் பார்த்திருக்கிறாயா…. அந்த சிறகு முளைக்காத குஞ்சுகள் குட்டி வாயைத் திறந்து திறந்து, எனக்கு முதலில், எனக்கு முதலில் என்று முண்டியடிக்கும் காட்சியைப் பார்த்திருக்கிறாயா…. ‘அம்மா’…. அன்பு….. எந்த உயிருக்குள்ளும் இந்த உறவு ரொம்ப அழகு மேகலா…. பறவைகள் உலகம்…., அழகான உலகம் மேகலா….

மேகலா : அழகைப் பற்றி உன் கண்ணோட்டத்தைச் சொல்லு என்று என்னைச் சொல்லி விட்டு, நீ எத்தனை ரசனையோடு சொல்கிறாய் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : பறவைகளைப் பற்றி நீ சொல்ல ஆரம்பித்தாயா…, எனக்கும் அது தொற்றி விட்டது….

மேகலா : நீ ‘பறவைகள் உலகம் அழகானது’ என்கிறாய்…. மனிதனோடு சம்பந்தப்படாத உயிர்களின் உலகமே…. விநோதமானது…, விந்தையானது…. அழகானதும் கூட….

கிருஷ்ணர் : மனிதனோடு சம்பந்தப்படாத என்று எதைச் சொல்லுகிறாய்…, விலங்குகளைப் பற்றியா…

மேகலா : ஆமாம் கிருஷ்ணா….. நாம் நினைக்கிறோம், ’விலங்குகளும் பறவைகளும் சுதந்திரமானவை; மனுஷங்க மாதிரி கட்டுப்பாடெல்லாம் அதற்குக் கிடையாது’ என்று. ஆனால், விலங்குகள் குடும்பம் குடும்பமாய் கட்டுப்பாடாய் தான் வாழுகின்றன. யானைகள், அணிவகுப்பாய் ஒன்றன் பின் ஒன்றாக செல்லும் போது, அதிலும் குட்டி யானைகளை, மிகப் பாதுகாப்பாய் தங்கள் கால்களுக்கிடையே அரவணைப்பாய் கூட்டிச் செல்லும் அழகே அழகு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : மேடம்! என்ன சொன்னீங்க…? விலங்குகள், மனிதனோடு சம்பந்தப்படாததா… ஆடு, மாடு, நாய், பூனை – இவையெல்லாம் விலங்குகள் இல்லையா.. நம்மோட உறவு மாதிரி பழகுவதில்லையா… சில நாய்கள், நாம் பேசுவதைக் கேட்டு, react பண்ணுவதே உனக்குத் தெரியாதா…. என்றாலும், நீ சொல்லும் அந்த யானைகளின் அணிவகுப்பை நான் ஏற்கிறேன்…. ஆடுகள், மாடுகள், மந்தை மந்தையாய் செல்வது அழகு… மான்கள் கூட்டம் கூட்டமாய் செல்வது அழகு…. தவளை கூட, மழை ஓய்ந்தவுடன், கூட்டமாய் சேர்ந்து கத்திக் கதறிப் பாடுமே… கேட்பதற்கு சுவையாய்…! அனுபவிக்கத் தோணுமா இல்லையா….

மேகலா : இதிலிருந்து என்ன தெரியுது கிருஷ்ணா….மனுஷனாக இருந்தாலும், பறவைகளானாலும், விலங்குகளானாலும், ஒவ்வொரு உயிரும், ஒற்றுமையாய், ஒரு கட்டுப்பாடாய், அன்பாய், ஆனந்தமாய் இருப்பதே அழகுதானே…. நான் ரசிச்ச ஒரு சம்பவத்தை உன் கிட்ட சொல்லியே ஆகணும் கிருஷ்ணா…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1