நான், நானாகத்தான் இருப்பேன் - பகுதி 1

மேகலா : ஹாய் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : என்ன மேகலா….. அடுத்த topic-உடன் உன் கூட பேச வந்திருவேன் என்று சொன்னாயே…. இத்தனை நாள் ஆகிப் போச்சு……; rest எடுக்கிறயோ…..

மேகலா : Rest எடுக்கிறேன் என்பதெல்லாம் ஒரு காரணமா கிருஷ்ணா…. என்ன தலைப்பு எடுக்கலாம் என்று ஒரு தடுமாற்றம்…. மாரியம்மன் கோயில் பூக்குழி ஆரம்பமாகியது….. தூத்துக்குடியில் ஒரு ‘பூச்சூட்டும் விழா’ என்று அடுத்தடுத்து பரபரப்பாய் இருப்பதற்கு காரணம் கிடைத்தது. அதைச் சாக்கு வைத்து, எழுதுவதையும் நிறுத்தி வைத்திருக்கிறேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh! ரொம்ப busy-யோ….

மேகலா : Busy-யெல்லாம் ஒண்ணுமில்ல கிருஷ்ணா…. என்ன எழுதலாம் என்பதில் ஒரு சின்ன தடுமாற்றம்; அவ்வளவுதான் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அரசியல் பேசலாமே….

மேகலா : பேசலாம்…., அதை விட, நான் இப்போ பார்த்துக் கொண்டிருக்கிற சீரியலில் இருந்து ஒரு வசனம் என்னை ரொம்ப யோசிக்க வச்சுது கிருஷ்ணா. அதனை உன்னிடம் கேட்கட்டுமா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : என்ன…., புதுசா பம்முற….. பேசணும்னு வந்துட்டா, பம்முறதெல்லாம் உன்கிட்ட கிடையாதே…., என்ன விஷயம்…., கேளு…

மேகலா : இப்போ புதுசா ஆரம்பிச்ச சீரியல்தான் ‘எதிர்நீச்சல்’. அதன் கதை என்னண்ணா…., தன் மகள் என்ன படிக்கணும், எப்ப படிக்கணும், எவ்வளவு படிக்கணும்…., படிக்கும் போது சாப்பிடலாமா, கூடாதா…., என்ன மார்க் வாங்கணும்…., யார் கூடப் பேசணும்…, என்றெல்லாம் அப்பா தான் தீர்மானிப்பார். அந்தப் பொண்ணும், மறுப்பெதுவும் சொல்லாமல், அப்பா சொன்னபடியே…, படிக்கும்…, சாப்பிடும்…. College-ல் first ஆகவும் பாஸ் செய்து விடுவாள்….. அடுத்து நல்ல கம்பெனியில் வேலைக்குப் போகப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே…., அப்பா கல்யாணம் பேசி முடிவெடுத்து விடுகிறார். அந்தப் பொண்ணும், பெரிய தொழிலதிபர் வீட்டிலிருந்து பெண் கேட்டு வரவும்…, அந்தப் பொண்ணு, இங்க என்ன நடக்குதுண்ணு உணருவதற்கு முன்னமேயே கல்யாணம் வரைக்கும் கதை வந்து விடுகிறது. கல்யாணத்திற்கு அந்தப் பொண்ணோட சம்மதத்தை யாரும் கேட்கவில்லை…, தகப்பனும் கேட்கவில்லை…., பெண் கேட்க வந்தவரும் கேட்கவில்லை. அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதற்கு முன்னமேயே…, அவளோட அப்பா, ‘ஜனனி, அப்பா உனக்கு எது நல்லதுன்னு யோசிச்சுதான் முடிவெடுத்திருக்கிறேன்’ என்று சொல்கிறார். பொண்ணு கேட்டு வந்தவரோ…, ‘அப்புறம்…, நாச்சியப்பன், கல்யாணம் எங்கள் ஊரில், எங்க சம்பிரதாயப்படி நடக்கும்…. நாம், சேலை வாங்க காஞ்சீபுரம் போகிறோம்…. எல்லோருக்கும் நானே எடுத்து விடுகிறேன்; எங்கள் வீட்டில் அதுதான் வழக்கம்’ என்று சொல்கிறார். கதை பார்க்கும் நமக்கு, ‘என்னடா, கதை இவ்வளவு speed-ஆ போகிறதே’ என்று தோன்றுகிறது. ’நல்லா படிக்கிற பிள்ள…; இவ விருப்பத்தை யாரும் கேட்க மாட்டாங்களா’ என்று தோன்றுகிறது.

கிருஷ்ணர் : இவ்வளவு அவசரமாக எப்படி பொண்ணோட தகப்பனார் முடிவெடுத்தார்…?

மேகலா : அதாவது, பொண்ணு கேட்டு வந்தவர், பெண்களுக்கு அதிகமாக மதிப்புக் கொடுப்பவர் என்று தகப்பனார் நம்புகிறார். Website-ல அவங்க family-யைப் பற்றி தெரிந்து கொள்ளும் போது, அவங்க வீட்டு மருமகள்கள் மூவரும், அவரோட industry-யில் ஒவ்வொரு பொறுப்பு வகிப்பதாக பதிவு பண்ணியிருக்கிறார்கள். அதைப் பார்த்துத்தான், தன் மகளைப் பொண்ணு கேட்டு வந்தவுடன், அவங்க industry-யில் தன் மகளுக்கு பெரும் பொறுப்பு கொடுக்கப் போகிறார்கள் என்று ஆசைப்பட்டு பொண்ணு கொடுக்கச் சம்மதிக்கிறார்.

கிருஷ்ணர் : Oh! அதனால்தான் பொண்ணு கேட்டு வந்தவர், தன்னுடைய தீர்மானமே சகலமும் என்று அலப்பறையைக் கூட்டினாலும், இந்தப் பொண்ணு கல்யாணத்துக்கு சரி என்றாளா….

மேகலா : அதெல்லாம் யோசிப்பதற்கு முன்னாடியே கல்யாணம் வந்து விடுகிறது. கல்யாணம் மதுரையில் நடப்பதால், பெண் வீட்டார்கள், மதுரை கல்யாண மண்டபத்திற்கு வருகிறார்கள். வந்த இடத்தில், எங்கு பார்த்தாலும், பொண்ணு கேட்டு வந்தவருடைய poster, அவருடைய, அவருடைய ஆட்களின் அலம்பல்கள், ஆர்ப்பாட்டம், அதிகாரம் என்று, பொண்ணு ‘கொஞ்சம் மிரண்டு’, கொஞ்சமென்ன ரொம்பவே மிரண்டு போகிறாள். அவள் மட்டுமல்ல, அவள் கூட வந்தவர்கள் எல்லோருமே மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுடைய அலப்பறையில் ரொம்பவே பயந்து போகிறார்கள். அப்பத்தான், அந்த group-ல் ஒரு பொண்ணு பேசும் ‘டயலாக்’தான் என்னை ரொம்பவே யோசிக்க வைத்தது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அப்படி என்ன பேசினாள்….?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1