வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 17 (நிறைவுப் பகுதி)

மேகலா : ஆமாம் கிருஷ்ணா… சின்னதான shopping முடிந்தது… ஏற்கனவே pack-up பண்ணியிருந்ததால், room-க்கு வந்தவுடன், ஷீத்தல் அப்பா, கார்த்தி, ஆதி ஆகியோரை அழைத்துக் கொண்டு, சாப்பிடும் நேரம் இல்லாத ரெண்டுங்கெட்டான் நேரமாக இருந்ததால், இமயமலை, கங்கையை மட்டுமல்ல கிருஷ்ணா…, roti, தால், பன்னீர் டிக்கா, ஜீரா ரைஸ் என்று என் மனம் கவர்ந்த எல்லாவற்றையும் விட்டு விட்டு, டேராடூன் airport-க்கு கிளம்பினோம் கிருஷ்ணா… நானும் ராணிமாவும் இந்தப் பயணத்தில் அடிக்கடி சொன்ன வார்த்தை இதுதான் கிருஷ்ணா…. ‘நானெல்லாம் ஹரித்துவார், ரிஷிகேஷ் வருவேனென்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை… கடவுள் தான் நம்மை இங்கு வரவழைத்திருக்கிறார்’ என்று அப்பப்ப சொல்லிக் கொண்டே இருந்தோம்…

கிருஷ்ணர் : ஏன் அப்படிச் சொல்லுகிறாய்…. நீ செல்ல வேண்டும் என்று நினைத்ததால் தானே செல்ல முடிந்தது…..

மேகலா : என் வாழ்க்கையில், எத்தனையோ முறை, இங்கெல்லாம் நம்மால் போக முடியுமா, பார்க்க முடியுமா என்று ஏங்கியிருக்கிறேன். அதிலும், கேதார்நாத், அமர்நாத், பத்ரிநாத், கைலாயம் என்று பனிபடர்ந்த மலைகளையும், பனிலிங்கத்தையும், இமயமலைத் தொடர்களையும், அதைத் தொடர்ந்து ஓடும், தேவப்பிரயாக், அலக்நந்தா என்ற பெயர்களில் ஓடி வரும் கங்கையையும், நடந்து செல்லும் சிரமமான பாதைகளையும் social media-க்களில் பார்க்கும் போது, நமக்கெல்லாம் இங்கு செல்ல கொடுத்து வைக்கவில்லையே என்று ஏக்கமாக இருக்கும் கிருஷ்ணா… அதிலும், கைலாயத்தின் அடிவரைக்கும் சென்று, கைலாயத்தைத் தொட்டு நின்று படமெடுத்து காண்பிக்கும் போது, இறையனாரைத் தொட்டு நிற்கிறார்கள் என்று சிலிர்த்துப் போகும். இந்த video-க்களை காட்சியாகப் பார்ப்பதோடு, நமக்கெல்லாம் குடுப்பினை இல்லையென்று அதை அப்படியே மறந்து போகும் எனக்கு, இந்தப் பயணம் மறக்க முடியாத அனுபவம்… இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி வைத்தது, ‘யாத்ரா சேனலின்’ பஞ்ச கேதார்நாத் பயணம் தான்…. அதைப் பார்த்த போது தான், நடப்பதற்கு சிரமமான இந்த இடங்களுக்குப் போகாவிட்டால் என்ன…, ஹரித்துவார், ரிஷிகேஷாவது செல்ல மாட்டோமா என்ற ஏக்கத்தில் தான் ஹரியிடம் கேட்டேன். சொல்லப் போனால், அனத்தவே ஆரம்பித்து விட்டேன்… எங்கள் group admin-க்கு, எங்களைக் கூட்டிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்ததே, தெய்வச் செயலே…. நானும் இந்தப் பிரதேசங்களை, வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசிக்க வரம் கொடுத்த அந்த பரம் பொருளுக்கும், தன் மீது தவழும் காற்றையெல்லாம், என் மூச்சோடு கலந்து சுவாசிக்கச் செய்த இமயமலைக்கும், என் பாவங்களையெல்லாம் கழுவி, தன் நீர்க்கரங்களால், எங்கள் கரங்களைக் கை பிடித்து, நீராட்டி, கும்மாளமிட்டு மகிழ்வித்த கங்கையம்மாவுக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. இந்த மெய் சிலிர்த்த அனுபவங்களை அசை போட்டுக் கொண்டே ‘டேராடூன்’ விமான நிலையம் வந்து சேர்ந்தோம்…. அங்கு, தடை செய்யப்பட்ட கத்தரிக்கோலையும், தேங்காய் மூடியையும், security-யில் கொடுத்து விட்டு, பசிக்கு என்ன சாப்பிடுகிறோம் என்ற நினைவேயில்லாமல், ரிஷிகேஷ் நினைவுகளை மட்டும் மீண்டும், மீண்டும் rewind பண்ணி நினைத்துக் கொண்டே, சாப்பிட்டு முடித்து, விமானத்தில் ஏறி உட்கார்ந்து பெங்களூரு வந்து சேர்ந்தோம் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : வாழ்த்துக்கள் மேகலா…..

(நிறைவு பெற்றது)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2