கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 1
கிருஷ்ணர் : சரி…., என்ன தலைப்பில் பேசலாம்…., ஏதாவது தீர்மானித்து வைத்திருக்கிறாயா…..
மேகலா : ஏதாவது கலகலப்பான தலைப்பு எடுக்கலாமான்னு யோசிக்கிறேன் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : யோசித்து நல்ல தலைப்பா சொல்லு மேகலா
மேகலா : கிருஷ்ணா…., இன்று ’கலாட்டா கல்யாணம்’ படம் பார்த்தேன் கிருஷ்ணா…, நாம, ‘கல்யாணங்களும், கலாட்டாக்களும்’ என்று பேசலாமா…..
கிருஷ்ணர் : ‘மீனாட்சி திருக்கல்யாணம்’ நினைவுகளோடு, ‘கல்யாணங்களும், கலாட்டாக்களும்’ என்று பேசப் போகிறோமா….. O.K…. Super…. Super…. ஆமாம்…., உனக்கு இந்த தலைப்பில் எழுத வேண்டும் என்று ஏன் தோணுச்சி மேகலா….?
மேகலா : கிருஷ்ணா….. முதலில் உனக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன் கிருஷ்ணா…. ‘மீனாட்சி திருக்கல்யாண’ நிகழ்ச்சி நடந்ததைப் பற்றி உன்னிடம் விவரித்துச் சொல்லிக் கொண்டிருந்ததை எனக்கு நினைவுபடுத்தி, ‘கல்யாணங்களும், கலாட்டாக்களும்’ என்ற தலைப்பையும் சொல்ல ஆரம்பித்திருக்கிறாய் என்று ஞாபகப்படுத்தி இருக்கிறாய்…. அதுவே, நீ என்னை வாழ்த்தியதாக உணர்கிறேன் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : சரி…., சிறப்பாக ஆரம்பித்திருக்கிறாய்…. ஏன் மேகலா…., ‘கல்யாணம்’… இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்….
மேகலா : தாய் தந்தையரின் கூட்டுக்குள் சந்தோஷமாய் குடியிருந்த இரண்டு பறைவைகள்…, சுதந்திரமாய் பறக்கப் போகிறோம் என்று நினைத்து…., கண்ணுக்குத் தெரியாத காதல் வலையில் சிக்கிக் கொண்டு…, ‘தடுமாறுது’; ‘தத்தளிக்குது’; புதுசாக ஒரு கூடு கட்டிக் குடி போகுது…., அதுதான் கல்யாணம்……
கிருஷ்ணர் : ஓஹ்ஹோ… அப்போ, ‘கலாட்டா’ என்பது…..
மேகலா : அதுவா….. உலகத்தில் எத்தனையோ கல்யாணங்கள் நடக்கின்றன….. ‘சம்பிரதாயக் கல்யாணம்’…., arranged marriage’….., ‘love marriage’…., ‘முறையான கல்யாணம்’…. ‘அவசரக் கல்யாணம்’….., இப்படி எத்தனை கல்யாணம் நடக்குது…. அத்தனை கல்யாணங்களும்….., நடத்தி வைப்பவர் மனவிருப்பப்படி நடக்கிறது…., சில, தடபுடலாய் நடக்கிறது…., சில, simple-ஆக நடக்கிறது…., சில, கோயிலில் வைத்து கல்யாணம்…., சில, registrar office-ல் நடக்கிறது…. அல்லவா….,
கிருஷ்ணர் : ஓஹ்…ஹோ…ஹோ… இந்த கல்யாணம் எப்படி நடைபெறுகிறது…., என்று பேசப் போகிறோமா….. எனக்கு ஒரு கேள்வி இருக்கு மேகலா…. ‘arranged marriage’ அல்லது, பொண்ணைப் பார்த்தவுடன், இந்தப் பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என்று பையன் அடம் பிடிக்கும் போது…, நடக்கும் கலாட்டாக்களை கொஞ்சம் சொல், பார்க்கலாம்….
மேகலா : கிருஷ்ணா…, பொதுவாக… arranged marriage-ஓ…., love marriage-ஓ…., பசங்க முதன் முதலில் பொண்ணைப் பார்க்கும் போது…., அந்தப் பொண்ணை impress பண்ண நினைக்கிறான். Love marriage-ல இது கொஞ்சம் special-ஆகக் கூட இருக்கலாம்…. ஆனால், கட்டாயம் தன்னைப் பற்றிய image பொண்ணோட மனதில் சிறப்பாக இருக்கணும்னு விரும்புகிறான். கிராமப் புறங்களில் அதற்காக, பெரிய ‘இளவட்டக் கல்லை’க் கூட ‘hero’ மாதிரி தூக்குவது கூட உண்டு…. ரேஸில் ஜெயிப்பது…., காளையை அடக்குவது…., ‘man of the match’ என்று பேரெடுப்பது….., style-ஆக hair-ஐ சிலுப்பிக் கொள்வது…., bike-ல் round கட்டுவது…., இப்படியான வீர விளையாட்டுகளாகட்டும், அலப்பறைகளாகட்டும்…., சொல்லி மாளாது. இப்படி impress பண்ணுவதில் ஆரம்பித்து, இந்தக் கல்யாணங்கள், சின்னச் சின்ன கலாட்டாக்களை சந்தித்து, பின் கல்யாணத்தில் முடிகிறது. இதில் ஒரு சுவாரஸ்யம் என்ன தெரியுமா கிருஷ்ணா…. இதுதான் பொண்ணு மாப்பிள்ளை என்று முடிவானதும், பையனும் பொண்ணும் phone-ல் அடிக்கும் லூட்டியிருக்கிறதே…., அடேயப்பா, இந்தக் கலாட்டாவையெல்லாம் பெற்றோர்கள் ரொம்பப் பெருமையாகப் பார்த்து மகிழ்ந்து போகும் கதை வேறு….
கிருஷ்ணர் : Oh! பேசினால், நிறைய கலாட்டா வெளிவரும் போலிருக்கிறதே…. எட்டு வகை கல்யாணங்கள் இருப்பதாக ‘மகாபாரதம்’ சொல்லுகிறது…… உனக்குத் தெரிந்த கல்யாணங்களை சொல்லு பார்ப்போம்…
மேகலா : பொண்ணும் பையனும் பார்த்து, விரும்பி, பெற்றோர்கள் அறியாமல், இயற்கை வாழ்த்த, செய்து கொள்ளும் ‘கந்தர்வ விவாஹம்’. மணமகனும், மணமகளும் தர்மத்தின் வழியில் செல்லட்டும் என்று நினைத்து பெண்ணைக் கொடுப்பது, ‘ப்ராஜாபத்ய விவாஹம்’. பெண்ணின் தகப்பனாருக்கு, இரண்டு பசுக்களைக் கொடுத்து, பெண்ணை விவாஹம் செய்து கொள்ளுதல், ‘ஆர்ஷ விவாஹம்’. பெருமளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, பையனுக்கு திருமணம் செய்து கொடுப்பது, ‘அசுர விவாஹம்’. குடிமயக்கத்தில் பெண்ணைத் தூக்கிக் கொண்டு போய் கல்யாணம் செய்வது, ‘பைசாச விவாஹம்’. பலாத்காரமாகப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு போய் கல்யாணம் செய்வது, ‘ராட்சஸ விவாஹம்’…. என்று ஏகப்பட்ட விவாஹங்கள் சொல்லப்பட்டிருக்கிறது கிருஷ்ணா….
கிருஷ்ணர் : இவையெல்லாம், இப்படித்தான் நடக்கணும்னு சாஸ்திரப்படி வகுக்கப்பட்டதா…..
மேகலா : அப்படியெல்லாம் கிடையாது கிருஷ்ணா…. மனுஷன் தான் ஆசைப்பட்டு ஒரு பெண்ணை மணப்பதை அனுபவஸ்தர்கள் பதிவு பண்ணியிருக்கிறார்கள். நம் உறவுகளிடையே ஒரு கல்யாணம் நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்வோம். சிறிது நாளில் அந்தக் கல்யாணம் ஒரு உதாரணமாகி, வரலாறாகிப் போகிறது. ‘இது இப்படி நடந்தது’…, ‘இப்படியும் நடக்கலாம்’ என்று அனுபவஸ்தர்கள் சொல்லுகிறார்கள். அடுத்த தலைமுறையினர், அதை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்கிறார்கள். எந்தக் கல்யாணமும், ‘இது தான் முறை’…., ‘இப்படித்தான் கல்யாணம் நடக்க வேண்டும்’ என்று எழுதி வைக்கப்பட்டதல்ல கிருஷ்ணா….. எனக்குத் தெரிந்து, கல்யாணம் என்பது, அவரவர் மனவிருப்பப்படி நடத்துவது. ‘மாப்பிள்ளை அழைப்பு’; ‘நிச்சயதார்த்தம்’; ‘பூச்சூடல்’; ‘காசி யாத்திரை’; ‘ஊஞ்சல் ஆட்டுதல்’; ‘பட்டினப் பிரவேசம்’; ‘ஜானவாசம்’; ‘மருதாணி இடுதல்’; ‘கோலம் போடுதல்’; ‘வரவேற்பு’…, என்று ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பேர் சொல்லி, இந்தக் கல்யாணத்தை அவரவர் விருப்பப்படி, உறவுகளை அழைத்து, ஊரைக் கூட்டி, மணக்க மணக்க சாப்பாடு போட்டு, மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்….. இந்த மகிழ்ச்சியை சிலர் சம்பிரதாயமாக்குகிறார்கள்…., சிலர் கட்டாயமாக்குகிறார்கள்…., ஆனாலும், கொண்டாடுகிறார்கள். இதற்கு நடுவே நடக்கும் விஷயங்கள், கலாட்டாக்களாக, நம்மை ரசிக்க வைக்கிறது…. கல்யாணம் முடிந்தும் ரொம்ப நாளைக்கு, இனிய நினைவுகளாக நெஞ்சிலேயே நின்று விடுகிறது…..
கிருஷ்ணர் : Oh! இந்தக் கல்யாணத்தைப் பற்றிப் பேசுவதைக் காட்டிலும், கலாட்டாக்களைப் பற்றிப் பேசுவதே சுவாரஸ்யமாக இருக்கும் போலயே…. நீ சொன்ன மாதிரி, கல்யாண நிகழ்ச்சிகளை பேர் சொல்லி சொல்லும் போது ரொம்ப interesting ஆக இருக்கிறது மேகலா….. சரி…., முதலில் நீ ரசித்த சுவாரஸ்யமான கலாட்டாக்களை சொல்லு மேகலா…..
(தொடரும்)
Comments
Post a Comment