Posts

Showing posts from July, 2022

கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 1

கிருஷ்ணர்   : சரி…., என்ன தலைப்பில் பேசலாம்…., ஏதாவது தீர்மானித்து வைத்திருக்கிறாயா….. மேகலா  : ஏதாவது கலகலப்பான தலைப்பு எடுக்கலாமான்னு யோசிக்கிறேன் கிருஷ்ணா… கிருஷ்ணர்  : யோசித்து நல்ல தலைப்பா சொல்லு மேகலா மேகலா  : கிருஷ்ணா…., இன்று ’கலாட்டா கல்யாணம்’ படம் பார்த்தேன் கிருஷ்ணா…, நாம, ‘கல்யாணங்களும், கலாட்டாக்களும்’ என்று பேசலாமா….. கிருஷ்ணர்  : ‘மீனாட்சி திருக்கல்யாணம்’ நினைவுகளோடு, ‘கல்யாணங்களும், கலாட்டாக்களும்’ என்று பேசப் போகிறோமா….. O.K…. Super…. Super…. ஆமாம்…., உனக்கு இந்த தலைப்பில் எழுத வேண்டும் என்று ஏன் தோணுச்சி மேகலா….? மேகலா  : கிருஷ்ணா….. முதலில் உனக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன் கிருஷ்ணா…. ‘மீனாட்சி திருக்கல்யாண’ நிகழ்ச்சி நடந்ததைப் பற்றி உன்னிடம் விவரித்துச் சொல்லிக் கொண்டிருந்ததை எனக்கு நினைவுபடுத்தி, ‘கல்யாணங்களும், கலாட்டாக்களும்’ என்ற தலைப்பையும் சொல்ல ஆரம்பித்திருக்கிறாய் என்று ஞாபகப்படுத்தி இருக்கிறாய்…. அதுவே, நீ என்னை வாழ்த்தியதாக உணர்கிறேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : சரி…., சிறப்பாக ஆரம்பித்திருக்கிறாய்…. ஏன் மேகலா…., ‘கல்யாணம்’… இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்…. ம

நான், நானாகத்தான் இருப்பேன் - பகுதி 7 (நிறைவுப் பகுதி)

கிருஷ்ணர்   : இல்லாமல் இருக்குமா….? பிள்ளைகளுக்கு கதை சொல்லும் போது, தொழில்துறையில் சாதனையாளர்களான அம்பானி, டாடா நிறுவனர், Infosys நாராயணமூர்த்தி போன்ற சாதனையாளர்களின் வளர்ச்சியைப் பற்றி சொல்லிப் பாரு…. அவர்களுடைய இப்போதைய வளர்ச்சியைப் பற்றி நீ சொல்லும் போது, பிள்ளைகளுக்கும், தானும் ஒரு நாள், அவர்கள் போல வர வேண்டும் என்ற கனவு கண்களில் தெரியும்….. மேகலா  : நெசம் தான் கிருஷ்ணா…. ஒவ்வொரு சின்னப் பிள்ளைக்கும், ‘அம்பானி’, ‘டாடா’, ‘Infosys’ போன்ற பிரம்மாண்டத்தின் மீது ஒரு பிரமிப்பு கட்டாயம் வரும் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : ‘Right’…. அந்த மாதிரி சமயங்களில், அம்பானி ஆரம்ப கட்டத்தில் எவ்வளவு சாதாரணமாக இருந்தார்; மும்பை road side கடைகளில், காத்திருந்து ‘புலாவ்’ சாப்பிட்ட சாதாரண ஆள், தன் உழைப்பினால் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார் என்று அழுத்தமாகச் சொல்லிப் பாரு….. அப்போ, அந்தக் குழந்தை நம்பிக்கையோடு கேட்கும்…. ‘நாமும் நன்றாக படித்து வேலை செய்தால், அம்பானி மாதிரி வரலாமா…..’ என்று. அது மட்டுமல்ல, இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தின் M. D. Infosys நாராயணமூர்த்தி ஒரு சின்ன apartment-ல் குடியிருக்

நான், நானாகத்தான் இருப்பேன் - பகுதி 6

மேகலா  : பிள்ளைகள் போக்கிலேயே சென்று திசை திருப்பணும்னா, எப்படி கிருஷ்ணா…. ஒரு உதாரணத்துக்கு வைத்துக் கொள்வோம்….. பிள்ளைகள், இன்னைக்கு home work இல்லைன்னு பொய் சொல்லி, விளையாடப் போறாங்கன்னு வச்சுக்குவோம்…. அப்போ, அவங்க போக்கிலேயே எப்படிப் போறது….. கிருஷ்ணர்  : இதப் பாரு மேகலா…. நீ என்ன சின்னப் பிள்ளையா…. ‘home work’ கிடையாதுன்னு பொய் சொன்னா என்ன செய்யிறதுன்னு கேட்பதற்கு…. அம்மா, diary-யைச் check பண்ணுவாங்க, friend கிட்ட phone பண்ணிக் கேப்பாங்கன்னு தெரிஞ்சும் டிமிக்கி குடுக்குற பிள்ளைகளின் முதுகில் ரெண்டு போடு போடத்தான் செய்யணும்.  நித்திய கடமையைச் செய்யாமல் விட்டா, அம்மா முதுகுல சாத்துவாங்க என்ற பயம் பிள்ளைகளை கடமையை ஒழுங்காகச் செய்ய வைக்கும்.  எந்தக் காலத்திலும்,  தண்டனை ஒன்றுதான் மனிதனை தன் கடமையை ஒழுங்காகச் செய்ய வைக்கும். மேகலா  : பின்னே எதுல, பிள்ளைகளைத் திசை திருப்புவது…? கிருஷ்ணர்  : சரி…… home work எழுதும் பிரச்னையையே எடுத்துக்குவோம்…. இன்று home work இல்லை என்றதும்…., நீயும், ‘சரி’ என்று check பண்ணாமல் விட்டால் என்னாகும்… அப்படியே, மறு நாள் பிள்ளைகள் பொய் சொல்லாமல், ‘நல்ல அம்ம

நான், நானாகத்தான் இருப்பேன் - பகுதி 5

கிருஷ்ணர்   : அப்படீன்னு யார் சொன்னது? பிள்ளைகள் சேட்டை பண்ணும் பொது ரெண்டு மொத்து கூட மொத்தலாம். இதையெல்லாம் அம்மாவாகச் செய்ய வேண்டும்.   பிள்ளைகளுக்கு அம்மாவோட ஸ்பரிசம் எவ்வளவு இதமானதோ…., அனுசரணையானதோ, அது போல, அம்மாவோட கண்டிப்பும், அடியும் கூட இயல்பானதுதான்.   ஏத்துக் கொள்ளும்….. அம்மா சாப்பாடு போடுவது மாதிரிதான்…., முதுகில் மொத்துவதும்…. இதை வைத்து, உரிமை…., சுதந்திரம் என்று தேவையில்லாததை யோசித்து complicate ஆகாதே. உனக்கு ஒண்ணு தெரியுமா மேகலா… பிள்ளைகள் பொதுவாக, normal-ஆ பெற்றோர்கள் இருந்தார்கள் என்றால், அவர்களே நீ விதிக்கும் கட்டுப்பாட்டுக்குள் கூட கொஞ்சம் சலிப்பாக வருவார்கள்….. ஆனால்,   உன்னுடைய கனவை, உன் ஆசையை…., உன் இயலாமையை அவர்கள் மீது திணிக்கும் போது, திமிறி விடுவார்கள்….. ஜாக்கிரதை…. மேகலா  : அப்போ, பிள்ளைகளைப் பற்றி நமக்கென்று ஒரு கனவு இருக்கவே கூடாதா கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : மேகலா….,  கீதையில், கடமையைச் செய்…, பலனை எதிர்பாராதே… என்ற வாசகத்தின் அர்த்தம் உனக்குத் தெரியுமா……  குழந்தையை வளர்க்க வேண்டிய கடமை உன்னிடம் உள்ளது. மூன்று வயது வரை குழந்தையை புதையலாய்க் கொண்டாடு…. எட்ட