அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 4
மேகலா : கடலளவு ஞானத்தைக் கொடுக்கும் technology தலைமுறையினரை, ஒன்பதாம் வாய்ப்பாடு சொல்லச் சொல்லு கிருஷ்ணா…. அந்தக் காலங்களில், school-க்குப் போனவுடனேயே, கடவுள் வாழ்த்து பாடி முடிந்ததும், மூன்றாம் வாய்ப்பாடிலிருந்து ஒன்பதாம் வாய்ப்பாடு வரை சொல்லியாக வேண்டும்… தினந்தோறும் சொல்லுவதால், கணக்குப் பாடத்தில் வாய்ப்பாடை மறக்காமல் உபயோகப்படுத்த முடியும்… அந்தக் காலங்களில் கணக்கு exam-க்கு, 20 மார்க்குக்கு மனக்கணக்கு exam ஒன்று நடக்கும். அந்தக் கணக்கு செய்வதற்கு இந்த வாய்ப்பாடு practice-தான் நமக்கு கை கொடுக்கும். இன்று கடைக்குப் போய் சாமான் வாங்கினால், bill-ஐ சரி பார்க்க, calculator-ஐத்தான் இன்றைய தலைமுறையினர் தேடுகிறார்கள்….. இன்னும், என் மாமனார், அப்பா காலங்களில் 1/16, 1/8 வாய்ப்பாடுகளை மனப்பாடமாகச் சொல்லுவார்கள். அதனால், மனதிலேயே அத்தனை கணக்கு வழக்குகளையும் அவர்களால் எளிதாக சரி பார்க்க முடிந்தது. இது ஞாபக சக்தி திறனையும் வளர்த்தது. இன்று எது எடுத்தாலும், pen drive-ல் ஏற்றிக் கொள்வது…., அல்லது phone-ல் ஏற்றிக் கொள்வது…., ஞாபக சக்திக்கும் இன்றைய தலைமுறையினருக்கும் சம்பந்தமே கிடையாது….
கிருஷ்ணர் : ஏன் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நமக்காக ஒரு கருவி எதையெதை store பண்ண முடியுமோ, அத்தனையையும், ஆதாரத்துடனும், உண்மை நிலையாகவும் store பண்ணும் பொழுது, நமக்கு ஏன் அந்த சிரமம்? ஒரு phone-ல், calculation மட்டுமல்ல, ஆதார் card, covid certificate, வீட்டுப் பத்திர நகல், E. B. bill, shares, insurance பற்றின விவரங்கள் எல்லாவற்றையும் store பண்ண முடியும் போது, நாம் எந்தத் தயக்கமும் இல்லாமல், எந்த சிரமமும் இல்லாமல், ஞாபக சக்தி கூட தேவையும் இல்லாமல், நம்மால் easy-யாக இயங்க முடியுமே. நமக்காக technology இத்தனை சௌகர்யங்களை கொடுக்கும் போது, 1/16 வாய்ப்பாட்டை ஏன் கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்ய வேண்டும்…. நாமே செய்ய வேண்டிய பல வேலைகள் நமக்காக காத்திருக்கும் போது, சில ஞாபக சக்திகளை phone-தான் செய்யட்டுமே…. இந்த store பண்ணி வைக்கக் கூடிய technology அறிவை, இந்தக் காலத்து கல்விமுறைதானே கற்றுக் கொடுத்தது…
மேகலா : (முணுமுணுப்பாக) ஒரு virus வந்தால், store பண்ணியது எல்லாம் அழிந்து விடும். அந்தக் கால ஞாபக சக்திக்கு, இப்படிப்பட்ட பிரச்னைகளே கிடையாது…..
கிருஷ்ணர் : ம்….. என்ன சொன்ன…. சொல்வதை open-ஆகச் சொல்லம்மா…..
மேகலா : அது வேற ஒண்ணுமில்ல கிருஷ்ணா…. அந்தக் காலங்களில், பிள்ளைகளுக்கு ஒரு பாடத்தில் சந்தேகம் வந்தால்…, எந்த நேரமானாலும்…., பள்ளி முடிந்து ஆசிரியர் வீட்டுக்குச் சென்றாலும்…., வீட்டுக்குச் சென்றாவது சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். ஆசிரியரும், அலுப்பும் சலிப்பும் இல்லாமல் பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பார். ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமிடையில் இருந்த உறவு ரொம்பப் புனிதமானது கிருஷ்ணா… இன்னும், புராண காலங்களில், ஒரு மாணவன் கல்வி கற்பதற்காக ஆசிரியரின் ஆஸ்ரமத்திற்கே வந்து, பணிந்து, பணிவிடை செய்து கற்றுக் கொண்டான் என்று படித்திருக்கிறோம் கிருஷ்ணா… இந்தக் காலங்களில், மாணவர்களிடமிருந்து எந்தப் புகாரும் வந்து விடக் கூடாது என்று ஆசிரியர்தான் பயப்பட வேண்டியிருக்கிறது. நம்முடைய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் A. P. J. அப்துல் கலாம் ஐயா அவர்கள், ஜனாதிபதி ஆன பிறகு, தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். திண்டுக்கல்லில் வசித்த தன்னுடைய ஆசிரியரைக் காண நேரில் சென்று வணங்கினார். ஆசிரியர் சொன்னார், ‘நீங்கள் கூப்பிட்டனுப்பினால் நானே வந்திருப்பேனே’ என்றதற்கு, நம்முடைய பெருமை மிகு ஜனாதிபதி சொன்னது இதுதான் கிருஷ்ணா….. ‘எந்தக் காலத்திலும், மாணவர்கள்தான் ஆசிரியரைக் காணச் செல்ல வேண்டும்’ என்று சொல்லி வணங்கினார்…. இது உனக்கும் தெரியும்தானே….
கிருஷ்ணர் : இப்ப என்ன சொல்ல வர்ற…. இந்தக் கால மாணவர்கள், ஆசிரியர்களிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டு நடப்பதில்லை என்கிறாயா… நீதான் என்னிடம் சொல்லியிருக்கிறாய்…., கார்த்தியும், ஆதியும், ‘on-line class’ attend பண்ணும் போது, நாம cross பண்ணினாக் கூட, வாயில் விரலை வைத்து ‘உஸ்’ என்கிறார்கள். அவங்க class teacher சொல்லுவதை, ‘yes madam’ என்று பவ்யமாகக் கேட்கிறார்கள்… இந்த செயல், ஆசிரியருக்குக் கொடுக்கும் மரியாதை இல்லையா… எந்தக் காலத்திலும் ஆசிரியருக்கு மதிப்பு கொடுத்தவர்களும் உண்டு…, ஆசிரியரை மீறி நடந்தவர்களும் உண்டு…. நீ பல முறை சொல்லக் கேட்டிருக்கிறேன்…. +2 result வரும் போது, ஒரு student-ஐக் காட்டிலும்…, அவனுடைய பெற்றோரைக் காட்டிலும் ஒரு ஆசிரியர் தான், ‘அவன் நிச்சயம் 200/200 வாங்குவான்…., state first எடுப்பான்’ என்று நம்பிக்கை வைத்திருப்பார்….. ஒரு மாணவனுடைய திறமையில், வளர்ச்சியில், எந்தக் காலத்திலும் ஆசிரியர்களின் அக்கறை புனிதமானது தான். தன்னுடைய மாணவன் மீது அக்கறை கொண்ட அந்தக் காலத்து ஆசிரியர் ஒருவரைப் பற்றிச் சொல்லு மேகலா….
(தொடரும்)
Comments
Post a Comment