வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 14

மேகலா : எங்களின் தளர்ச்சியைப் பார்த்து, ஒருவர் ஹரியிடம் ஏதோ விசாரித்தார். அவன் கூட, ‘auto’ கிடைக்குமோ என்று எதிர்பார்த்தான். ஆனால், அவர், ‘ஒரு நபரை’ சுமந்து செல்லும் இரு சக்கர வாகன ஓட்டி போல…

கிருஷ்ணர் : Oh! ’ஜானகி ஜூலா’ சமீபத்தில் நிற்கிறீர்கள்…

மேகலா : எங்களுக்கிருந்த மனக்குழப்பத்தில், விசாரித்தவரைத் தவிர்த்து விட்டு, ‘அம்மா, ஜானகி ஜூலா சென்று நடந்து, அக்கரைக்குச் செல்லணும். அங்குதான் taxi இருக்கிறது. நடப்போமா…’ என்றான். மிகவும் மெலிந்த குரலில், ‘ஹும்’ என்று முனகினேன்….

கிருஷ்ணர் : ஐயோ பாவம்…. இன்னும் கொஞ்ச தூரம் தான்… நடந்து விடலாம்….

மேகலா : நடக்க பயப்படலாம் இல்ல கிருஷ்ணா… ஆனா, tired ஆக இருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக நாங்களும் நடந்து, ‘ஜானகி ஜூலா’வுக்கு வந்து விட்டோம் கிருஷ்ணா. .. நம்முடைய தொழில்நுட்ப வல்லுனர்கள், அந்தரத்தில் பந்தல் கட்டி, அதில் நின்று, ஆகாய கங்கையை, பூலோக கங்கையாகப் பார்க்க வழி செய்திருக்கிறார்கள். இதில் என்ன ஒரு கஷ்டம் என்றால், ‘இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்ல 2 கி. மீ தூரம் நடக்கணும்… ஷீத்தல் அப்பாவோட phone, எச்சரிக்க ஆரம்பித்து விட்டது…

கிருஷ்ணர் : என்னன்னு…

மேகலா : ’உன் வயசுக்கு, தேவைக்கு அதிகமாக நடந்துட்ட’ என்று….

கிருஷ்ணர் : இப்படியெல்லாம் கூட எச்சரிக்குமா….

மேகலா : ஆம்மாம் கிருஷ்ணா… என்ன எச்சரித்தால் என்ன…. அந்த இரவு நேரத்தில், மின்னொளி விளக்கில், பாரத நாட்டின் தொழில்நுட்ப வல்லுனர்களின் திறமையில், சலசலத்து வரும் கங்கையை, வெள்ளிக் கொலுசு கிணுகிணுக்க ஓடி வரும் வன தேவதையாய் பார்க்கும் போது, நம் அசதியையும் மீறி அற்புதமாக இருந்தது. ‘லக்ஷ்மண் ஜூலா’ 100 வருட பழசு… அதனால், மக்கள் ஒருவர் மீது ஒருவர் மோதி விடுவது போல என்று கூட்டம் சென்றது. ஆனால், ‘ஜானகி ஜூலா’ நன்றாக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. போவதற்கு ஒரு வழி…, வருவதற்கு ஒரு வழி…, நடுவில் இரு சக்கர வாகனத்திற்கு என்று….. களைப்புடன் சென்றாலும், சுலபமாகச் செல்லும்படி இருந்தது… மெதுவாக நடந்து ஜானகி ஜூலாவைக் கடந்த பின்,‘ ’dinner-ஐ முடித்து விட்டு, room-க்குச் செல்லலாம்மா… அதற்கு முன், rafting செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்’ என்று ஹரி சொன்னவுடன் கார்த்தி குதித்து கும்மாளமிட்டான்… Taxi-யின் அருகில் வந்து விட்டோம். அவரிடம், rafting எப்படிப் போகலாம் என்று ஹரி கேட்டவுடன், அவர் ஒரு taxi driver-ஐ விசாரித்து வைத்திருக்கிறார். அவர், ’காலையில் நாங்களே வந்து pick-up பண்ணிக் கொள்கிறோம்… வயதானவர்களும், குழந்தைகளும் வர வேண்டாம்’ என்று சொல்ல, வயதானவர் கணக்குக்கு நானும், ஷீத்தல் அப்பாவுமாக, சின்னப்பிள்ளை கணக்குக்கு ஆதியும் இந்த trip-புக்கு reject பண்ணப்பட்டோம்…. அவர்களுடைய இந்தப் பயணம் உறுதிப்படுத்தப்பட்ட சந்தோஷத்தில், கார்த்தி தனக்கு pizza தான் வேண்டும் என்று கேட்டான்…. ’எங்கேயும், K. F. C -யோ, McDonalds-ஓ, Pizza Hut-ஓ இல்லாத போது, நீ எங்கடா pizza சுடுவதைப் பார்த்தாய்’ என்று ஹரி அலுப்போடு கேட்க, எங்களை, ‘மெட்ராஸ் கபே’க்கு முன்னாடி driver, dinner-க்கு இறக்கி விட்டார். அவன், அந்தக் கடையின் எதிரில் ஒருவர் pizza சுடுவதைக் கை காட்டி, ‘இதோ இங்க இருக்குல்ல’ என்றான். ‘எப்புட்ரா இருக்கும்’ என்று அலுப்போடு சொன்ன ஹரி, எங்களை மெட்ராஸ் கபேயில் order பண்ணி சாப்பிடச் சொல்லி விட்டு, ‘இருங்க, இவனுக்கு, pizza வாங்கி சாப்பிடச் சொல்லி விட்டு வருகிறேன்’ என்று சொல்லி, கார்த்தியை அழைத்துச் சென்றான்…..

கிருஷ்ணர் : ஹரி, சம்சாரி…, நீ என்னென்ன சாப்பிட்டன்னு சொல்லு…. ‘இட்லி, ‘பூரி’, ‘பொங்கல்’ என்று வெளுத்துக் கட்டுனயா….

மேகலா : ஐயோ…., எனக்கு tired ஆக இருந்ததே தவிர…, பசியெல்லாம் இல்ல கிருஷ்ணா… ஆனால், என்னவோ தோசையும், சாம்பாரும் நாவிற்கு சுவையாகத்தான் இருந்தது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : சரியான சாப்பாட்டு ராமி….. கார்த்தி pizza சாப்பிட்டானா….

மேகலா : ரோட்டுக்கடை பீட்சான்னாலும் ரொம்ப டேஸ்டா இருந்ததுன்னு, நாக்கைச் சப்புக்கொட்டி சொன்னான் கிருஷ்ணா…. நேரமும்…, இரவு 9 மணியானதால், இனி ரூமுக்குத் திரும்பி rest எடுக்கலாம் என்று ஹரி சொன்னான்… மேலும், ’நாளை எங்கள் group, ‘rafting’ செல்ல இருக்கிறோம்… காலை 8 மணிக்கெல்லாம் எங்களை taxi, pick-up பண்ணி சென்று விடும்; ஆதி உங்களோடு இருப்பான்…. நீங்க இங்க உள்ள கடைகளுக்கு shopping சென்று, நீங்கள் bag கேட்டீங்கல்ல…, அதை வாங்குகிறீர்களா’ என்று என்னிடம் கேட்டான்…..

கிருஷ்ணர் : Bag கேட்டயா…. என்னத்துக்கு….

மேகலா : நாங்கள் ரிஷிகேஷ் வீதிகளைக் கடந்து செல்லும் போது, ஆங்காங்கே bag கடைகள், artificial jewellery கடைகள் இருக்கும். அங்கு தொங்கும் bags-ஐப் பார்த்தவுடன், ’ஹரி, அம்மாவுக்கு bag ஒன்று வாங்கிக் கொடு’ என்று கேட்பேன். அவனும், ஆதியிடம் சொல்லுவது போல, ‘வரும் போது வாங்கலாம்மா’ என்பானா…. அதைத்தான் இப்ப சொன்னான் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : நீ என்ன சின்னப் புள்ளயா…. ரிஷிகேஷில் வேறு என்ன பார்க்கலாம் என்று கேட்டறிந்து போயிருக்கலாமில்ல…. என்ன…, shopping போனயா….

மேகலா : நான், ‘மொழி தெரியாத இடத்தில், நீங்கள் இல்லாமல் நான் shopping போகவில்லை’ – என்று சொல்லி விட்டேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : பரவாயில்லை…. ஆனாலும், சில சமயங்களில், நீ ரொம்ப சின்னப்புள்ள மாதிரிதான் behave பண்ணுற….

மேகலா : ஹி…., ஹி…., நாளை நமக்கு ஒரு program-மும் இல்லை… நாம் ஊர் திரும்பும் நாளும் வந்து விட்டது…. இமயமலையும், கங்கையும் மறுபடியும் நமக்கு ‘தூரத்து உறவாக’ப் போகிறது – என்ற நினைப்போடும், கால் உளைச்சலாலும், அன்றைய தினத்து நினைவுகளையும், நீலகண்ட மகாதேவரின் தரிசனத்தையும் அசை போட்டுக் கொண்டே தூங்க முயற்சித்தேன் கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1