நான், நானாகத்தான் இருப்பேன் - பகுதி 5

கிருஷ்ணர் : அப்படீன்னு யார் சொன்னது? பிள்ளைகள் சேட்டை பண்ணும் பொது ரெண்டு மொத்து கூட மொத்தலாம். இதையெல்லாம் அம்மாவாகச் செய்ய வேண்டும். பிள்ளைகளுக்கு அம்மாவோட ஸ்பரிசம் எவ்வளவு இதமானதோ…., அனுசரணையானதோ, அது போல, அம்மாவோட கண்டிப்பும், அடியும் கூட இயல்பானதுதான். ஏத்துக் கொள்ளும்….. அம்மா சாப்பாடு போடுவது மாதிரிதான்…., முதுகில் மொத்துவதும்…. இதை வைத்து, உரிமை…., சுதந்திரம் என்று தேவையில்லாததை யோசித்து complicate ஆகாதே. உனக்கு ஒண்ணு தெரியுமா மேகலா… பிள்ளைகள் பொதுவாக, normal-ஆ பெற்றோர்கள் இருந்தார்கள் என்றால், அவர்களே நீ விதிக்கும் கட்டுப்பாட்டுக்குள் கூட கொஞ்சம் சலிப்பாக வருவார்கள்….. ஆனால், உன்னுடைய கனவை, உன் ஆசையை…., உன் இயலாமையை அவர்கள் மீது திணிக்கும் போது, திமிறி விடுவார்கள்….. ஜாக்கிரதை….

மேகலா : அப்போ, பிள்ளைகளைப் பற்றி நமக்கென்று ஒரு கனவு இருக்கவே கூடாதா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : மேகலா…., கீதையில், கடமையைச் செய்…, பலனை எதிர்பாராதே… என்ற வாசகத்தின் அர்த்தம் உனக்குத் தெரியுமா…… குழந்தையை வளர்க்க வேண்டிய கடமை உன்னிடம் உள்ளது. மூன்று வயது வரை குழந்தையை புதையலாய்க் கொண்டாடு…. எட்டு வயது வரைக்கும், டீச்சராய் இருந்து கல்வியைப் புகட்டு…. 14 வயது வரையிலும், கண்டிப்பும் அரவணைப்பும் கலந்த போலீசாய் கண்காணித்து வழிநடத்து. அதன் பிறகும் 20 வயது வரைக்குமே, ஒரு நண்பன் என்ற கயிறைக் கையில் பிடித்துக் கொண்டு, சகல விஷயங்களையும் அவனோடு share பண்ணிப் பார். அவன் உன்னை விட்டு விலகாமல் இருப்பான். உலக விஷயத்திலிருந்து, திரைப்பட விமர்சனம் வரை உன்னிடம் discuss பண்ண விரும்புவான். இன்றைய குழந்தைகள், பெரியோர்களை மதிப்பது என்பதே, free-யாகப் பேசுவதுதான். இந்தக் கடமைகளை நீ correct-ஆகச் செய்து விட்டால், அதற்கான பலனை நீ எதிர்பார்க்கவே வேண்டாம்; கட்டாயம் தன்னாலே நடக்கும்…. நீ நம்புகிறாயா…., இல்லையா……

மேகலா : ஐயோ கிருஷ்ணா….. இருண்ட பிரதேசத்தில், சூரியன் வெளிச்சம் போட்டுக் காட்டியது போல இத்தனை தெளிவாக நீ எடுத்துரைக்கும் போது, ‘நம்புகிறாயா’ என்று கேட்டு என்னை வருத்தாதே கிருஷ்ணா….. நீ உண்மையின் விளக்கம்… எனக்குத் தெளிவாய் புரியுது…. இருந்தாலும், வாழ்க்கையில் மனிதர்களுக்கு தன் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய தடுமாற்றம் ஒரு தொடர்கதையாகத்தான் போகிறது….

கிருஷ்ணர் : ஐயய்..யய்…யே…. இந்த அம்மாமர்கள் பிள்ளைகளைப் பற்றி எதையாவது கற்பனை பண்ணிக் கொண்டு தடுமாறுவதெ பொழப்பாகப் போச்சு…. ஏன் மேகலா…..? உன்னை ஒன்று கேட்கிறேன்…. ஏதாவது வேலை காரணமாக வைத்து செயல்பட்டால் நீ என்ன செய்வாய்…?

மேகலா : முதலில், target-ஐ achieve பண்ண திட்டம் போடுவேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நீ திட்டம் போடுவது மாதிரியே செயல்படும் போது, எந்தத் தடங்கலும் இல்லாமல் target-ஐ achieve பண்ணீருவாயா….

மேகலா : அது எப்படி கிருஷ்ணா? நம்முடைய முயற்சி, நமக்கு உதவுபவர்கள் துணை இருந்தாலும் கூட, தெய்வத்தின் அனுக்கிரஹமும் தேவையில்லையா…. எல்லாம் கூடி வந்தாலும், தடங்கல்களும் வரத்தானே செய்யும் கிருஷ்ணா…. தடையெல்லாம் தாண்டி வந்தாத்தானே அது achievement….

கிருஷ்ணர் : அது எப்படீ…. கிருஷ்ணான்னு நீட்டி முழக்கி lecture அடிக்கிறயே…. உன்னுடைய target-ஐ அடைவதற்கு, தடங்கல்களைத் தாண்டி வரத் தெரிந்த உனக்கு, பிள்ளைகளின் ‘நானாக சிந்தித்து’, ‘நானாக முடிவெடுத்து’, ‘நானாக வளர்வேன்’ என்று பேசுவதும், ஒரு வகையில், உன் கடமையில் நீ சந்திக்கும் பிரச்னைதான். விட்டுப் பிடித்து, பிள்ளைகளுக்கு விளங்க வைக்கத் தெரியணும். அல்லது, பிள்ளைகள், ‘நானாக வளர்வேன்’ என்று எதை நினைத்துப் பேசுகிறார்கள் என்று தெரிஞ்சிக்கணும்; எதுக்குத் தடுமாறணும்….

‘எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்,

துணிவே துணையாய் மாறும்’ –

என்ற இந்தப் பாட்டை நீயும் பாடிப் பாரு…. தைரியம் தன்னால் வரும்…. சாதாரண பிரச்னைகளுக்கே, துணிவும், தைரியமும் கடமையைச் சரியாகச் செய்ய வைக்கும் என்னும் போது, ‘பிள்ளைகள் வளர்ப்பு’ என்பது உன் கையில் கிடைத்த, ‘உன் கனவு’, ‘உன் பொக்கிஷம்’…. உனக்குக் கிடைத்த மிகப் பெரிய பொறுப்பு. தடுமாற்றத்தை, பிள்ளைகள் போக்கிலேயே சென்று திசை திருப்பத் தெரிய வேண்டாமா….. கொஞ்சம் positive-ஆக யோசித்துப் பார்….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1