கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 5

மேகலா : நிறைய கல்யாணங்களில், சடங்குகள், சம்பிரதாயங்கள் இல்லாமல், சும்மா relaxed ஆக இருக்கும் போது,…. அதாவது, கல்யாணம் முடிந்த பிறகோ, அல்லது கல்யாணத்திற்கு மறுநாளோ…., fun games நடத்துவார்கள். இதுவும், ஏகதேசம், பாரதம் முழுக்க எல்லா States-லயும், விதவிதமாக நடத்துகிறார்கள் கிருஷ்ணா…. அதில், ஒரு கலாட்டா என்னவென்றால், North India கல்யாணங்களில், பெண் வீட்டுக்காரர்கள், மாப்பிள்ளையின் செருப்பை ஒளித்து வைத்து விடுவார்களாம். அங்கே இங்கே என்று தேடி, பல கலாட்டாக்களைக் கடந்து செருப்பு கிடைக்கும் போல…. அதிலும், ‘உங்க செருப்பைக் கொடுத்தா என்ன தருவீங்க’ என்று இடைத்தரகர் மாதிரி பேரம் பேசுவாங்க போல…..

கிருஷ்ணர் : வாரே…., வா…., அப்போ…. ‘கல்யாண வீடு என்றால், பொண்ணு மாப்பிள்ளைக்கு மட்டுமல்ல…, சுற்றத்தாருக்கும் கொண்டாட்டம் தான்…..

மேகலா : பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் thrilling….. பொண்ணைப் பெத்தவங்களுக்கும், பையனைப் பெத்தவங்களுக்கும், கல்யாணம் நல்லபடியா முடியணுமே என்ற பரபரப்பு….. கொண்டாட்டமெல்லாம் friends-க்கும், உறவினர்களுக்கும் தான்….

கிருஷ்ணர் : சரி…, உங்க பக்கத்துல, ‘நலங்கு’ என்ற கலாட்டாலாம் கிடையாதா…..

மேகலா : ஒரு காலத்துல, எங்க பக்கத்துக் கல்யாணங்கள்ள, fun games, dance இது எதுவுமே கிடையாது கிருஷ்ணா…. மாப்பிள்ளை வரவேற்பு, traditional சீர் வரிசை…., அதாவது, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு….., கொஞ்சம் பணக்காரங்கண்ணா, பழங்களில் மூன்று வகை, காரத்தில் இரண்டு, இனிப்பினில் இரண்டு என்ற அளவில்தான் இருக்கும். இது கலாட்டாவா இருக்காது; சம்பிரதாயமாக இருக்கும்…. முதன் முதலில், இந்த tradition என்ற வேலியை உடைத்தது எங்க அப்பாதான். முதலில் எங்க பெரிய அக்கா திருமணத்திற்கு, ஈ. வே. ரா., அமைச்சர் கக்கன் என்று அழைத்து ஒரு மாநாடு கலாட்டாவையே மண்டபத்திற்கு கொண்டு வந்தார். இது கொஞ்சம் conference மாதிரி, formal-ஆக இருப்பது மாதிரி அவருக்குப் பட்டது போல….., என் கல்யாணத்திற்கு, entertainment-ஆக சினிமா பாட்டுக் கச்சேரியை வரவழைத்து, தூள் கிளப்பிட்டாரு. அதன் பிறகு, ஊருக்குள், தங்கள் வீட்டுக் கல்யாணத்தை எப்படி நடத்த வேண்டும் என்று design, design-ஆக யோசிக்க ஆரம்பித்து விட்டனர். சிலர், மாப்பிள்ளையை யானை மீது ஏற்றி, அழகு பார்த்தனர்…., சிலர், பொண்ணுக்கு car-ஐப் பரிசளித்து, ஊருக்குள் பலருக்கு, கலவரத்தை ஏற்படுத்தினர்……

கிருஷ்ணர் : கலவரமா…..

மேகலா : ‘ஆமா’…. ‘அவனெல்லாம்’ car present பண்ணுனா…., நம்மிடமிருந்து, மாப்பிள்ளையைப் பெற்றவர்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ’ என்ற கலவரம் தான்….

கிருஷ்ணர் : போச்சுடா…..

மேகலா : இது தவிர, எந்தெந்த கல்யாணத்தில் என்னென்ன கலாட்டாவெல்லாம் செய்கிறார்கள் என்று கவனித்து வந்து, இங்கு அரங்கேற்றி விடுவார்கள். அப்படி வந்ததுதான் இந்த ’நலங்கு’ம். குடத்துக்குள் மோதிரம் போட்டு தேடச் செய்வது, தேங்காயை உருட்டி விளையாடுவது…. என்ற ஐயர் வீட்டு கலாட்டா, எங்க வீடுகளிலும் நடக்க ஆரம்பித்தது. தலைக்கு மேலே அப்பளத்தை தட்டி உடைப்பது மட்டும் இன்னும் வரவில்லை…. அதிலும், குடத்துக்குள் மோதிரம் போட்டு விட்டு, பொண்ணையும் மாப்பிள்ளையையும் தேடச் சொல்லி, உறவினர்களெல்லாம் சுற்றியமர்ந்து பண்ணும் வேடிக்கை இருக்கிறதே…., அடேயப்பா…., அதிலும் ஷீத்தல் மாதிரி பெண் பிள்ளைகள் கூட விசிலடிச்சு பண்ணும் ரகளையில், கல்யாண வீடு, ‘thousand wala’ சரவெடி வெடித்தது மாதிரி அதிரும் கிருஷ்ணா…. இதோட சேர்த்து, பொண்ணையும் பையனையும் வைத்தே பல காமெடி fun நடத்துவார்கள். இதெல்லாம் கல்யாண மேடையிலேயே நடக்கும். எல்லாக் கல்யாணங்களிலும், பொண்ணுக்கும் பையனுக்கும், பாலும் பழமும் கொடுப்பார்கள் இல்லையா…. இப்போ புதுசா ஒண்ணும் சேர்த்து செய்யிறாங்க…. அது என்னண்ணு சொல்லு பார்ப்போம்…..

கிருஷ்ணர் பாலும் பழமும் கொடுப்பதே, பொண்ணுக்கும் பையனுக்கும் உண்டான தயக்கம், nervousness – இதெல்லாம் குறைப்பதற்காகத்தான். இதுதான் நம்ம ஆளு என்று இருவருக்கும் தோணணும். இதற்காக, வேறென்ன புதுசா செய்யப் போறாங்க….. Chocolate ஊட்டி விடுவாங்களோ….

மேகலா : அதெல்லாம் இல்ல கிருஷ்ணா…. நம்ம ஆளுக international level-க்கு யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க கிருஷ்ணா…. ‘Cake’ வெட்டும் கலாச்சாரம் எங்க பக்கத்துக் கல்யாணங்கள்ள மேடையேறியிருக்கு…. Cake வெட்டி, இருவரும் வாயில் ஊட்டுவது மட்டுமல்ல…., cream-ஐ இருவரும் கன்னத்திலும் பூசிக் கொள்ளும் கலாச்சாரம்…. ரொம்பப்… புதுசு, கிருஷ்ணா…. அந்த சமயத்தில் மேடையில், வெடி வெடித்து, papers-ஐ பறக்க விட்டு, சோப்பு நுரையை மேகமாக மிதக்க விட்டு…., இந்த நண்பர்கள் செய்யும்’அட்டூழியங்கள்’ கொஞ்ச நேரத்திற்கு…. வீட்டுப் பெரியவங்க இந்த கலாட்டாக்களை கண்டும் காணாமல் விட்டு விடுவார்கள்….

கிருஷ்ணர் : அந்த cake-ஐயாவது சாப்பிடுவார்களா….

மேகலா : எங்க கிருஷ்ணா…. மேடையிலிருப்போரும், ஒருவர் கன்னத்தில் ஒருவர் பூசி, பாதி கீழே சிதறி…., விரயம் பண்ணுவதுதான், இங்கே நகைச்சுவை கலாட்டா….

கிருஷ்ணர் : நீ சொல்லும் கலாட்டாக்களெல்லாம் ஏகதேசம் எல்லாக் கல்யாணங்களிலும் நீ பார்க்கக் கூடியதுதான்…. உனக்குத் தெரிந்து வித்தியாசமான சடங்குகளைப் பற்றிச் சொல்லேன் மேகலா…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1