நான், நானாகத்தான் இருப்பேன் - பகுதி 6

மேகலா : பிள்ளைகள் போக்கிலேயே சென்று திசை திருப்பணும்னா, எப்படி கிருஷ்ணா…. ஒரு உதாரணத்துக்கு வைத்துக் கொள்வோம்….. பிள்ளைகள், இன்னைக்கு home work இல்லைன்னு பொய் சொல்லி, விளையாடப் போறாங்கன்னு வச்சுக்குவோம்…. அப்போ, அவங்க போக்கிலேயே எப்படிப் போறது…..

கிருஷ்ணர் : இதப் பாரு மேகலா…. நீ என்ன சின்னப் பிள்ளையா…. ‘home work’ கிடையாதுன்னு பொய் சொன்னா என்ன செய்யிறதுன்னு கேட்பதற்கு…. அம்மா, diary-யைச் check பண்ணுவாங்க, friend கிட்ட phone பண்ணிக் கேப்பாங்கன்னு தெரிஞ்சும் டிமிக்கி குடுக்குற பிள்ளைகளின் முதுகில் ரெண்டு போடு போடத்தான் செய்யணும். நித்திய கடமையைச் செய்யாமல் விட்டா, அம்மா முதுகுல சாத்துவாங்க என்ற பயம் பிள்ளைகளை கடமையை ஒழுங்காகச் செய்ய வைக்கும். எந்தக் காலத்திலும், தண்டனை ஒன்றுதான் மனிதனை தன் கடமையை ஒழுங்காகச் செய்ய வைக்கும்.

மேகலா : பின்னே எதுல, பிள்ளைகளைத் திசை திருப்புவது…?

கிருஷ்ணர் : சரி…… home work எழுதும் பிரச்னையையே எடுத்துக்குவோம்…. இன்று home work இல்லை என்றதும்…., நீயும், ‘சரி’ என்று check பண்ணாமல் விட்டால் என்னாகும்… அப்படியே, மறு நாள் பிள்ளைகள் பொய் சொல்லாமல், ‘நல்ல அம்மா’ என்று சொல்லி, நீ நினைச்சபடி நம்பர்-1 student-ஆ வளருவாங்களா…..

மேகலா : ஐயய்யோ….. நாம check பண்ணாமல் விட்டால், தினந்தோறும் பொய் சொல்ல ஆரம்பித்து விடுவார்களே…. இந்தப் பொய், இன்னொரு விஷயத்திலும் எட்டிப் பார்க்குமே….

கிருஷ்ணர் : ’ஹாங்’, அதுதான்… அதே தான்…. கண்டிப்புடன் வளர்ப்பது என்பது வேறு…. பிள்ளைகளின் மீது உன் கனவையும், உரிமையையும், அவர்களுடைய கனவாகத் திணிப்பது என்பது வேறு…… பிள்ளைகள் basic-ஆ நல்ல பிள்ளைகளே…. சோம்பேறித்தனத்தினால் ஒரு நாள் பொய் சொல்லி தப்பித்து விட்டால், அதுவே அவர்களுடைய தப்பிக்கும் மனோபாவத்தையும், சோம்பேறித்தனத்தையும் வளர்த்து விடும். அப்பத்தான் நீ போலீஸ் மாதிரி, home work இருப்பதை check பண்ணி, ரெண்டு ’தட்டு’ தட்டினால், பிள்ளைகளும் casual-ஆக home work செய்ய ஆரம்பித்து விடுவார்கள். நல்ல நிலங்களில், நாம் ‘கல்வி’ என்ற பயிரை வளர்க்கிறோம்…. அதில், அவ்வப்போது முளைக்கும் சோம்பேறித்தனம், பொய் சொல்லுதல் என்ற களைகளைப் பிடுங்கி எறிந்தால், பயிர் செழிப்பாய் வளரும்….. ஒவ்வொரு பிள்ளைகளுக்குள்ளும், ஒவ்வொரு கனவு இருக்கும்….. அந்தக் கனவு என்ன என்பதைத் தெரிந்து கொள்…. அப்படி எதுவும் ‘கனவு’ என்று பெருசா தெரியவில்லை என்றால்….., நீதான் கனவை விதைக்கணும்….

மேகலா : அவர்களுடைய கனவு என்ன என்பதை எப்படித் தெரிந்து கொள்வது….? நாம எப்படி கனவை விதைப்பது….?

கிருஷ்ணர் : சின்னப் பிள்ளைகளுக்கு, வளரும் காலத்தில் முகத்தில் மீசையை வரைந்து கொண்டு, ‘நான் அப்பா மாதிரி இருக்கேன்’…. என்று சொல்லுவாங்கல்ல…., அந்த மாதிரி சமயங்களில், நீ அவர்களிடம் கேட்டுப் பார்…, ‘நீ என்னவாக ஆகப் போகிற’ என்று…. அந்நேரம் பிள்ளைகள், சுத்தமான வெள்ளை மனதோடு, ‘நான் அப்பா மாதிரி பெரியாளா வந்தவுடன், அப்பா மாதிரியே ‘டாக்டராக’ப் போகிறேன்’ என்று சொல்லும்….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா….. அப்படித்தான் பேசும். பெண் பிள்ளைகள் என்றால், மேலே ‘துப்பட்டா’வைப் போட்டுக் கொண்டு, நான் ‘அம்மா’ மாதிரி வருவேன் என்று சொல்லும்….. பொய்யாக, சுவரை black board ஆக மாற்றி, ஒரு குச்சியைக் கையில் வைத்துக் கொண்டு, டீச்சர் மாதிரி நடித்து விளையாடும்…..

கிருஷ்ணர் : ‘விளையாடுவாங்களா’….. இதுதான் விதைப்பதற்கு ஏற்ற பருவம்…. பிள்ளைகளை உச்சி மோந்து….. ‘நீ டாக்டராகணுமின்னா, நல்லா படிக்கணும்ல…. நல்லா படிச்சி, State first மார்க் எடுத்து, medical college-ல சேர்ந்து, அப்பா மாதிரி பெரிய டாக்டரா ஆகணும்’ என்று, அந்தச் சின்ன வயசுலேயே, பிள்ளைகளுக்கு கனவை விதைக்கணும்…. படிச்சாதான் டாக்டராக முடியும் என்ற உண்மையை ஆழமாக ஊன்ற வேண்டும்….

மேகலா : ஆம்மாம் கிருஷ்ணா… பிள்ளைகள் தங்களை பெரியாளாக நினைத்துக் கொண்டு, அவர்கள் மாதிரி imitate பண்ணும் போது, நாம சொல்வதை ஆழமாகக் கேட்கத்தான் செய்வார்கள்….

கிருஷ்ணர் : இது மட்டுமல்ல மேகலா…. School-ல fancy dress program நடத்துவாங்கல்ல….. அது மாதிரி, உனக்குப் பிடித்த அப்துல் கலாம் மாதிரி hair style பண்ணி ரசிப்பது, …., தலைப்பாகையைக் கட்டி, மீசை வரைந்து, ‘அப்படியே பாரதியார் மாதிரி இருக்கயே….’ என்று கொஞ்சுவது என்பது போல, holidays-ல விளையாடலாம்…. ’அப்படியே அப்துல் கலாம் மாதிரி பெரிய scientist மாதிரியே இருக்கடா’ என்று சொல்லி, ‘அக்னிசிறகுகளை’ interesting ஆகச் சொல்லலாம்….

மேகலா : இப்படித்தான் கிருஷ்ணா, இன்றைய அம்மாக்கள், கிருஷ்ண ஜெயந்திக்கு, கிருஷ்ணர் வேஷம் போட்டு விட்டு, கண்ணனுடைய லீலைகளைச் சொல்லி, பிள்ளைகளைக் கிருஷ்ணராக்கி விடுகிறார்கள் கிருஷ்ணா. பிள்ளையார் சதுர்த்திக்கு மஞ்சள் பிள்ளையாரை பிடிக்கச் செய்து, மிளகால் கண் வைத்து, காது வைத்து, தும்பிக்கை வைத்து, ‘உன் பிள்ளையார் தான் ரொம்ப அம்சமா இருக்காரு செல்லம்’ என்று சொல்லும் போது, அந்தப் பிள்ளைகள் கையில், பிள்ளையார், செல்லப் பிள்ளை போல தவழும் அழகே அழகு கிருஷ்ணா… எனக்கு இப்ப நீ சொல்லும் ‘ரூட்’ தெரிஞ்சி போச்சு கிருஷ்ணா. பிள்ளைகள் மனசில், பக்தியைக் கூட பக்குவமாய் அவங்களுக்குப் புரியும்படிக்குச் சொல்றோமில்லையா…. அதே போல, அவர்களுக்கான கனவை, அவர்களுடைய எதிர்காலத்திப் பற்றிய நம்முடைய ஆசைகளைக் கூட, விளையாட்டுப் போல, சாதனையாளர்களை உதாரணம் சொல்லிச் சொல்லியே சொல்லலாம் போலயே….

கிருஷ்ணர் : புரிஞ்சிருச்சா… இது தான் பிள்ளைகளின் மனதைத் தெளிவாக்கி நம்ம சொல்பேச்சைக் கேட்க வைக்கும் ஒரு யுக்தி….

மேகலா : வேற வழியும் இருக்கா கிருஷ்ணா…..

(தொடரும்)

(அடுத்த பகுதியுடன் நிறைவு பெறும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1