அழகு - பகுதி 7

மேகலா : ஆமாம் கிருஷ்ணா… காலை breakfast time. அதற்காக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு அம்மா சின்ன முனகலாய் சப்தம் கேட்டு சுற்று முற்றும் பார்த்தார்கள். எங்கிருந்து சப்தம் வருகிறது என்று புரியவில்லை. தன் மகளைக் கூப்பிட்டு, ‘உனக்கு ஏதாவது சப்தம் கேட்கிறதா’ என்று கேட்க, அவளும், ‘ஆமாம்மா, எனக்கும் கேட்குது’ என்று சொல்ல, இருவரும் தேட ஆரம்பித்தார்கள். ‘சப்தம்’ வீட்டுக்கு வெளியிலிருந்து வந்த மாதிரி கேட்டதால், ‘இங்கிருந்து என்ன சப்தம்’, ஏதோ நாய், குட்டி போட்டு முனகுவது மாதிரி கேட்குதே’ என்று சுற்றிச் சுற்றி பார்க்க, கண்களில் எதுவும் தட்டுப்படவில்லை. மகள், ‘போம்மா உனக்கு வேற வேலையில்லை’ என்று அலுத்துக் கொண்டே உள்ளே போய் விட்டாள். அம்மாக்கு மனசு கேட்காமல், வீட்டின் முன்னால், கழிவு நீர் ஓடும் குழாயில் இருந்து சப்தம் அதிகமாகக் கேட்க, அந்த concealed வாய்க்காலுக்குள் பார்ப்பதற்காக, கீழே குனிந்து பார்த்தாள். கைக்கு எட்டாத தொலைவில் ஏதோ அசைவது மாதிரி தெரிகிறது. நன்றாகப் படுத்துக் கொண்டு உற்றுப் பார்க்கிறாள். இவளுடைய வினோதமான செயலை, அருகில் இருப்பவர் video படம் எடுக்க ஆரம்பித்து விட்டார். உற்றுப் பார்த்த அந்த அம்மா, உரக்கக் குரல் கொடுத்து, ‘ஏய், வாய்க்காலுக்குள்ள ஒரு குழந்தை இருக்குடா…. யாராவது வாங்க’ என்று கத்த ஆரம்பித்தாள். அத்தோடு மட்டுமல்ல, கையை உள்ளே நீ…ட்…டி…., அந்தக் குழந்தையை முயற்சி செய்து பிடித்தே விட்டாள். பிடித்து வெளியே கொண்டு வர…, ஐயோ…, அந்தக் குழந்தை complete-ஆக சாக்கடையால் குளித்திருந்தது. புழுக்களும் மேலே நெழிந்தது. இன்னும் கொஞ்சம் நேரம் ஆனால், செத்தே போயிருக்கும். அங்கு சிறிய கூட்டமே கூடி விட்டது. அந்த அம்மா, நெஞ்செல்லாம் பதறிப் போனாள். குழந்தையைப் பார்த்ததும், கண்ணீரே வந்து விட்டது கிருஷ்ணா. ‘எந்தப் பாதகத்தி பிள்ளையைப் பெற்று சாக்கடைக்குள் போட்டுட்டுப் போனாளோ…, நாசமாய் போவா…’ என்று சாபம் கொடுத்துக் கொண்டே, மகளிடம் வெந்நீர் எடுத்து வைக்கச் சொல்லி, soap-ஐ எடுத்து வந்து, தன் கால்களுக்கிடையில் குழந்தையைப் படுக்க வைத்து குளிப்பாட்டினாள். கிருஷ்ணா…, அதற்குள் யாரோ police-க்கு inform பண்ணி, அவர்களும் வந்து விட்டார்கள். அவர்களிடம், video எடுத்தவர் சம்பவத்தைக் காட்ட, police அந்த அம்மாவின் செயலை வெகுவாகப் பாராட்டி, குழந்தைக்கு first-aid கொடுப்பதற்காக டாக்டரிடம் ஒப்படைத்தனர்…. பின்பு, அந்த அம்மாவை, கலெக்டர், அரசாங்கம் எல்லோரிடமும் அறிமுகப்படுத்த, அடுத்த நிமிடம், social media மூலமாக news உலகமெல்லாம் viral ஆகியது. எல்லோரும் அந்த அம்மாவை interview எடுத்து, சம்பவத்தை விவரிக்கச் சொன்னார்கள். அந்த அம்மா, என்னைப் போல சாதாரணப் பெண் தான். ஆனால், இந்த சம்பவத்தை எடுத்துச் சொல்லும் போது, உலகமே போற்றும் அழகியாகத் தெரிந்தாள் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : வாவ்… இந்தப் பெண்ணின் மனதை ‘தாய்மை’ என்பதா…, ‘கடவுள் தன்மை’ என்பதா… உன் பாஷையில் சொல்லணும்னா, கருணை, அழகு என்றும் கூட சொல்லலாம்…… இந்த மாதிரி அழகானவங்க, கடவுளால அனுப்பப்பட்டவங்கண்ணு கூட சொல்லலாம்.

மேகலா : கிருஷ்ணா…, சில வார்த்தைகளை, அருமையாக, பொருத்தமாக எடுத்துச் சொல்லி, சில சம்பவத்தின் தன்மையை மேலும் அழகாக்கிக் காட்டிடற கிருஷ்ணா…. Super கிருஷ்ணா…. அழகு என்பது, கண்கள் அழகாகவோ, முகம் அழகாகவோ இருந்தால் மட்டும் பத்தாது…. மனசு, அன்பு, கருணை நிறைந்து இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனசுக்காரங்களை, சில சம்பவங்கள் அழகாகக் காட்டி விடும். இன்னும் சிலர் இருக்காங்க கிருஷ்ணா. அவங்களுக்குள் என்ன இருக்குன்னு அவங்களுக்கே தெரியாது… தன்னுடைய திறமை எவ்வளவு உயர்வானது என்பதும் தெரியாது… குடத்துக்குள் விளக்கு போல தனக்குள்ளேயே திறமையை வைத்திருக்கும் குத்துவிளக்கு… ’சித்தம் போக்கு சிவம் போக்கு’ போல, தன் பாட்டுக்கு தனக்குள்ளேயே பாடிக் கொண்டிருந்த ‘சில்வண்டு’, வயல் வரப்புகளிலும், நாற்று நடவுகளிலும், நெல் குத்தும் போதும், இன்ன பிற வேலைகள் செய்யும் போதும், அலுப்பாகவும், வியர்வையாகவும், முக்காமல் முனகாமல் அழகான பேசும் தமிழ் வார்த்தைகளைப் பாடலாக்கி பாடித் திரிந்த ‘சில்வண்டுகளை’, கண்டுபிடித்து, வானம்பாடி ஆக்கியது பேரதிசயம் கிருஷ்ணா. உனக்கு ‘கொல்லங்குடி கருப்பாயி’ தெரியுமா கிருஷ்ணா…?

கிருஷ்ணர் : ஏன் தேரியாம… கல்விக் கூடம் போகாமலேயே நாக்குல சரஸ்வதியைக் குடி வைத்த பாட்டுப் புத்தகமல்லவா…. ஒரு காலத்துல, ‘பொதிகை’ channel-லில் பொங்கல், தீபாவளி என்று எந்த விழாக்காலத்திற்கும், சினிமா இருக்கோ இல்லையோ, நாட்டுப்புறப் பாடல், வில்லுப் பாட்டு என்று நாட்டுப்புறக் கலைகள் சார்பாக, அந்தந்த கலைஞர்களை வரவழைத்து program கொடுத்து, மக்களிடையே நாட்டுப்புறப் பாடல்களும், பாரம்பரியக் கலைகளும் மறைந்து போகாமல் ஜீவனோடு உலா வரச் செய்ததை மறக்க முடியுமா…? ஆமா…, கொல்லங்குடி கருப்பாயியை நினைவுபடுத்தி என்ன சொல்லப் போகிறாய்….?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1